ஆரம்பத்தை பற்றி எப்பொழுதாவது நீங்கள் நினைத்ததுண்டா? அதை பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?இங்கு முதலாவதாக தோன்றினது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? நேரம் துவங்கும்போது, முதலாவதாக இங்கு இருந்தது என்னவென்று தெரியுமா? இவை பற்றி சிந்திக்க எப்போதாவது உங்கள் மூலையை சிரமம் படுத்தியதுண்டா?
ஒரு நிமிடம் இருங்கள், என்று சொல்லுகிறீர்கள்: ஆரம்பத்தில் ஒன்றும் இல்லாமலிருக்க சாத்தியமுண்டா? பல வருடங்களுக்கு முன், ஒன்றுமில்லாமல் இருக்க சத்தியமுண்டா? இது நாம் சிந்திக்க வேண்டிய ஓர் தத்துவம். நாம் இதை முதலாவதாக ஒப்புமை மூலமாக பார்க்கலாம்.
உங்களுக்கு ஒரு பெரிய அறை இருப்பதென்று வைத்துக்கொள்வோம். அது முற்றுமாக அடைக்கப்பட்டதும் ஒரு கால்பந்து மைதானத்தை போல பெரிதானதாக வைத்துக்கொள்வோம். அந்த அறை நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது, மற்றும் அதற்க்கு கதவுகளோ, ஜன்னல்களோ இல்லை, மற்றும் அதன் சுவர்களில் துவாரங்களும் இல்லை.
அந்த அறைக்குள்…ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லை. ஒரு துகள் கூட இல்லை. காற்று இல்லை. தூசி இல்லை. வெளிச்சம் இல்லை. அது மிக இருளாக இருக்கும் ஒரு அடைக்கப்பட்ட அறை. பிறகு என்ன நடக்கிறது?
சரி, அந்த அறையில் ஒன்றை—ஏதாவது ஒன்றை—கொண்டுபோவது உங்கள் குறிக்கோளாக இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். ஆனால் விதிகள் என்னவென்றால், அந்த அறைக்குள் வெளியே இருக்கும் ஒன்றையும் கொண்டு செல்ல முடியாது. இப்போது என்ன செய்வீர்கள்?
சரி, அந்த அறைக்குள் ஒரு தீப்பொறியை உண்டாக்க முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறீர்கள். பிறகு அந்த அறைக்கு, சில நிமிடமாவது, வெளிச்சம் இருக்கும். அது "ஏதோ ஒன்று" என்ற தகுதி பெரும். ஆம், ஆனால் நீங்கள் அறையின் வெளியே இருக்கிறீர்கள். அதனால், நீங்கள் அறைக்குள் போக அனுமதி இல்லை.
ஆனால், நீங்கள் சொல்லுகிறீர்கள், நான் ஸ்டார் ட்ரெக் படத்தில் இருக்கிறது போல, ஒன்றை கற்பனை பொருட்பயர்வு செய்தால் எப்படி? அதுவும் அனுமதிக்கப்படாது, ஏனெனில் நீங்கள் அறைக்கு வெளியே இருக்கும் பொருளை உபயோகிக்க வேண்டியதாகும்.
திரும்பவும் இங்கே ஓர் சிக்கலுண்டு: நீங்கள் உள்ளே இருக்கும் ஒன்றை வைத்துதான் வேறொன்றை அறைக்குள் கொண்டு செல்ல முடியும். ஆனால், இங்கே, அறைக்குள் இருப்பது ஒன்றும் இல்லை.
சரி, கொஞ்சம் நேரம் கொடுத்தால் ஏதாவது துகள் தோன்றலாம் என்று நீங்கள் சொல்ல கூடும்.
இந்த தத்துவதில் மூன்று சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, நேரத்தால் தானாகவே ஒன்றும் செய்ய முடியாது. சில காரியங்கள் நேரம் போக போக நடக்கும், ஆனால் நேரத்தால் எதையும் நடபிக்க முடியாது. உதாரணமாக, பிஸ்கெட்டுகளை சுடுகிறதற்கும் நீங்கள் 15 நிமிடங்கள் காத்திருக்கலாம்; ஆனால் அந்த 15 நிமிடங்கள் பிஸ்கெட்களை சுடுகிறதில்லை, அடுப்பில் இருக்கும் வெப்பம் அதை சுடவைக்கும். அதை நீங்கள் அடுப்பின் அருகில் 15 நிமிடங்கள் வைத்தால், அது சுடப்போவது இல்லை.
நமது ஒப்புமையில், ஒரு அடைக்கப்பட்ட அறை இருக்கிறது மற்றும் அதில் ஒன்றும் இல்லை. 15 நிமிடங்கள் காத்திருப்பத்தின் நிமித்தம், தானாக ஒரு சூழ்நிலை மாறப்போவது இல்லை. சரி பல வருடங்கள் காத்திருந்தால் எப்படி? என்று நீங்கள் கேட்க்கலாம். அநேக 15 நிமிடங்கள் சேர்ந்ததுவே அந்த பல வருடங்கள்.அடுப்பின் அருகே பிஸ்கெட்டுகளை வைத்துவிட்டு, நீங்கள் பல வருடங்கள் காத்திருந்தால், அந்த பிஸ்கெட்டுகள் வேகுமா?
இரண்டாவது சிக்கல் இதுவே: ஏன் அந்த வெறுமையான அறையில் ஒன்றும் தானாக “தோன்ற” கூடாது? அதற்கு, அது ஏன் வந்தது என்ற காரணம் தேவைப்படுமே.ஆனால் அந்த அறையில் ஒன்றுமே இல்லை. பிறகு இந்த வழக்கை தடுப்பது எது? ஒன்றை தோற்றமலிக்க உதவும் ஒன்றுமே அந்த அறைக்குள் இல்லை (எனினும் அந்த காரணம் அந்த அறைக்குள் இருந்து தான் வரவேண்டும்).
சரி, நீங்கள் சொல்லுகிறீர்கள், ஒன்றின் சிறுப்பகுதியை பற்றி என்ன? அந்த சின்ன காரியம் அந்த அறையில் செல்ல வாய்ப்புகள் உண்டு, பெரிதான ஒன்றிற்கு, உதாரணத்திற்கு கால்பந்து, அந்த வாய்ப்பு இல்லாதிருந்தாலும்.
இது மூன்றாவதான சிக்கலை வெளிப்படுத்துகிறது: அது அளவாகும். நேரத்தை போலவே அளவும் அளக்க முடியாததொன்று. அது ஒரு காரியத்தை மற்ற காரியத்தோடு ஒப்பிடத்தக்கது. உங்களிடம் மூன்று பந்துகள் இருக்கிறதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு பந்தும் வெவ்வேறு அளவாகும். ஒன்று பத்து அடி அகலம் உள்ளது, ஒன்று ஐந்து அடி, ஒன்று சாதாரண அளவாகும். எது அறைக்குள் பிரவேசிக்க முடியும்?
சாதாரண அளவான பந்தா? இல்லை! இவை எல்லாவற்றுக்கும் ஒரே வாய்ப்புகள் உண்டு. அளவு ஒரு விஷயம் இல்லை. அது ஒரு பிரச்சனையே இல்லை. சிக்கல் என்னவென்றால், நமது அடைக்கப்பட்ட, வெருமயான அறையில் ஏதோ ஒரு அளவான ஏதாவது பேஸ்பால் வர முடியுமா என்பதே.
எவ்வளவு நேரம் ஆனாலும் ஒரு சிறு பேஸ்பால் கூட அந்த அறைக்குள் அப்படியே தோன்றமுடியாது என்று நீங்கள் எண்ணினால், ஒரு அணுவுக்கும் அது தான் பொருந்தும் என முடிவு செய்யலாம். அளவு ஒரு பொருட்டல்ல. ஒரு பெரிய பொருளான குளிர் சாதன பெட்டியை ஒன்றுமில்லாமல் உண்டாக்க முடியாதது போலவே, ஒரு சிறு பொருளை கூட ஒன்றுமில்லாமல் உருவாக்க முடியாது.
நமது ஒப்புமையை கொஞ்சம் நீடித்து பார்ப்போமே. நமது பெரிய, இருட்டான அறையிலுள்ள மதில்களை நீக்கிவிடலாம். மற்றும் அந்த அறையை எல்லா திசைகளிலும் எல்லைகள் இல்லாமல் விஸ்த்தாரமாகும். இப்போது அந்த அறைக்கு வெளியே ஒன்றும் இல்லை, ஏனெனில் அந்த அறை மட்டுமே இருக்கிறது. அவ்வளவுதான்.
இங்கு ஒரு கேள்வி எழும்புகிறது: முதல்முதலாகவே, அதாவது பல ஆண்டுகளுக்கு முன்னமே, “ஒன்றும் இல்லாதிருந்தால்,” இப்பொழுதும் “ஒன்றும் இல்லாமலிருக்க” சாத்தியம் உண்டல்லவா?
ஆம். ஏதோ ஒன்று, அது எவ்வளவு சிறிதான ஒன்றாக இருந்தாலும் சரி, “ஒன்றும் இல்லாததில்” இருந்து வரமுடியாது. அது ஒன்றுமில்லாததாக தான் இருக்கும்.
இது என்ன சொல்லுகிறது? “ஒன்றுமில்லாதது” என்று எப்போதும் இருந்ததே இல்லை. ஏன்? ஏனெனில், “ஒன்றுமே இல்லாமலிருந்தால்,” இப்போதும் “ஒன்றும் இல்லாமல்” தான் இருக்கும்.
“ஒன்றும் இல்லாதது” என்பது எப்போதாவது இருந்ததேயாகில், ஒன்றும் உண்டாகாமல் இருக்கும்.
மற்றும், “ஒன்றும் இல்லாதது” எப்போதாவது இருந்திருந்தால், இப்போதும் “ஒன்றும் இல்லாமல்” தான் இருந்திருக்கும்.
ஆனால், ஏதோவொன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. உண்மையில், அநேக காரியங்கள் வாழ்கின்றன. உதாரனமாக, நீங்கள் வாழுகின்ற ஒன்று, நீங்கள் மிக முக்கியமான ஒன்று. ஆகையால், ஒருகாலும் “ஒன்றும் இல்லாமல்” இருந்திருக்க முடியாது என்பதற்கு நீங்களே ஒரு ஆதாரம்.
இப்போதும், “ஒன்றும் இல்லாமல்” இருந்திருக்க முடியாததென்றால், “ஏதோவொன்று” ஒரு காலத்தில் வாழ்ந்திருந்திருக்கும் என்பதுவே உண்மை. அது என்ன?
அது ஒரு பொருளா அல்லது அநேக பொருட்களா? அது ஒரு அணுவா? ஒரு பகுதியா? ஒரு மூலக்கூறா? ஒரு மாறுதலுக்கு உட்பட்ட பேஸ்பாலா? ஒரு குளிர் சாதன பெட்டியா? அல்லது சில பிஸ்கெட்டுகளா?
இதன் தொடர்ச்சிக்காக, “ஏதோ ஒன்று” என்ற கட்டுரைக்கு செல்லுங்கள்.
► | கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி? |
► | எனக்கு ஒருக் கேள்வி உண்டு... |