இந்த உலகத்தில் காண்பவைகளை நாம் எப்படி விவரிப்பது? தீவிரவாத தாக்கல்கள், பாலியல் அடிமைத்தனம், இனவாதம், உலகில் இருக்கும் பசி?
நாம் அறியாமலே, இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கிறோம். ஆனால் உணர்ந்து அறிந்தும் இந்த கேள்விகளை மிகவும் சில நேரங்களில் மட்டுமே கேட்கிறோம். நம் வாழ்க்கை வாழுவதில் நாம் மிகவும் தீவிரமாக இருப்பதினால், வெகு சில நேரங்களில் மட்டும் நாம் நின்று “ஏன்?” என்று சிந்திக்கிறோம்.
ஆனால் ஏதோ ஒரு சம்பவம் நம்மை விழிக்க செய்கிறது. நமது பெற்றோர் விவாகரத்து செய்கின்றனர். நம் தெருவில் வாழும் ஒரு பெண் கடத்தப்படுகிறாள். நமது உறைவினருக்கு புற்று நோய் வருகிறது. இவை ஒரு சில நேரத்திற்கு நம்மை விழிக்க செய்கிறது. ஆனால் மீண்டும் நாம் அதை மறுத்துவிட்டு மற்ற காரியங்களில் மூழ்க நேரிடுகிறது. பின் ஒரு அபத்தம் நேரிடும்போது நாம் மீண்டும் விழிக்கிறோம். அப்போது நாம் இப்படி நினைக்கிறோம்: ஏதோ ஒன்று இங்கு சரியில்லை. ஏதோ ஒன்று மிகவும் தவறாக இருக்கிறதே. வாழ்க்கை என்பது இப்படி இருக்க வேண்டியதல்லவே!
ஆகையால், “ஏன்” தீமை நேரிடுகின்றது? “ஏன்” இந்த உலகம் ஒரு நல்ல இடமாக இல்லை?
இந்த “ஏன்” கேள்விக்கான பதிலை சத்திய வேதத்தில் பார்க்கலாம். ஆனால், இந்த பதிலை கேட்க அநேகர் விரும்ப மாட்டார்கள்: இந்த உலகம் இப்படி இருக்கின்றத்தின் காரணம் என்னவென்றால், ஒரு விதத்தில், நாமே இப்படிப்பட்ட உலகத்தை கேட்டு வாங்கினதினாலாகும்.
கேட்பதற்க்கு விசித்திரமாக உள்ளதல்லவா?
நம்மை அல்லாமல் இந்த உலகத்தை மாற்ற வேறே யாரால் முடியும்? எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் வேதனையில்லாத வாழ்கையை கொடுக்க எதினால் அல்லது யாரால் முடியும்?
தேவனால் முடியும். தேவன் அதை நிறைவேற்ற வல்லவர். ஆனால் அவர் அதை இப்போது செய்வதில்லை. ஆகையால் நாம் தேவனிடம் கோபம் கொள்ளுகிறோம். “தேவனால் ஒரே நேரத்தில் சர்வ வல்லவராகவும் நேசிப்பவராகவும் இருக்க முடியாதென்றும், அவர் அப்படி இருந்திருந்தால் இந்த உலகம் இந்த நிலையில் இருக்காதே!” என்று நாம் சொல்லுகிறோம்.
தேவன் இந்த விஷயத்தில் தமது நிலையை மாற்றுவார் என்ற நம்பிக்கையில் நாம் இப்படி சொல்லுகிறோம். அவருக்கு குற்ற உணர்வு கொடுப்பதின் மூலம் அவர் செய்யும் காரியங்களை மாற்றி செய்வார் என்று நாம் நம்புகிறோம்.
ஆனால் அவர் அந்த விஷயத்தில் சிறிதளவும் நகருவதில்லை? ஏன்?
தேவன் நகருவதில்லை—இந்த காரியங்களை அவர் இப்போது சரி செய்வதில்லை—ஏனெனில் அவர் நாம் அவரிடம் கேட்டதை தான் கொடுத்திருக்கிறார்: தேவன் இல்லாதவர்போலவும் அவர் அவசியம் இல்லை என்பது போல அவரை நடத்தும் இப்படிப்பட்ட உலகத்தையே நாம் கேட்டோம்.
ஆதாம் ஏவால் கதை ஞாபகம் உண்டா? “விலக்கபட்ட கனியை” அவர்கள் புசித்தார்கள். அந்த கனி தேவன் சொன்னதையும் தந்தவைகளையும் அசட்டை பன்னும் ஒரு செயலாகும். தேவன் இல்லாத ஒரு வாழ்கையை கைகொள்வதாகும். ஏனெனில் தேவன் இல்லாமல் தேவனை போல அவர்களால் மாற முடியும் என்று ஆதாமும் ஏவாலும் நம்பினார்கள். தேவனை விட விலைமிக்க ஒன்று இருக்கிறது என்றும் மற்றும் அவரோடு உள்ள தனிப்பட்ட உறவைவிட விலையேறப்பெற்றது ஒன்று இருக்கிறதென்ற கருத்தை அவர்கள் உட்கொண்டார்கள். அதன் நிமித்தம் இந்த உலக அமைப்பும்—அதன் குரைகளும்—அவர்களின் அந்த தீர்மானத்தின் நிமித்தம் உண்டானவைகள்.
அவர்களின் இந்த கதை நம் எல்லாருடைய கதையாகும், அப்படியல்லவா? சத்தமாக இல்லாவிட்டாலும் தங்கள் இதயத்திலாவது இப்படி சொல்லாதவர்கள் யாராவது இருப்பார்களா: தேவனே, இந்த காரியத்தை உம்மையல்லாமல் என்னால் செய்ய முடியும். இதை நான் தனியாக செய்கிறேன். ஆனால் இந்த சலுகைக்காக நன்றி.
தேவன் இல்லாமல் வாழ்கையை நடத்த நாம் எல்லாரும் முயற்சித்து இருக்கிறோம். ஏன் நாம் இப்படி செய்கிறோம்? அநேகமாக, தேவனை விட மிக விலையேரபெற்றதும் முக்கியமானதும் ஏதோ ஒன்று உண்டு என்று நாம் எல்லாரும் நினைபதால் ஆகும். வெவ்வேரு ஆட்கள் வெவ்வேறு விஷயத்தில் இப்படி நினைத்திருந்தாலும், நமது மனப்பான்மை இதுவாகும்: வாழ்கையில் முக்கியமானது தேவன் அல்ல. உன்மையில், அவர் இல்லாமல் நான் எல்லாவற்றையும் சீக்கிரமாக செய்வேன்.
இதற்க்கு தேவனின் பதில் என்ன?
அவர் அனுமதிக்கிறார். அநேகர் தங்களது அல்லது வேறொருவரின் தவறான முடிவுகளினால், அதாவது தேவனின் வழிகளை மீறுகின்ற தீர்மானங்களினால், வேதனைப்படுகிறார்கள்: உதாரணமாக கொலை, பாலியல் கொடுமை, பேராசை, பொய்/மோசடி, புறங்கூறுதல், வேசித்தனம், கடத்தல் போன்றவை. தேவனை தங்களது வாழ்கையில் இடம் கொடுக்க மறுத்த ஆட்கள்தான் இப்படிப்பட்ட காரியங்களை செய்கின்றனர். அவர்களுக்கு நலம் என்று தெரிகிறதை செய்து, தங்களையும் மற்றவர்களையும் வேதனைக்குட்படுத்துகிறார்கள்.
இவை எல்லாவற்றிலும் தேவ கண்ணோட்டம் என்ன? அவர் அற்பமானவர் அல்ல. உன்மையில், தேவன் கிருபையுள்ளவராக இருந்து நாம் அவரிடம் வர எதிர்பார்க்கிறவராக இருப்பதுவே உன்மை. அவரிடம் வரும்போது நமக்கு அவர் உன்மையான வாழ்கையை தர வாஞ்சிக்கிறார். இயேசு சொன்னார், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”1 ஆனால் அவரிடம் வர எல்லாரும் விரும்புவதில்லை. இதை பற்றி இயேசு இப்படி சொன்னார் : “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.”2 பின்னும் அவர் தம்மோடிருக்கும் நமது உறவை பற்றி சொல்லுகிறார்: மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.”3
ஆனால் வாழ்க்கை நியாயமாக இல்லாதிருப்பதை பற்றி என்ன சொல்லுவது? மற்ற ஒருவரின் செயலால் நாம் வாழ்கையில் தீமையான சூழ்நிலைகள் உண்டாகுகிறதை பற்றி என்ன சொல்லுவது? நாம் பாதிக்கப்படும்போது, மற்றவர்களால் தீமை நேரிடும்போது அதை சகித்த இயேசுவை கவனிப்பது அவசியமாகும். நீங்கள் அனுபவிக்கும் எல்லாவற்றையும் தேவனுக்கு நன்கு புரியும்.
நாம் வாழ்கையில் நேரிடுகிறதொன்றும் இயேசு நமக்காக சகித்ததை விட மிகவும் வேதனையுள்ளது அல்ல: நன்பர்களால் கைவிடப்பட்டார், அவரி விசுவாசிகாதவர்களால் பரியாசம் பண்ணப்பட்டார், அடிக்கப்பட்டார், சிலுவையில் அரையபடுவதற்க்கு முன்னே கொடுமைப்படுத்தப்பட்டார், சிலுவையில் அரையப்பட்டார், வெட்கத்திற்குறிய பகிரங்கமான காட்சியாக்கப்பட்டார், சிறிது சிறிதாக மூச்சு திணறி மறித்தார். அவர் நம்மை சிருஷ்டித்தவர், ஆனால் இதை செய்ய மனுக்குலத்திற்க்கு தம்மை விட்டுக்கொடுத்தார். ஏனெனில் வேதத்தை நிறைவேற்றி நம்மை பாவத்தினின்று விடுவிக்கவே அவர் அப்படியானார். “இயேசு எருசலேமுக்குப்போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து: இதோ, எருசலேமுக்குப்போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.”4
உங்களுக்கு ஏதோ ஒரு கெட்டது நடக்கப்போகிறதென்று அறிகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இயேவுக்கு உங்கள் உணர்வும் மற்றும் மனதளவில் உள்ள வியாாகுலத்தை புரிந்துகொள்ள முடியும். அவரை கைது செய்ய இருக்கின்ற அந்த இரவில் அவர் தமது சில நண்பர்களை அழைத்துக்கொண்டு ஜெபிக்க சென்றார்: “பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி; சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.”5 இயேசு தமது நன்பர்களுக்கு அவரின் வேதனையை பகிர்ந்துகொண்டிருந்த போதும், அவர்களால் அந்த வேதனையின் ஆழத்தை புரிந்துகொள்ள முடியவில்லை, மற்றும் ஜெபித்த பிறகு இயேசு திரும்பினபோது அவர்கள் நித்திரை செய்வதை பார்த்தார். தனிமையாக வேதனை மற்றும் கடுமையான வியாகுலத்தை கடந்து செல்வது எப்படி இருக்கும் என்று இயேசுவுக்கு புரியும்.
யோவான் தனது சுவிசேஷத்தில் பகிர்ந்துகொள்வது இதுவே: “அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.”6 “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.” “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”7
உலகில் வேதனையும் மற்றும் அதிக துன்பங்கள் இருப்பது உண்மை. சில காரியங்கள் மற்றவர்களின் சுயமான, கசப்பான நடைமுறைகளினால் உண்டாகுகிறது. சிலவற்றின் காரணத்தை நாம் இந்த வாழ்கையில் விவரிக்க முடியாது. ஆனால், தேவன் தம்மை தாமே நமக்கென்று தருகிறார். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.”8
பயப்படவும் கலங்கவும் நமக்கு அநேக காரணங்கள் இருந்தாலும், தேவன் நமக்கு அவரது சமாதானத்தை அளிக்கிறார். இந்த சமாதானம் நமக்கு முன் இருக்கும் பிரச்சனையை விட பெரிதாகும். அவர்தான் நம் ஆண்டவர், நம் சிருஷ்ட்டிகர். அவர் எப்போதும் இருப்பவர். இந்த உலகத்தை தமது சத்துவத்தால் படைத்தவர்.
அவர் இவ்வளவு வல்லமையுள்ளவராக இருந்தாலும், நமது சிறிய, முக்கியமற்ற விவரங்களை அறிவது மட்டும் அல்லாமல், நம்மை மிகவும் நெருங்கின விதத்தில் அறிந்துமிருக்கிரார். நாம் நமது வாழ்கையை அவரை நம்பி, அவரை சார்ந்து, அவரிடம் அர்ப்பனிக்கும்போது, நமக்கு நெருக்கங்கள் வரும் நேரத்திலும் நம்மை பத்திரமாக காத்துக்கொள்வார். “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.”9 நம்மை மிகவும் அச்சமுருத்தக்கூடிய மரணத்தின் ஊடாகவும் அவர் கடந்து சென்று அதை மேற்கொண்டார். ஆகையால், கஷ்டமான சூழ்நிலைகள் நமக்கு இந்த வாழ்கையில் வந்தாலும் அதை கடந்து செல்ல உதவி செய்வது மட்டுமல்லாமல் நாம் அவரை விசுவாசிக்கும்போது நித்திய ஜீவனுக்குள் நம்மை கொண்டு சேர்ப்பார்.
இந்த வாழ்கையில் நாம் தேவனோடு சேர்ந்து அல்லது தேவன் இல்லாமலும் வாழ முடியும். இயேசு இப்படி ஜெபித்தார்: “நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.”10
“வாழ்க்கை ஏன் கடினமாக இருக்கிறது?” என்று நீங்களே உங்களுக்கு கேள்வி கேட்கலாம்? தேவன் இல்லாமல், பகை, பாலியல் கொடுமை, கொலை இவற்றை செய்ய மனுகுலம் துனிகிறது, இயேசு சொன்னார், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.”11 தேவனோடு தனிப்பட்ட உறவை துவங்குவது எப்படி என்று அறிய “தேவனை தனிப்பட்ட விதத்தில் அறிவது” என்ற கட்டுரையை பார்க்கவும்.
► | கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி? |
► | எனக்கு ஒருக் கேள்வி உண்டு... |
(1) மத்தேயு11:28 (2) மத்தேயு23:37 (3) யோவான்8:12 (4) மத்தேயு20:17-19 (5) மத்தேயு26:37-39 (6) யோவான்1:10-12 (7) யோவான்3:17,16 (8) யோவான்14:27 (9) யோவான்16:33 (10) யோவான்17:25,26 (11) யோவான்10:10