வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

நிலையற்ற உலகத்தில் மன அமைதியான வாழ்க்கை

உன்னுடைய எதிர்காலம் எப்படி இருந்தாலும், நீ இதை அறிகிற போது உனக்கு அமைதியான மனமும் நம்பிக்கையும் இருக்கும்.

இந்த உலகத்திலும் நம்முடைய வாழ்க்கையிலும் என்ன நடந்தாலும் சரி, நிலையாய் இருப்பதற்கு ஏதேனும் இடம் இருக்கிறதா? வாழ்க்கையை மற்றும் உலகத்தின் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், நாம் நம்பிக்கையோடு எதிர்காலத்தை முன்நோக்கி பார்க்க முடியுமா? இன்றைய நாட்களில் அநேக ஜனங்கள் தேவனுடைய மதிப்பை தங்களுடைய நிரந்தரம் என்று பார்க்கின்றனர். நம்மைச் சுற்றியிருக்கிற உலகம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் தேவன் மாறாதவர். அவர் நிறந்தரமானவர் மற்றும் நம்பத்தகுந்தவர். என்னைத் தவிரத் தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே ஒருவனையும் அறியேன். நான் கர்த்தர் நான் மாறாதவர்”1 என்று அவர் கேட்கிறார். தேவன் எப்பொழுதும் இருக்கிறார். அவர் என்றும் இருக்கிறார். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.2 மன அமைதியை நமக்கு அவர் தருவதன் மூலம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை நமக்குக் கொடுப்பதன் மூலம் தேவன் தன்னை நமக்கு வெளிப்படுத்த முடியும்.

அமைதியான மனநிலை சாத்தியமா?

சன்போட் க்ரைட், ஹேதர் சொல்கிறார்: தேவனோடு உண்மையான ஐக்கியம் வைத்துக்கொள்வது என்பது மகத்தான மற்றும் அழகான அன்றாட உண்மையாக உள்ளது. உலகத்தில் எங்குத் தேடியும் கிடைக்காத ‘உலகலாவிய தோழமைத்துவம்’ அதனில் இருக்கிறது. போதுமான அளவு தொடர்புகொள்ளும் போது தான் நான் ஆளமாக அறிந்து கொண்டு நேசித்தேன்.

ஸ்டீவ் சேவ்வியர், இரத்த போக்கு நோயாளி, இரத்தம் மாற்றம் செய்யும் போது எய்ட்ஸ் நோயை பெற்ற இவர் உறுதியை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார். ஸ்டீவ் முதலில் பெரும் விரக்தியில் இருந்தார். தேவனைத் தூசித்தார். பின்பு ஸ்டீவ் தேவனை அறிந்துகொண்டார். அதன் விளைவாக ஸ்டீவ் அநேக கல்லூரிகலுக்குச் சென்று தேவனை அறிவதன் மூலம் அவர் பெற்ற சமாதானத்தின் அனுபவத்தையும் அவர்கள் தேவனை எப்படி அறிந்துக்கொள்ள முடியும் என்பதையும் பகிர்ந்துகொள்கிறார். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.”3 என்று இயேசு சொன்னார்.

ஸ்டீவை போலவே அநேகர் தங்களுடைய பிரச்சனையின் மத்தியில் இது உலகத்தினுடைய முடிவு அல்ல மற்றும் இந்த உலக வாழ்கையே கடைசி வாழ்க்கை அல்ல என்பதை அறித்திருக்கிற படியினால் தங்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பிரச்சனையில்லை என்பதைக் கற்றுக்கொண்டிருக்கின்றனர்.

நரிக்குகைளின் தேவன்

உண்மையில் அநேகர் தேவனிடம் திரும்புவதற்குப் பிரச்சனை வரும் வரை காத்திருக்கின்றனர். இரண்டாம் உலகப்போரிலிருந்த இரணுவ மதகுரு நரிகளின் குகைகளில் நாத்திகர்கள் இல்லை (அபாயத்தின் மத்தியில் தேவன் இல்லை என்று ஒருவரும் சொல்வதில்லை) என்பதை விளக்கியிருக்கிறார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் போது ஒருவருக்கும் தேவன் தேவையில்லை. ஆனால் வாழ்கையில் மாற்றம் வரும்போது சூழ்நிலைகள் மாறும்போது நாம் ஆழ்குழியில் இருக்கிறோம் என்பதை உணர்கிறோம்.

கர்யன் தேவனிடத்திற்குக் கடந்து வந்த பாதையை இப்படி விளக்குகிறார்: “நான் ஒவ்வொரு ஞயிறும் தேவனுடைய ஆலயத்திற்குச் செல்வதால் நான் கிறிஸ்தவன் என்று நினைத்தேன் ஆனால் எனக்குத் தேவன் யார் என்று தெரியாது. மற்ற ஆண்டுகளைப் போலவே என்னுடைய கடைசி வருட படிப்பும் பள்ளியில் கடந்துசென்றது. அநேக நேரங்களில் குடித்துக் கொண்டும் யாராவது என்னைக் காதலிக்க மாட்டார்களா என்றும் சுற்றித்திரிந்தேன். என்னுடைய வாழ்க்கையில் கட்டுப்பாடு அற்றதாகவும் எனக்குளN;ள நான் சாவுகிறவனாகவும் இருந்தேன். கல்லூரியை விட்டு வெளியே சென்று வாழ்க்கையில் நம்பிக்கையற்றவனாக அழைந்து திரிந்த போது என்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தது எனக்குத் தெரியும். எனவே தேவனை என்னுடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்தேன். அவர் அவருடைய அன்பு, பாதுகாப்பு, மன்னிப்பு, ஒத்தாசை, அரவனைப்பு, ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை எனக்கு வெளிப்படுத்தினார் மற்றும் என்னுடைய வாழ்க்கையினுடைய நோக்கத்தையும் வெளிப்படுத்தினார். அவரே என்னுடைய பலன் அவர் இல்லையென்றால் இன்று நான் இங்கு இருந்திருக்க முடியாது.

எதிர் காலம் எப்படி இருக்கும் என்று யாருக்கு தெரியும்? நரியினுடைய குகையில் இருப்பதாக அநேகர் உணரலாம். வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருக்கலாம். நம்முடைய அமைதியான மனநிலை பெரிதாக அசைக்கப்படலாம். அப்படிப்பட்ட சூழலில் பிரச்சனைகள் அதிகமாகும் போது நாம் தேவனைத் தேடுகிறோம். தேவன் தொடர்ந்து நம்முடைய வாழ்க்கையில் இடைபட நிலைப்பதினால் பிரச்சனையில்லை. நான்இ நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. ...என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன்இ வேறொருவரும் இல்லை”4 என்று அவர் சொல்கிறார்.

ஆம், தேவனை நாம் ஊன்றுகோலாகக் கருதமுடியும் ஆனால் அவர் ஒருவர் மாத்திரமே உண்மையில் அப்படிக் கருதப்படத் தகுதியானவர்.

கண்ணுக்கு தெரியாத நரிக்குகைகள்.

சிலர் தங்களுடைய வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லாத போது கூடத் தேவனிடத்திற்குத் திரும்புகின்றனர். ஜான் இப்படியாகச் சொன்னார்: என்னுடைய கல்;லூரியின் கடைசி ஆண்டில் எதை எல்லாம் என்னால் பெற முடியும் என்று பிறர் சொன்னார்களோ அவைகளை எல்லாம் நான் பெற்றுக்கொண்டேன். அதாவது வளாக ஸ்தாபனத்தின் தலைமைத்துவம், நல்ல மதிப்பெண்களைப் பெறுதல், பெண்களுடன் வெளியே சுற்றுவது என எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டேன். எதை எல்லாம் நான் செய்ய வேண்டும் என்றும் அடையவேண்டும் என்றும் நினைத்தேனோ அதை எல்லாம் அடைந்தேன் ஆனால் எனக்குத் திருப்தியில்லை. எதையோ இழந்தது போன்ற எண்ணம் மற்றும் எங்கேயும் போக வழியில்லை. நான் இப்படி நினைக்கிறேன் என்று யாருக்கும் நிச்சயம் தெரியாது. நானும் வெளியே இதைக் காட்டிக்கொள்ளவில்லை.

வாழ்க்கையில் எல்லாக் காரியங்களும் சரியாய் இருக்கும் போதும், வாழ்க்கையில் நரிக்குகையில் இருப்பது போல இருக்கும். இதைப் பேக்கி இப்படியாகச் சொல்கிறார்: எத்தனை முறை உங்களுக்கு இந்த டிரஸ் கிடைத்தால், அந்தப் பையன் நம்முடைய காதலனாகக் கிடைத்தால் அல்லது இந்த இடத்திற்குப் போயிருந்தால் உங்களுடைய வாழ்க்யை சந்தோஷமாக இருக்கும் என நினைத்திருப்பீர்கள்? எத்தனை முறை அந்த டி-சர்ட்டை வாங்கினாலும், அந்தப் பையனுடன் ஊரை சுற்றினாலும், அந்த இடத்;திற்குப் போயிருந்தாலும் முதல் இருந்ததை விட மேலும் வெறுமையாகவே உணர்ந்திருப்பீர்கள்?

நாம் நரிக்குகையை உணர நமக்குத் தோல்விகளோ அல்லது துயரங்களோ வரத் தேவையில்லை. சுமாதானமின்மையே தேவன் நம்முடைய வாழ்க்கையில் இல்லை என்பதை உணரவைக்கும். தேவனை அறிந்து கொண்டதை பற்றிப் பேக்கி சொல்கிறார், நான் தேவனை அறியும் வரை என்னுடைய வாழ்க்கையில் அநேக போராட்டங்கள் மற்றும் மாற்றங்கள் காணப்பட்டன ஆனால் தேவனை அறிந்த பின் நான் செய்யும் எல்லாவற்றிலும் தேவன் என்னை நேசிக்கிறார் மற்றும் அவர் என்னோடு இருக்கிறார் என்பதை அறிந்த போது நான் எல்லாவற்றையும் புதிய கோணத்தில் செய்ய ஆரம்பித்தேன். நானும் தேவனும் இணைந்து செய்ய முடியாது என்று ஒன்றும் இல்லை என்பதை விசுவாசித்தேன். நான் மிகக் கடினமாகத் தேடின பூரணத்தை இப்பொழுது கண்டுக்கொண்டேன்.

தேவன் நம்முடைய வாழ்க்கையில் இடைபடுவாரேயானால் நாம் சமாதானத்தோடு இருக்கலாம். நாம் தேவனை அறியும் போது, வேதாகமத்தின் மூலம் அவருடைய சத்தத்தைக் கேட்கும் போது, நாம் அவரை அறிந்துக்கொள்வதினால் அவர் அமைதியான சிந்தையை நம்முடைய வாழ்க்கையில் தருகிறார். நம்முடைய வாழ்க்கையை அனுகூலமான நோக்கில் பார்க்கிறோம், அவருடைய உண்மைதுவத்தில் நம்பிக்கை மற்றும் நம்மை நாமே கவனித்துக்கொள்ளும் தகுதி; உண்டாகிறது. எதிர்காலம் எப்படி இருந்தாலும் பிரச்சனையில்லை, நம்மால் நம்முடைய நம்பிக்கையை நிலையான தேவன் மீது வைக்க முடியும். நாம் அவரிடம் திரும்பி அவரைத் தேடும் போது அவர் தான் யார் என்பதை நமக்கு நிரூபித்துக்காட்டுவார்.

உண்மையான மன அமைதி- கன்மலையின் மேல் கட்டடினவன்.

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஏதேனும் கட்டிக்கொட்டிருக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தாலும் சிரி இல்லாவிட்டாலும் சரி, எல்லா நபர்களும் ஏதேனும் ஒன்றின் மேல் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். நாம் எல்லோரும் ஏதேனும் ஒரு அடித்தளத்திலே நம்முடைய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் போட்டுக்கொண்டிருக்கிறோம். “நான் கடினமாக உழைத்தேன் என்றால் என்னுடைய வாழ்க்கையை வெற்றிகரமாக ஜீவிக்க முடியும்.” அல்லது வாழ்க்கை முறை--- நான் போதுமான அளவு சம்பாதித்தால் என்னுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.” அல்லது ஒருவேளை நேரமாக இருக்கலாம் - “எதிர்காலம் எல்லாவற்றையும் மாற்றப்போகிறது என்கிற தன்னைக் குறித்ததான எண்ணமாக இருக்கலாம்.

தேவன் அனைத்தையும் வேறுவிதமாகப் பார்க்கிறார். நம்முடைய நம்பிக்கையை மற்றும் விசுவாசத்தை நம்மீதோ அல்லது பிறர்மீதோ அல்லது இந்த உலகத்திலுள்ள எதன் மீதாவது வைத்தால் அது நிலையற்றது என்று தேவன் சொல்கிறார். இவைகளுக்குப் பதிலாக நாம் அவரை விசுவாசிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்துஇ பெருவெள்ளம் வந்துஇ காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.”5

பெரிய ஆபத்துக்களை நாம் சந்திக்கும் நேரங்களில் தேவன் நம்முடைய வாழ்க்கையில் இடைபடச் செய்வது ஞானமான காரியம். நம்முடைய சூழ்நிலை எப்படி இருந்தாலும் சரி நாம் ஒரு ஆசிர்வாதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே தேவனுடைய நோக்கமாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் நேர்மறையான தாக்கத்தைத் தேவன் வைத்துக்கொள்ள விரும்புகிறார். நாம் அவருக்கு அவருடைய வார்த்தைக்குப் பதிலளிக்கும் போது நாம் கன்மலையின் மேல் கட்டுகிறோம்.

உச்சகட்ட மன அமைதி

பெரிய மில்லினருடைய பிள்ளையாக இருப்பது அல்லது நல்ல மதிப்பெண்களைப் பெறுவதே தங்களுக்கு மிகுந்த பாதுகாப்பு என்று சிலர் நினைக்கின்றனர். தேவனோடு ஐக்கியப்படும் போது நாம் இவைகளை விட மிகுந்த பாதுகாப்பை பெற முடியும்.

தேவன் வல்லமையுள்ளவர். நம்மைப் போலல்ல, தேவனுக்கு நாளைக்கு, அடுத்த வாரம், அடுத்த வருடம் மற்றும் அடுத்தப் பத்து வருடத்திற்குப் பின் என்ன நடக்கும் என்பது தெரியும். முந்திப் நானே தேவன் எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்.”6 எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரியும். மேலும் உங்களுடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரியும் நீ அவரை உன்னுடைய வாழ்க்கையோடு இணைத்துக்கொள்ள நினைத்தால் அவர் எப்பொழுதும் உன்னோடு இருப்பார். தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்”7 என்று அவர் சொல்கிறார். ஆனால் நாம் அவரைப் பிரயாசப்பட்டுத் தேட வேண்டும். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்”8 என்று அவர் சொல்கிறார்.

தேவனை அறிந்தவர்கள் எந்தப் பிரச்சனையின் ஊடாய் கடந்து போவதில்லை என்பது இதற்கு அர்த்தம் அல்ல. பிரச்சனை எல்லோருக்கும் வரும். நம்முடைய தேசம் தீவிரவாதிகளின் தாக்குதலை அல்லது பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்குமேயானால், தேவனை அறிந்த ஜனங்களும் தேசத்தோடு இணைந்து துயரப்படவேண்டியது இருக்கும். ஆனாலும் அவர்களுக்குத் தேவ சமாதானத்தையும் பலனையும் தேவன் தருகிறார். இயேசுவை பின்பற்றுகிற ஒருவர் இப்படியாகச் சொல்கிறார்: “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.”9 நாம் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டும் என்று நம்முடைய நடைமுறை வாழ்க்கை நமக்குச் சொல்கிறது. தேவனோடு கூட நாம் இந்தப் பிரச்சனைகளைச் சந்திப்போமேயானால் வேறுபட்ட கோணத்தில் மற்றும் தேவனுடைய பலத்தோடு அவைகளை நாம் சந்திப்போம். எந்தப் பிரச்சனையினாலும் தேவனை ஜெயம் கொள்ள முடியாது. தேவன் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை விடப் பெரியவர் மற்றும் நாம் அந்தப் பிரச்சனைகளைச் சந்திக்கத் தனித்து விடப்படவில்லை.

தேவன் கருசனையுள்ளவர் தேவனுடைய பெரிய வல்லமை அவருடைய ஆளமான அன்போடு இணைந்து நம்முடைய வாழ்க்கையில் வெளிபடுகிறது. எதிக்காலமானது உலகம் பார்த்திராத சமாதானம் நிறைந்ததாக இருக்கலாம் அல்லது அதிகமான இன வெறுப்பு மற்றும் பயங்கரவாதம், அதிகமான விவாகரத்து ஆகியவைகளால் நிறைந்தவைகளாக இருக்கலாம். எதுவாயினும் தேவன் நம்மை நேசிப்பது போல யாரும் நேசிக்கப் போவதில்லை. தேவன் நம்மீது கருசனை செலுத்துவது போல யாரும் கருசனை செலுத்த போவதில்லை. கர்த்தர் நல்லவர்இ இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.”10 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”11 என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.”12

ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்”13 இந்த ஆறுதலின் வார்த்தையை இயேசு தன்னுடைய சீஷர்களோடு சொன்னார். நீ தேவனிடத்திற்குத் திரும்பினால் அவர் யாரும் உன் மீது வைத்திராத கருசனையை உன் மீது வைப்பார் மற்றும் அப்படிபட்ட கருசனையை உனக்கு யாராலும் கொடுக்கவும் முடியாது.

தேவன் மூலமாக மன அமைதியை பெறுதல்

எதிர்காலம் எப்படிப்பட்டது என்று நமக்குத் தெரியாது. அது துயரத்தை கொண்டுவருமே ஆனால் தேவன் நமக்காக இருக்கிறார். எதிர்காலம் எளிதாக இருக்கு என்றாலும் நம்முடைய உள்ளான வெறுமையைப் போக்க மற்றும் நம்முடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கத் தேவன் நமக்குத் தேவை.

எல்லாம் சரியாக இருக்கும் போதும் நடக்கும் போதும் முக்கியமானது எது? நாம் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்படாதிருப்பதே முக்கியம் ஆகும். நமக்குத் தேவனைத் தெரியுமா? தேவனுக்கு நம்மைத் தெரியுமா?அவரை நம்முடைய வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்தி விட்டோமா? அல்லது அனுமதித்திருக்கிறோமா? அவரை அறிந்ததன் மூலம் நம்முடைய கண்ணோட்டம் மாற்றப்பட்டிருக்கிறது மற்றும் நம்பிக்கையும் பெறுகியிருக்கிறது. அவருடைய பிரசனம் தேவைப்படும் படியாகவே அவர் நம்மைச் சிருஷ்டித்திருக்கிறார். அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை நாம் வாழ முயற்சிக்க முடியும் ஆனால் அது வீண்.

தேவனை நாம் தேட வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். அவரை அறிய வேண்டும் மற்றும் அவர் நம்முடைய வாழ்க்கையில் இடைபட அனுமதிக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். ஆனால் இதனில் பிரச்சனை இருக்கிறது: நாம் அவரை நம்முடைய வாழ்க்கையில் அனுமதிப்பதில்லை. எனவே வேதாகமம் இப்படியாகச் சொல்கிறது: நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்துஇ அவனவன் தன்தன் வழியிலே போனோம்.”14 நாம் எல்லோரும் நம்முடைய வாழ்க்கையைத் தேவனுடைய இடைபடுதல் இல்லாது வாழ முயற்சிக்கிறோம். இதைதான் வேதாகமம் “பாவம்” என்று சொல்கிறது.

ஹதர் பாவத்தைக் குறித்து இப்படியாகச் சொல்கிறாள்: சன்போர்ட்டுக்குள் நான் நுழைந்த போது நான் கிறிஸ்தவள் அல்ல. புரட்சியை ஏற்படுத்துவதற்காக இந்த உலகம் என்னுடைய பாதத்தின் அடியில் இருந்தது. நான் அரசியல் கூட்டங்களில் கலந்துக்கொண்டேன், இனவெறியை பற்றி வகுப்புகள் எடுத்தேன், சமூகச் சேவை மையத்தில் என்னை முழுவதும் மூழ்கடித்தேன். எனக்குள் உள்ள வல்லமை உலகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்பிக்கையோடு இருந்தேன். சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுத்தேன், தங்குமிட மற்றவர்கள் மத்தியில் முகாம் நடத்தினேன், மீதமான உணவை சேகரித்துப் பசியாய் இருப்பவர்களுக்குக் கொடுத்தேன். ஆனால் நான் அதிகமாக உலகத்தை மாற்ற பிரயாசப்படப் பிரயாசப்பட என்னுடைய வாழ்க்கையில் விரக்தியைதான் அடைந்தேன். நான் அதிகாரத்துவம், அக்கரையின்மை மற்றும் பாவத்தை எதிர்கொண்டேன். மனிதனுடைய சுபாவம் அடிப்படையில் பழுதுபார்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்க ஆரம்பித்தேன்.

மன அமைதி = தேவனோடு சமாதானமாக இருத்தல்

ஒரு பெரிய காரியத்தின் சிறிய மாற்றங்களான நேரங்களின் மாற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவைகள் ஒரு முக்கியமானதாக இருக்காது. ஏன்? மனிதனுடைய அடிப்படை பிரச்சனை நாம் தேவனிடத்திலிருந்து விலகி இருக்கிறோம். பெரிய பிரச்சனை உடல் சார்ந்தது அல்ல ஆனால் ஆவிக்குரியது. தேவன் இதை அறிந்திருக்கிறார் எனவே தான் அவரிடம் இருந்து நாம் பிரிந்திருப்பதைச் சரிசெய்யும் தீர்வை அவர் கொடுத்திருக்கிறார். அவரிடம் நாம் திரும்பி செல்வதற்கான வழியை இயேசுவின் மூலம் அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”15 என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்து நம்முடைய ஸ்தானத்தில் நம்முடைய பாவத்திற்காகச் சிலுவையில் (அன்றைய நாட்களில் கொலைசெய்யப் பயன்பட்டது) அறையப்பட்டார். அவர் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தார்.

அவருடைய கிருபாதாரப் பலியினாலே நாம் தேவனுடன் ஐக்கியப்படும் சிலாக்கியத்தைப் பெற்றோம். அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.”16

இது மிக எளிமையானது: தேவன் நம்மோடு கூட முழுமையான ஐக்கியம் வைத்துக்கொள்ள விரும்புகிறார். எனவே இந்த உறவை இயேசுவின் மூலம் ஏற்படுத்தினார். இப்பொழுது தேவனைத் தேடுவதும் அவரை நம்முடைய வாழ்க்கையில் வரவேற்பதும் நம்முடைய வேலை. அநேகர் இதை ஜெபத்தின் மூலம் செய்கின்றனர். தேவனோடு நேர்மையாகப் பேசுவதே ஜெபம் ஆகும். இப்பொழுது நீங்கள் இதைச் சொல்வதன் மூலம்; தேவனை அடைய முடியும்: தேவனே, நான் உம்மை அறிய விரும்புகிறேன். இதுவரை உம்மை என்னுடைய வாழ்க்கையில் நான் அனுமதிக்கவில்லை ஆனால் நான் அதிலிருந்து மாற விரும்புகிறேன். நான் உம்மிடத்திலிருந்து பிரிந்திருப்பதைச் சரி செய்ய நீர் கொடுத்திருக்கும் தீர்வை பெற விரும்புகிறேன். இயேசு என்னுடைய பாவங்களுக்காக மரித்தார் அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் மற்றும் உம்மோடு இணைக்கப்பட்டேன் என்பதை நம்புகிறேன். இன்று முதல் நீர் என்னுடைய வாழ்க்கையில் இடைபடவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தேவன் உங்களுடைய வாழ்க்கையில் வரும்படி உண்மையாகவே அழைத்தீர்களா? நீங்களும் அவரும் தான் அதை அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் அவரோடு ஐக்கியம் ஏற்படுத்தின படியினால் அவர் உங்கள் வாழ்க்கையை மேலான திருப்தியுள்ள வாழ்க்கையாக மாற்றுவார்.17 அவர் உன்னைத் தன்னுடைய வாசஸ்தலமாக மாற்ற விரும்புகிறார்.18 உனக்கு நித்திய ஜீவனைத் தரவும் விரும்புகிறார்.19

மலிஷா தேவனைக் குறித்து இப்படியாகச் சொல்கிறார்: நான் சிறுமியாக இருக்கும் போது என்னுடைய தாய் என் தகப்பனை விவாகரத்து செய்தாள். எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. என் அப்பா வீட்டிற்கு வரவே மாட்டார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். ஒரு நாள் என்னுடைய பாட்டியின் வீட்டிற்குச் சென்றிருக்கும் போது அவர்களிடம் என்னுடைய அப்பா என்னை வருத்தப்படுத்தி விட்டு ஏன் காணாமல் போனார் என்று எனக்குப் புரியவே இல்லை என்று சொன்னேன். அவர்கள் என்னைக் கட்டி அனைத்து உன்னை விட்டு விலகவே விலகாத ஒருவர் இருக்கிறார் அவர் தான் இயேசு என்று எனக்குச் சொன்னார்கள். அவர்கள் எபிரேயர் 13:5 மற்றும் சங்கீதம் 68:5 –லுள்ள வசனத்தை எனக்குக் குறிப்பிட்டு காட்டினார்கள். அவைகள், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை மற்றும் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனுமhக இருக்கிறார் என்று கேட்ட போது மிகவும் சந்தோஷப்பட்டேன். தேவன் என்னுடைய தகப்பனாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

உங்களைச் சுற்றிலும் என்ன நடந்தாலும் பிரச்சனையில்லை தேவன் எனக்காக இருக்கிறார் என்பதை அறிந்ததினால் நமக்கு மன அமைதி கிடைக்கிறது. எதிர்காலம் எப்படி இருந்தாலும் உங்களுக்கு நிலையான தேவன் உண்டு.

 நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)...
 நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள்
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

(1)ஏசாயா 44:8 மற்றும் மல்கியா 3:6 வேதாகமத்திலிருந்து (2) எபிரேயர் 13:8 (3) யோவான் 14:27 மற்றும் 16:33 (4) ஏசாயா 43:11 மற்றும் ஏசாயா 45:22 (5) மத்தேயு 7:24-27 (6)ஏசாயா 46:9-10 (7) சங்கீதம் 46:1 (8) ஏரேமியா 29:13 (9) 2 கொரிந்தியர் 4:8-9 (10) நாகும் 1:7 (11) 1பேதுரு 5:7 (12) சங்கீதம் 5:17-19 (13) மத்தேயு 10:29-31 (14) ஏசாயா 53:6ய (15) யோவான் 3:16 (16) யோவான் 1:12 (17) யோவான் 10:10 (18) யோவான் 14:23 (19) 1 யோவான் 5:11-13

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP