-மெர்லின் ஆடம்சன்
நாம் எல்லோரும் ஜெயமுள்ள வாழ்க்கையையே வாழ விரும்புகிறோம் மற்றும் அதுவே சரியானதாகவும் நினைக்கிறோம். உலகத்திலுள்ள முக்கிய மதங்கள் இதைக் குறித்து என்ன போதிக்கின்றன? இதனில் போதிக்கப்படுபவைகள் ஏதேனும் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான போதனைகளையும் வழிநடத்துதளையும் தருவனவாக இருக்கிறதா?
இங்கு நாம் உலகின் முக்கிய மதங்களான இந்து மதம், புதிய யுகம், புத்த மதம், இஸ்லாமிய மார்க்கம் மற்றும் கிறிஸ்தவ மார்க்கத்தைக் கூறித்துப் பார்க்கலாம். இந்த மதங்களின் தேவனைக் குறித்த போதனை, ஒரு நபர் இந்த மதங்கள் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய நன்மைகள் என்ன மற்றும் இந்த மதங்களின் விசுவாசம் ஆகியவைகளைக் குறித்த சுருக்கமான விளக்கத்தை இங்குக் காணலாம். முடிவில் இயேசுவின் போதனை மற்ற மார்க்கத்தாரின் போதனையை விட எப்படி மாறுபட்டது என்று காணலாம்.
இந்த ஒவ்வொரு மதங்களுக்குள்ள வித்தியாசமான விசுவாசத்தைப் பின்பற்றக் கூடிய பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு மதங்களுடைய முக்கியக் கோட்பாடுகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. யூத மார்க்கம் போன்ற மற்ற முக்கிய மார்க்கங்களைக் குறித்துச் சுருக்கமாக இங்கு விளக்கப்பட்டுள்ளது.
அநேக இந்துக்கள் ஒரே தேவனாகிய பிரம்மனை மற்ற ஆண் மற்றும் பெண் தெய்வங்கள் மூலம் வழிபடுகின்றனர். இந்த ஆண் மற்றும் பெண் தெய்வங்கள் சிலைகள், கோவில்கள், ஆறுகள், விளங்குகள் மற்றும் பலவற்றின் மூலம் அவதாரம் எடுத்தன.
இந்துக்கள் தங்களுடைய தற்போதைய வாழ்க்கையானது கடந்த காலக் கருமத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்று விசுவாசிக்கின்றனர். எனவே இந்து மதமானது தற்கால வாழ்க்கையில் ஏற்படும் உபத்திரவம் மற்றும் தீங்குகளுக்கு ஏற்ற பதிலை தரக்கூடியதாக இருக்கிறது. ஒரு நபருடைய கடந்த கால வாழ்க்கை தீமையானதாக இருந்திருக்குமேயானல் அவர்களின் நிகழ்கால வாழ்க்கை வேதனையும் பாடும் நிறைந்ததாகவே இருக்கும். ஒருவர் தான் முற்பிறவியில் செய்த தீய செயல்களின் விளைவாகவோ அவருக்கு வேதனை, வியாதி, வருமை அல்லது பெருவெள்ளம் போன்ற இயற்க்கை சீற்றம் ஆகிய இவைகளெல்லாம் நிகழ்கிறது.
முன் செய்த கருமத்திலிருந்து விடுதலை பெறுதல் மற்றும் தொடர்ந்து மறுபிறவியின் மூலம் அதைப் போக்குவதே இந்து மதத்தின் நோக்கமாக இருக்கிறது. ஆத்துமா மறுபிறவியின் சுழற்சியின் மூலம் ஒரு நாள் விடுதலையாக்கப்பட்டு அது மோட்சத்தை அடையும்.
எப்படி ஆவிக்குரிய முதிர்ச்சியை அடைய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளும் சுதந்திரத்தை ஒவ்வொரு நபருக்கும் இந்து மதம் கொடுத்திருக்கிறது. கருமத்தின் சூழற்சியின் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மூன்று சாத்தியமான வழிகள் இருக்கிறது: 1. ஏதேனும் ஆண் அல்லது பெண் தெய்வங்களுக்கு அன்போடு தொண்டு செய்வதில், 2. பிரம்மாவை (ஒருமை) தியானிப்பதன் மூலம் தற்போதைய சூழல் மாயை மற்றும் மாயையான சுயத்தை வெறுத்து உண்மையான பிரம்மாவை அறியும் ஞானத்தில் வளர்தல். 3. பலவிதமான மதச்சார்பான சடங்காச்சாரத்திற்கு அற்பணிக்கப்பட்டு வாழும் வாழ்க்கை.
இந்த யுகம் தனிமனிதனுடைய வல்லமை மற்றும் இறைத்தன்மையின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது உயர்நிலையில் தனித்திருக்கும் தேவனைக் கூறிப்பிடாமல் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உயர்வான மனசாட்சியே தேவன் என்று கூறுகின்றது. இதைப் பின்பற்றுபவர்கள் தங்களையே இப் பிரபஞ்சம் மற்றும் உலகத்தின் தெய்வமாகப் பார்க்கின்றனர்.
அதிகமாக நற்கூறுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்பவர்கள், இந்தப் புது யுகமானது பண்மையான ஆவிக்குரிய பாரம்பரியத்தினுடைய கூட்டே ஆகும். இந்து மதத்தைப் போலவே பல ஆண் மற்றும் பெண் தெய்வங்கள் வழிபடும் மார்க்கமாக இருக்கிறது. இந்தப் பூமியானது ஆவிக்குரியவைகளின் மூலமாகக் கருதப்படுகிறது மற்றும் அதற்கு அதனுடைய அறிவுத்திறன், உணர்வு மற்றும் இறைத்தன்மை இருக்கிறது. சுயமே எல்லாவற்றையும் விட மேலானது. சுயமே காரணகர்த்தா, கட்டுப்படுத்துபவர், மற்றும் எல்லாவற்றிற்க்கும் தேவன். ஒரு நபருடைய தீர்மானத்திற்குப் புறம்பே வேறோரு உண்மையும் இல்லை.
புதிய யுகம் பரவலாக இறைநிலை இணைப்பு பண்பு (மிஸ்டிசிசம்), ஆன்மிகம், மனோதத்துவம், மற்றும் சீர்பட்ட மனசாட்சியில் மற்றும் ஒருவர் தன்னுடைய தெய்வீக தன்மையில் வளர மனம்சார்ந்த உத்திகளான மூச்சுவிடும் பயிற்சி, பாடுதல், தேடுதல், மற்றும் தியானித்தல் ஆகியவைகளைப் போதிக்கிறது.
ஒரு நபருக்கு ஏதேனும் தவறு நடக்குமேயானால் (தோள்விகள், துக்கம், கோபம், சுயநலம், காயம்) அது மாயையாகக் கருதப்படுகிறது. வாழ்க்கையின் மீது தங்களுக்கு முழு ஆளுமைத்தன்மையும் இருக்கிறது, தங்கள் வாழ்க்கையில் எதுவும் தவறானது, எதிர்மறையானது அல்லது வேதனை தரக்கூடியது இல்லை என்றே அவர்களாகவே நம்புகின்றனர். இறுதியாக இலக்கு எதுவும் இல்லை மற்றும் இவ் உலகம் மாயை என்கிற அளவுக்கு அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருகின்றனர். அவர்கள் தேவனாக மாறி அவர்களுடைய நிஜத்தை உருவாக்குகின்றனர்.
புத்த மதத்தினர் எந்தத் தெய்வம் மற்றும் தெய்வங்களை வழிபடுவதில்லை. பிறர் புத்த மதத்தினர் புத்தரை வழிபடுகின்றனர் என்று நினைக்கின்றனர். புத்தர் (சித்தார்ந்த கவுதம்) தன்னைத் தேவன் என்று சொன்னதில்லை, ஆனால் புத்த மதத்தினர் அடைந்து கொள்ள வேண்டும் என நினைக்கிற ஆவிக்குரிய ஞானமாகிய ஜுவன் மற்றும் மரணம் ஆகியவற்றின் தொடர்ச்சியான சுழற்சியிலிருந்து விடுதலையைப் பெற்றவராகப் புத்தர் இருக்கிறார் என்பது புத்த மதத்தினருடைய விசுவாசம். அநேக புத்த மதத்தினர் அவர்களுக்கு எண்ணிக்கையில்;லாத மறுபிறப்பு உண்டு என்பதையும் அதனில் துன்பம் உண்டு என்பதையும் விசுவாசிக்கின்றனர். இந்த மறுபிறப்பிலிருந்து விடுபடுவதையே புத்த மதத்தினர் நாடுகின்றனர். ஒரு நபருடைய இச்சை, பகை, மாயை ஆகியவைகளே இந்த மறுபிறப்புக்குக் காரணம் என்பது புத்த மதத்தினருடைய விசுவாசம். எனவே புத்த மதத்தினருடைய இலக்கு என்னவென்றால் இருதயத்தைச் சுத்திகரித்தல் மற்றும் ஆசைகளைத் துறந்தல் மற்றும் சுயத்தை வெறுத்தல் ஆகும்.
புத்த மதத்தினர் அநேக மதக்கோட்பாடுகள் மற்றும் அற்பணிக்கப்பட்ட தியானத்தைப் பின்பற்றுகின்றனர் புத்த மதத்தினருடைய தியானம் என்பது தெய்வத்தை நினைத்துப் பிராத்திப்பது அல்ல இது சுய கட்டுப்பட்டை உருவாக்குவதே ஆகும். தியானத்தைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒரு நபர் நிர்வாணம் என்கிறதான முற்றும் துறந்த நிலையை அடைய முடியும் அதாவது ஆசையை முற்றும் துறக்கமுடியம்.
புத்த மதமும் எல்லா முக்கிய மதங்களிலும் காணப்படும் ஒழுக்கம், மதிப்பு மற்றும் மனிதன் வாழ்வதற்கான வழிகள் ஆகியவைகளைப் போதிக்கின்றது.
இஸ்லாமியர்கள் ஒரே சர்வவல்லமையுள்ள தேவன் உண்டு அவரே “அல்ஹா”, அவர் மனிதர்களை விட மேன்மையான எல்லையற்றவர் மற்றும் எல்லைகளுக்கு அப்பார்பட்டவர் என்று விசுவாசிக்கின்றனர். அல்லா இந்த உலகத்தைப் படைத்தவராகவும் அவரே எல்லா நன்மை தீமைகளுக்கான மூலமாகவும் இருக்கிறவராகக் கருதப்படுகிறார். எல்லாமே அல்லாவின் சித்தப்படி தான் நடக்கிறது. அவர் வல்லமையுள்ளவர் மற்றும் கண்டிப்பான நீயாயாதிபதி. அவரைப் பின்பற்றுகிறவர்களுடைய நற்பணி மற்றும் மதப் பக்தியின் அடிப்படையில் அவர் கருணையுள்ளவராக இருக்கிறார். அல்லாவோடு அவரைப் பின்பற்றுகிறவர்களுடைய உறவு வெறும் சேவகன் என்பதே.
இஸ்லாமியர்கள் அநேக தீர்க்கதரிசிகளைக் கனம்பண்ணினாலும், முஹமதுவே கடைசித் தீர்க்கதரிசியாகவும் அவருடைய வார்த்தை மற்றும் வாழ்க்கை முறையே ஒருநபரின் அதிகாரமாகக் கருதுகின்றனர். இஸ்லாமியனாக இருப்பதற்க்கு ஒருவர் ஐந்து மதக் கடமைகளைக் கைகொள்ள வேண்டும்: 1. அல்லா மற்றும் முஹமதுவை குறித்த இறைநம்பிக்கையைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும் 2. ஒரு நாளுக்கு ஐந்து நேரம் தொழுகை செய்ய வேண்டும். 3. ஏழைகளுக்குத் தர்மம் செய்தல் 4. எதுவும் உண்ணாமலும், குடிக்காமலும், உடலுறவு கொள்ளாமலும் ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் நோன்பு இருக்க வேண்டும். 5. வாழ்நாளில் ஒரு நாளாவது ஹஜ் என்பதான புனித யாத்திரையாக மக்கமாவுக்குச் செல்ல வேண்டும். இந்தக் கடமைகளில் உண்மையுள்ளவர்களாக இருந்ததன் அடிப்படையிலேயே ஒரு இஸ்லாமியன் பரலோகத்திற்குச் செல்லமுடியும் என்பது அவர்களது விசுவாசம். இதனைச் சரியாக நிறைவேற்றாதவர்கள் நரகத்திலே தங்கள் நித்தியத்தைக் கழிக்க வேண்டும்.
இஸ்லாம் மார்கமானது அநேகருடைய மதத்தைக் குறித்த எதிர்பார்ப்புக்கு ஒத்துபோகிறதாக இருக்கிறது. ஒரே ஒரு சர்வவல்லமையுள்ள தேவன் அவரை நல்ல செயல்கள் மற்றும் ஒழுங்கான மதச் சடங்காச்சாரம் மூலம் ஆராதிக்க முடியும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. ஒரு நபருடைய மதப் பக்தியின் அடிப்படையிலேயே அவருடைய மரணத்திற்குப் பின்பு அவர்களுக்கு வெகுமதி கிடைக்குமா அல்லது தண்டனை கிடைக்குமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. அல்லாவுக்காகத் தன்னுடைய வாழ்க்கையைக் கொடுப்பதே அவர்களைப் பரலோகத்தில் சேர்க்கும் என்பது இஸ்லாமியர்கள் விசுவாசிக்கின்றனர்.
தன்னை வெளிப்படுத்தின தேவனை விசுவாசிப்பது மற்றும் அவரை இந்த வாழ்க்கையில் தனிபட்ட முறையில் அறிந்து கொள்ள முடியும் என்பதைக் கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கின்றனர். இயேசுவோடு கூட மதசடங்காச்சாரம் அல்லது நற்கிரியைகளைச் செய்வது அல்ல ஆனால் தேவனுடைய ஜக்கியத்தில் சந்தோஷப்படுதல் மற்றும் அவரை அறிகிற அறிவில் வளறுதல் ஆகியவைகளே ஒரு நபருடைய நோக்கமாக இருக்கிறது.
இயேசுவை விசுவாசிப்பது என்பது அவருடைய போதனையை விசுவாசிப்பது மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள் எப்படிச் சந்தோஷம் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்பதே. இந்த உலக வாழ்க்கையிலே இயேசு தன்னைத் தேவனிடத்தில் நடத்தும் தீர்க்கதரிசியாக அல்லது ஞானத்தைப் போதிக்கிறவராகவும் அடையாளப்படுத்தவில்லை. அவர் அற்புதங்களைச் செய்தார், ஜனங்களுடைய பாவத்தை மன்னித்தார் மற்றும் அவரை விசுவாசிப்பவர்களுக்கு நித்திய ஜுவன் உண்டு என்று சொன்னார். “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்.”1 என்று இயேசு சொன்னார்.
மனிதனுக்குத் தேவன் கொடுத்த செய்தியே வேதாகமம் என்று கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கின்றனர். இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கை மற்றும் அவர் செய்த அற்புதங்களுக்கு வரலாற்று ஆதாரத்தை மேலும் கொடுக்கும் படியாக வேதாகமம் தேனுடைய ஆள்தத்துவம், அவருடைய அன்பு மற்றும் சத்தியத்தை மற்றும் அவரோடு ஜக்கியம் வைத்துக்கொள்வது எப்படி என்பதையும் வெளிப்படுத்துகிறது.
கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கை எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் அவர்கள் ஞானம் மற்றும் வல்லமையுள்ள மற்றும் தங்களை நேசிக்கிற தேவனிடத்தில் நம்பிக்கையோடு திரும்பலாம் என்று வேதாகமம் போதிக்கிறது. தேவன் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார் மற்றும் அவரைக் கனம்பண்ணுவதன் மூலம் வாழ்க்கை அர்த்தம் பெறும் என்பது அவர்களுடைய விசுவாசம்.
இந்த முக்கிய மதங்களையும் அவைகளின் தெய்வங்களையும் பற்றிப் பார்க்கும் போது இவர்களுக்கிடையே பெரிய வித்தியாசம் இருப்பது தெரிகிறது:
எல்லா மதத்தினரும் ஒரே தேவனை வழிபடுகின்றனறா? ஆம் என்று வைத்துக்கொள்வோம். புது யுகம் எல்லொரும் மேலோங்கிய மனசாட்சிக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்று போதிக்கிறது, ஆனால் இஸ்லாம் தன்னுடைய ஒரே தேவன் என்கிற விசுவாசத்தை விட வேண்டியதிருக்கும், இந்து மதம் தன்னுடைய பல தெய்வ வழிபாட்டை விடவேண்டியதிருக்கும், மற்றும் புத்த மதம் தேவன் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும்.
உலகிலுள்ள இந்த முக்கிய மதங்கள் (இந்து மதம், புது யுகம், புத்த மார்க்கம், இஸ்லாம், இயேசுகிறிஸ்துவை பின்பற்றுதல்) ஒவ்வொன்றும் தனிதன்மையானவைகள். தனிப்பட்ட, நேசிக்கிற மற்றும் இந்த வாழ்க்கையில் அறிந்து கொள்ளக்கூடிய தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை இவைகள் உறுதிபடுத்துகின்றன. இயேசு போதிக்கும் தேவன் நம்மை ஜக்கியத்திற்கு அழைப்பவராகவும், நம்மோடு எப்பொழுதும் இருக்கக்கூடிய தேற்றரவாலனாகவும், ஆலோசகராகவும் மற்றும் நம்மை நேசிக்கிற வல்லமையுள்ள தேவனாகவும் இருக்கிறார்.
இந்து மதத்தின் படி மனிதன் தன்னுடைய கருமத்தை தாங்களே போக்க வேண்டும். புது யுகத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய தெய்வீக தன்மைக்காகப் பிரயாசப்படவேண்டும். புத்தமதத்தின் படி ஒரு தனிமனிதனுடைய ஆசையிலிருந்து விடுபடுவதே ஆகும். இஸ்லாம் மார்க்கத்தில் பரலோகத்தை அடையவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் மதச் சம்பிரதாயங்களைக் கடைபிடிக்க வேண்டும். இயேசுவின் போதனையின் படி, ஆள்தத்துவமுள்ள ஒரு தேவனோடு நாம் ஜக்கியப்பட முடியும் மற்றும் அந்த ஜக்கியம் நம்மை அடுத்த வாழ்க்கைக்குக் கொண்டு செல்லும்.
ஆம் என்பதே இதற்குப் பதில், தேவனோடு இணைக்கப்படுவதோடு மட்டும் அல்ல. நம்மை முழுமையாக ஏற்றுக்கொண்டதோடு நம்மை நேசிக்கவும் செய்கிறார் என்பதையும் அறிந்துக்கொள்ள முடியும்.
உலகத்திலுள்ள பல மார்க்கங்கள் தங்களுடைய சுயமாக ஆவிக்குரிய முதிர்ச்சி அடைவதை முயலுகின்றனர்.
உதாரணமாகப் புத்தர் தன்னிடத்தில் பாவம் இல்லை என்று சொல்லவில்லை. முஹம்மதுவும் அவருக்குப் பாவமன்னிப்பு வேண்டும் என்று ஒத்துக்கொள்கிறார். “எப்படி ஞானியாக இருந்தாலும், வரங்களைப் பெற்றவர்களாக இருந்தாலும், பிரசிதிபெற்ற தீர்க்கதரிசியாக, குருவாக, ஆசிரியராக இருந்தாலும், அவர்கள் நம்மைப் போலவே குறையுள்ளவர்கள் என்பது அவர்களுக்கும் தெரியும்.”2
இயேசு கிறிஸ்து, எந்தத் தனிப்பட்ட பாவம் செய்ததாகவும் சொல்லப்படவில்லை. இயேசு ஜனங்களுடைய பாவத்தை மன்னித்தார் மற்றும் நம்முடைய பாவங்களையும் அவர் மன்னிக்க விரும்புகிறார். நாம் அனைவரும் நம்முடைய தவறுகளைக் குறித்து நன்கு அறிந்திருக்கிறோம், மற்றவர்கள் நம்மைக் குறைவாக நினைக்கத் தூண்டும் வாழ்க்கையின் சில பகுதிகள், நம்மிடத்தில் நாமே விரும்பாத சில பகுதிகள் அதாவது அது கைவிட முடியாத பழக்கமாகவோ, இருக்கலாம், மூர்க்கமான மனநிலையாகவோ, அசுத்தமாகவோ அல்லது வெறுப்பான கருத்துக்களாக இருக்கலாம். தேவன் நம்மை நேசிக்கிறார் ஆனால் பாவத்தை வெறுக்கிறார். பாவத்தின் விளைவு தேவனை அறிகிற அறிவிலிருந்து விளகுதல் ஆகும் என்று அவர் சொல்லியிருக்கிறார். நாம் மன்னிக்கப்படுவதற்கான மற்றும் அவரை அறிவதற்கான வழியைத் தேவன் நமக்குத் தந்திருக்கிறார். தேவனுடைய குமாரனாகிய இயேசு, மனித உருவில் வந்த தேவன், அவர் சிலுவையில் பாடுபட்டு, நம்முடைய ஸ்தானத்தில் விருப்பத்தோடு நமக்காக மரித்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார். “அவர் தம்முடைய ஜுவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்.”3
இயேசு நமக்காக மரித்ததினாலே தேவன் நமக்கு முழுமையான பாவமன்னிப்பை வழங்கியிருக்கிறார். அதாவது நம்முடைய கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலப் பாவங்களை எல்லாம் அவர் மன்னித்திருக்கிறார். இயேசு அவைகள் எல்லாவற்றிற்க்கும் கிரயம் செலுத்திவிட்டார். இந்த உலகத்தைப் படைத்தார் நம்மை நேசிக்கிறார் மற்றும் நம்மோடு ஜக்கிய பட விரும்புகிறார். “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.”4
தேவன் நம்முடைய பாவம் மற்றும் குற்றவுணர்விலிருந்து முழுமையான விடுதலையை இயேசுவின் மூலம் தந்திருக்கிறார். அவர் எதிர்காலத்தில் சிறந்த நபராக மாற மங்கிய விசுவாசத்தோடு இருக்கும் படி நம்மைத் திக்கற்றவர்களாக விடவில்லை.
தேவனை நாம் அறிந்துக்கொள்வதற்கான வழியைத் தேவன் இயேசுவின் மூலம் ஏற்படுத்தித் தேவன் நம்மைக் கிட்டிசேர்ந்தார். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுக்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவைரத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”5
தேவனோடு ஐக்கியத்தோடு வாழும்படியாகவே நாம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். “இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானேஇ என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான்இ என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.”6 இயேசு அவருடைய போதனையை மட்டும்; பின்பற்ற வேண்டும் என்று ஜனங்களை அழைக்காமல் தன்னையும் பின்பற்றும் படி அழைத்தார். அவர் சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”7 சத்தியத்தைப் பேசுகிறோம் என்று சொல்கிற போதகரை பார்க்கிலும், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் இயேசு மேலானவராக இருக்கிறார் என்பது அவர் தன்னை யார் என்று அறிக்கை செய்ததின் மூலம் உலப்படுகிறது.
இயேசு தன்னைத் தேவனுக்குச் சமமானவராக அடையாளப்படுத்தினார் அதற்கு ஏற்ற ஆதாரங்களையும் கொடுத்தார். அவர் சிலுவையில் அறையப்படுவார் மற்றும் மரித்து மூன்று நாட்களுக்குப் பின் உயிரோடு வருவார் என்று இயேசு சொன்னார். அவர் மீண்டும் எதிர்காலத்தில் அவதாரம் எடுப்பேன் என்று சொல்லவில்லை. தன் கல்லரையில் அடக்கம்பண்ணப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின்பு தான் சிலுவையில் அறையப்பட்டதைப் பார்த்தவர்களுக்குத் தன்னை ஜீவனுள்ளவராகக் காட்சிகொடுத்தார். மூன்றாம் நாள் அவருடைய கல்லரை வெறுமையாகக் காணப்பட்டது மற்றும் அநேகர் அவரை உயிரோடு பார்த்ததாகச் சாட்சி கொடுத்தனர். இப்பொழுது அவர் நமக்கு நீத்தியஜீவனைத் தருகிறார்.
அநேக மார்க்கங்கள் மனிதர்களுடைய ஆன்மீக முயற்சிகளைக் கவனத்தில் கொண்டுள்ளன. இயேசுவில் இது தேவனுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள இரு வழி பரிமாற்றம். அவரோடு போக நம்மை அiழைக்கிறார். “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும். கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.”9 நீங்கள் தேவனோடு தொடர்புகொள்ள முடியும், அவர் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில்கொடுப்பார், பெரிய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நமக்குத் தருவார், நடக்க வேண்டிய வழியைக் காட்டுவார், அவருடைய அன்பை வெளிப்படுத்துவார் மற்றும் உங்களுடைய வாழ்க்கையை மறுரூபமாக்குவார். “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” என்று இயேசு சொன்னார்.10 நம்முடைய வாழ்க்கை சீரானதான மாறும் பிரச்சனையே இருக்காது என்பது இதற்கு அர்த்தமல்ல. ஆனால் நம்முடைய வாழ்க்கையின் மத்தியில் தேவனோடு நாம் தொடர்பு கொள்ள முடியும் அவர் நம்முடைய வாழ்க்கையோடு இடைபடும் தேவனாகவும், அவருடைய அன்பில் உண்மையுள்ளவராகவும் இருக்கிறார்.
இது வாழ்க்கையை மேம்படுத்தும் எட்டு வழிமுறைகளோ அல்லது ஐந்து தூண்களோ அல்லது தியானமோ அல்லது நற்கிரியைகளோ அல்லது பத்துக் கட்டளைகள் போன்றவைகளுக்கு அற்பணிக்கும் முறையோ அல்ல. இவைகள் தெளிவானதாகவும், சரியாக விளக்கப்பட்டதும், எளிதில் பின்பற்றக் கூடியதாகவுமான ஆன்மீக வழிமுறைகள். ஆனால் பூரணத்திற்காக முயற்சித்தல் மற்றும் தேவனோடு இணைதல் என்பது இன்னும் தொலையில் இருக்கிறது.
நம்முடைய நம்பிக்கை பிரமாணங்களையும், சட்டங்களையும் பின்பற்றுவதில்லை, ஆனால் நாம் அவரையும் அவர் நமக்காகச் செய்த தியாகத்தையும் விசுவாசித்த படியினால் நம்மை ஏற்றுக்கொண்ட இரட்சகரை அறிந்துக்கொள்வதிலிருக்கிறது. நம்முடைய நற்கிரியையின் மூலம் அல்லது பக்தி வைராக்கியத்தின் மூலம் பரலோகத்தில் நமக்குரிய இடத்தை நாம் பெற்றுக்கொள்வதில்லை. இயேசு கிறிஸ்துவோடு நம்முடைய ஐக்கியத்தை நாம் ஆரம்பிக்கும் போது பரலோகம் நமக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் வெகுமதியாக இருக்கிறது.
முழுமையான மன்னிப்பை பெற்று தேவன் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை அறிய உங்களுக்கு விருப்பமா?
இப்பொழுதே நீங்கள் தேவனோடு ஐக்கியத்தைத் தொடங்க முடியும். இது தேவனிடத்தில் நம்முடைய பாவத்திற்கு மன்னிப்பு கோட்பது மற்றும் நம்முடைய வாழ்க்கையில் அவர் நுழைய அவருக்கு இடம்கொடுத்தல். “இதோ, வாசற்படியில் நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவை திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.” என்று இயேசு சொன்னார்.11 உன்னைச் சீருஷ்டித்த மற்றும் உன்னை நேசிக்கிற தேவனிடத்தில் ஐக்கியப்பட நீ விரும்புகிறாயா? இது உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையாக இருக்குமேயானால் இதை நீங்கள் இப்பொழுதே செய்யலாம்: “தேவனே என்னை மன்னியும் என்னுடைய இருதயத்திலே இன்றே வாரும். என்னுடைய பாவத்திற்காக நீர் மரித்தீரே அதற்கு நன்றி இயேசுவே. நீர் சொன்னது போலவே என்னுடைய வாழ்க்கையில் வந்ததற்காக நன்றி.
“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோஇ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படிஇ அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.”12 என்று வேதாகமம் சொல்கிறது. நீங்கள் உண்மையிலேயே தேவன் உங்களுடைய வாழ்வில் வர வரவேற்பீர்களா ஆனால் நீங்கள் தேவனோடு தனிப்பட்ட ஐக்கியத்தை வைத்துக்கொள்ள முடியும். இது தேவனைச் சந்தித்தல் மற்றும் அவர் அவரை, அவர் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை நீங்கள் அறிந்து கொள்ள உங்களுக்கு உதவ விரும்புகிறார் மற்றும் நீங்கள் எந்த விதமான தீர்மானங்கள் எடுக்கவேண்டியது இருந்தாலும் அவர் ஞானத்தைக் கொடுத்து உங்களை நடத்துவார். தேவனுடன் ஐக்கியப்படுவது பற்றி நீங்கள் மேலும் அறிந்துக்கொள்ள யோவான் என்கிற வேதாகம புத்தகம் உதவியாக இருக்கும். நீங்கள் இயேசுவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டதை குறித்துப் பிறரிடம் சொல்ல விரும்பலாம்.
உலக மார்க்கங்களில் மனிதன் போதனையோடு, தத்துவங்களோடு, வழிகளோடு, சடங்காச்சாரத்தோடு தன்னுடைய ஐக்கியத்தை வைத்திருகிறான். இயேசுவின் மூலம் மனிதன் நேசிக்கிற மற்றும் வல்லமையுள்ள தேவனோடு ஐக்கியப்பட முடியும். நீங்கள் அவரோடு பேச முடியும் அவர் நீங்கள் இப்பொழுது உங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டிய வழியைக் காட்டுவார். அவர் ஏதோ வழியை, தத்துவங்களை, அல்லது மதத்தைப் பின்பற்ற உன்னை வழிநடத்துகிறவர் அல்ல. அவர் அவரை அறிந்துக்கொள்ள, அவருடைய சந்தோஷத்தை அனுபவிக்க மற்றும் சவால் நிறைந்த உலகத்திலே அவருடைய அன்பிலே நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கும் படி நம்மை அழைக்கிறார். “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.”13
► | நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)... |
► | நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள் |
► | எனக்கு ஒருக் கேள்வி உண்டு... |
(1) யோவான் 8:12 (2) Erwin W. Lutzer, Christ Among Other Gods (Chicago:Moody Press, 1994), p.63 (3) 1 யோவான் 3:16 (4) 1 யோவான் 4:9 (5) யோவான் 3:16 (6) யோவான் 6:35 (7) யோவான் 14:6 (8) Lutzer,p. 106 (9) சங்கீதம் 145:18 (10) யோவான் 10:10 (11) வெளிப்பாடு 3:20 (12) யோவான் 1:12 (13) 1 யோவான் 3:1