ஜோஷ் மெக்டோவெல்
சந்தோஷமாக இருக்க நான் எங்கினேன். இந்த முழு உலகத்திலும் மிக சந்தோஷமான மனிதனாக இருக்க ஆசைப்பட்டேன். நான் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ விரும்பினேன். நான் இந்த கீழ்க்காணும் கேள்விகளுக்கான பதில்களை தேடிக்கொண்டிருந்தேன்:
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நான் விடுதலையாய் இருக்கவும் எங்கினேன். நான் இந்த முழு உலகத்தில் சுதந்திரமாக இருக்கிறவர்களில் ஒருவனாக இருக்க விரும்பினேன். சுதந்திரம் என்னுடையது நான் வேண்டுவதை செய்வது மட்டும் அல்ல—எல்லாருக்கும் அதை செய்ய முடியும்.
என்னை பொருத்தவரையில், நான் செய்யவேண்டியததை செய்யும்படியான சக்தி உடையது தான் சுதந்திரமாகும். அநேகருக்கு தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரியும், ஆனால் அவர்களுக்கு அதை செய்யவேண்டிய சக்தி இல்லை. ஆகையால், நான் பதில்களை தேட ஆரம்பித்தேன்.
பெரும்பான்மையாக எல்லாரும் ஏதோ ஒரு மதத்திற்கு உட்பட்டிருந்ததாக தோன்றினது, ஆகையால் நானும் எனக்கு தெரிந்ததை செய்தேன்: சபைக்கு சென்றேன். நான் ஒரு தவறான சபைக்கு சென்றிருக்க கூடும், ஏனென்றால் அது என்னை இன்னும் மோசமாக உணர்ந்தேன். நான் காலையும் மதியமும், இரவும் சபைக்கு சென்றேன், ஆனால் அது எனக்கு உதவவில்லை. நான் மிகவும் நடைமுறை மனிதன்; ஏதோ ஒன்று எனக்கு வாய்க்கவில்லை என்றால், அதை விட்டு விடுவேன். ஆகையால், நான் மதத்தையும் விட்டுவிட்டேன்.
அந்தஸ்து தான் இதற்கான பதில் என்று நான் எண்ணினேன். ஒரு தலைவனாக இருப்பது, ஒரு காரணத்தை அங்கீகரிப்பது, என்னையே அதற்க்காக செலுத்துவது, மற்றும் ஒரு பிரபலமான மனிதனாவது நல்லது என்று எண்ணினேன். நான் படித்த பல்கலை கழகத்தில், மாணவர்களின் தலைவர்கள் பணத்தை கையாண்டு மற்ற மாணவர்களை அடிமைப்படுத்துவது வழக்கமானதாக இருந்தது. ஆகையால், நானும் முதல் வருடத்திலேயே வகுப்பு தலைவனாக நின்று வெற்றி பெற்றேன். எல்லாராலும் அறியப்படுவது, முடிவுகள் எடுப்பது, மற்றும் கல்லூரி பணத்தினால் எனக்கு பிடித்த பேச்சாலர்களை அழைப்பது—இவைகளினால் சந்தோஷமடைந்தேன். அது மிக நல்லதாக இருந்தது, ஆனால் அதுவும் ஒரு வழக்கம் போல மாறிவிட்டது. ஒவ்வொரு திங்கள் காலையும் (முந்தின நாள் நடந்த சம்பவங்களினால் தலைவலியோடு எழுந்திருப்பேன்) எழும்பும்போது இப்படி நினைப்பேன், “சரி, இன்னும் இந்த நாட்கள் இப்படியே போகும் என்று.” திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மிக சகிப்புடன் கழிப்பேன். மற்ற மூன்று நாட்கள் இரவில்—வெள்ளி, சனி, ஞாயிறு—மட்டுமே சந்தோஷமாக இருப்பேன். பின்பு மறுபடியும் கொடூர சுழற்சி துடங்கிவிடும்.
என்னை போல வாழ்கையின் அர்த்தத்தையும், சத்தியத்தையும், நோக்கத்தையும் தேடுகிறவர்கள் அமெரிக்காவின் பல்கலை கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வெகு சிலர் மட்டுமே.
அந்நேரங்களில் எட்டு மாணவர்களும் மற்றும் இரண்டு பேராசிரியர்களை கொண்ட ஒரு சிறு குழுவினரை நான் கண்டேன். ஏதோ ஒன்று அவர்கள் வாழ்க்கையில் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் நம்புவதை ஏன் நம்புகின்றார்கள் என்ற அறிவு அவர்களுக்குள் இருந்ததாக தோன்றினது. அவர்கள் எங்கு செல்லுகின்றனர் என்பதை அறிந்தவர்கள் போல இருந்தனர்.
அவர்கள் அன்பை பற்றி பேசுவது மட்டுமல்லாமல் அன்பினால் காரியங்களை செய்கிறவர்களாக இருந்தார்கள். பல்கலை கழக வாழ்க்கையின் சூழ்நிலைகள் அவர்களை பாதிக்காதது போல தோன்றினது. எல்லாரும் ஏதோ ஒரு கஷ்டத்தின் கீழ் சிக்கி இருப்பதை போல இருந்தாலும், இவர்களின் சமாதானமும் மன நிறைவும் சூழ்நிலைகளால் பாதிக்கப்படாதது போல இருந்தது. அவர்களுக்கு உடனடியாக மற்றும் தொடர்ச்சியாக சந்தோஷம் தரும் ஒரு ஊற்று அவர்களுக்குள் இருப்பதை போல தோன்றினர். அவர்கள் மிக சந்தோஷமாக இருந்தார்கள். எனக்கு இல்லாத ஒன்று அவர்களுக்கு இருந்தது.
சராசரி மாணவனை போல, என்னிடத்தில் இல்லாததை மற்றவர்கள் பெற்று இருக்கிறதை கண்டபோது, எனக்கும் அது வேண்டும் என்று எண்ணினேன். எனவே அவர்களோடு நட்பை உண்டுபன்ன முடிவெடுத்தேன். இந்த முடிவு எடுத்த இரண்டு வாரங்கள் கழிந்ததும், அந்த குழுவினரில் இருந்த ஆறு மாணவர்களோடும் இரண்டு பேராசிரியர் கூட நானும் இணைந்து ஒரு மேஜையை சுற்றி உட்கார்ந்திருந்தோம். அவர்கள் தேவனை பற்றி பேச துடங்கினார்கள்.
ஒரு நாள் நான் அந்த குழுவில் இருந்த அழகான மானவியினிமித்தம் (கிறிஸ்தவர்கள் அழகில்லாதவர்கள் என்ற ஒரு நினைவு எனக்கு இருந்தது) நாற்க்காளியில் சாய்ந்து கொண்டு (ஏனெனில் நான் இதில் ஆர்வமுற்று இருக்கிறேன் என்று மற்றவர்கள் அறிய கூடாது என்பதினால்) இப்படி கேட்டேன்: “உங்கள் வாழ்க்கை எப்படி மாறினது என்று சொல்லுங்கள்? நீங்கள் இங்கு இருக்கிற மற்றவர்களை போல இருப்பதின் காரணம் என்ன?”
அந்த வாலிப ஸ்திரீக்கு அதிகமான திடநம்பிக்கை இருந்தது. அவள் என் கண்களை நேராக பாத்து: “இயேசு கிறிஸ்து” என்றாள். இயேசு ஒரு தீர்வாக இருப்பார் என பல்கலை கழகத்தில் கேட்பேன் என்று நான் எப்போதும் எண்னினதில்லை.
நான் சொன்னேன், “ஓ, இந்த குப்பயை நீங்கள் எனக்கு தரவேண்டாம். மதத்தினால் அலுத்துப்போனேன். சபையினால் அலுத்துப்போனேன். சத்திய வேதத்தினால் அலுத்துப்போனேன். மதத்தை குறித்த இந்த குப்பயை எனக்கு தராதீர்கள்” என்றேன்.
அவள் உடனடியாக, “ஹே, நான் மதத்தை பற்றி சொல்லவே இல்லை, நான் இயேசு கிறிஸ்து என்று சொன்னேன்." எனக்கு அறியாத ஒன்றை அவள் எனக்கு சுட்டி காட்டினாள்: கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல. மனிதன் தேவனை அடைய நற்கிரியைகளை செய்ய முயற்சிப்பது மதம்; ஆனால் தேவன் மனிதர்களிடம் இயேசு கிறிஸ்து மூலமாக வந்து அவர்களோடு உறவுக்கொள்ள விரும்புவதுதான் கிறிஸ்தவம்.
உலகத்தில் வேறெந்த இடத்திலும் இல்லாத அளவிற்க்கு கிறிஸ்துவை பற்றி தவறான கருத்துடையவர்கள் பல்கலை கழகங்களில் இருக்கிறார்கள். ஒரு துணை ஆசிரியர் ஒரு கருத்தரங்கில் இப்படி சொன்னார்: “ஒருவன் சபைக்குள் போனதும் கிறிஸ்தவனாக மாறிவிடுவான்.” நான் சொன்னேன், “ஒரு கேரேஜில் நுழைந்ததும் நீ வாகனமாக மாறிடமுடியுமா? என்று. கிறிஸ்துவை உன்மையாக விசுவாசிக்கிறவன் மட்டுமே கிறிஸ்தவன் என்று ஒருவர் எனக்கு சொல்லி கொடுத்திருந்தார்.
நான் கிறிஸ்தவத்தை பின்பற்ற விரும்பும்போது, இயேவின் வாழ்க்கையை அறிவு சார்ந்த அளவில் பரிசோதிக்கும்படி என் புதிய நண்பர்கள் எனக்கு சவால் செய்தனர். புத்தர், மொஹமத், கன்ப்யுஸியஸ், இவர்கள் யாரும் நான் தேவன் என்று கூறவே இல்லை; ஆனால் இயேசு தான் தேவன் என்று கூறினார். இயேசு தேவனா என்று சோதித்து பார் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். இயேசு கிறிஸ்து தேவன். அவர் மனித ரூபம் எடுத்து, சிலுவையில் மனுக்குல பாவத்திற்காக மறித்து, அடக்கம்பன்னபட்டு, மூன்றாம் நாளில் எழுந்தார் என்றும் அவர் ஜனங்களின் வாழ்க்கையை இன்றும் மாற்ற வல்லமையுல்லவர் என்றும் எனக்கு சொன்னார்கள்.
இது ஒரு பொய் என்று நான் நினைத்தேன். உன்மையில், கிறிஸ்தவர்கள் முட்டாள்கள் என்று எண்ணினேன். நான் அப்படிப்பட்ட சிலரை பார்த்தும் இருக்கிறேன். ஒரு கிறிஸ்தவன் பள்ளி அறையில் பேச காத்திருப்பேன். அவனோ அவளோ பேசினால் அவர்களை கேள்விகளை கேட்டு கேட்டு ஒன்றுமில்லாமல் செய்துவிடுவேன். பேராசிரியரும் பேசமுடியாத விதத்தில் ஆக்கிவிடுவேன். கிறிஸ்தவனுக்கு ஒரே ஒரு மூளை உயிரணு இருந்தாலும் அது தனிமையினாலே செத்துவிடும் என்று கற்பனை செய்வேன். இதை விட வேறொன்றும் எனக்கு தெரியவில்லை.
ஆனால் இவர்கள் என்னை மீண்டும் மீண்டும் சவால் செய்தனர். முடிவில், அவர்கள் சவாலை ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்வது பொய் என்பதை நிரூபிக்க அகந்தையில் அப்படி செய்தேன். ஏனென்றால், அவர்களிடம் உண்மை இல்லை என்று நினைத்திருந்தேன். ஒருவர் சீர்தூக்கி பார்க்க அவர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை என்று எண்ணினேன்.
அநேக மாதங்கள் கிறிஸ்துவை பற்றி படித்த பிறகு, தம்மை குறித்து அவரே சொன்ன காரியங்கள் உண்மையென்ற தீர்வுக்கு வந்தேன். இதை அறிந்தது ஒரு பிரச்சனையை உன்டாக்கினது. இதெல்லாம் உண்மை என்று என் மனம் சொன்னது ஆனால் எனது சுயவிருப்பம் என்னை வேறொரு திசைக்கு இழுக்க தொடங்கினது.
கிறிஸ்தவனாக மாறுவதினால் என் தற்பெருமை நொருக்கப்படுவதை நான் கண்டுகொண்டேன். இயேசு கிறிஸ்துவை நம்பும்படி எனக்கு நேரடி சவால் செய்தார். அவர் சொன்னது இதுவே: “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளி 3:20). இயேசு தண்ணீர் மேல் நடந்தாரா அல்லது தண்ணீரை திராட்ச ரசமாக மாற்றினாரா இல்லையா என்பதை பற்றி எனக்கு அக்கறை இல்லை. என்னை சுற்றிலும் அநேகர் இருந்து விவாதிப்பதை விரும்பவில்லை. என் நல்ல நேரத்தை அப்படி வீனடிக்க விரும்பவில்லை. இப்போது என் மனம் கிறிஸ்தவம் உண்மை என்று சொன்னது ஆனால் என் சுய சித்தம் தூரம் ஓடுகின்றது.
அந்த ஆர்வமான கிறிஸ்தவர்களோடு இருக்கும்போது, என் மனப்போராட்டம் தொடங்கும். நீங்கள் வேதனையாக இருக்கும்போது உங்களை சுற்றிலும் சந்தோஷமானவர்கள் இருந்தால் அவர்கள் சந்தோஷம் உங்களை இன்னும் துயர்மிகுந்தவர்களாக மாற்றும் அனுபவம் உங்களுக்கு உண்டா? அவர்கள் அவ்வளவு சந்தோஷமாக இருப்பார்கள் ஆனால் நானோ மிக துக்கமாக இருப்பேன்; ஆகையால் நான் அந்த குழுவை விட்டு ஓடிவிடுவேன். இது எங்கு போய் முடிந்தது என்றால், நான் இரவு பத்து மணிக்கு படுக்க போவேன், ஆனால் காலை நான்கு மணி வரை தூக்கமே வராது. நான் பைத்தியமாவதற்கு முன் இதை என் மனத்தில் இருந்து எடுத்து போடவேண்டும் என்று அறிந்தேன். முடிவாக, என் தலையும் இதயமும் டிசம்பர் 19, 1959, 8:30-அன்று ஒருங்கிணைந்தது. என் பல்கலை கழகத்தின் இரண்டாவது வருடத்தில் நான் கிறிஸ்தவன் ஆனேன்.
அன்று இரவு கிறிஸ்துவோடு உறவு ஏற்படுத்த இந்த நான்கு காரியங்களை வைத்து ஜெபித்தேன். அது என் வாழ்க்கையை முற்றுமாக மாற்றினது. முதலாவதாக, கர்த்தராகிய இயேசுவே, எனக்காக நீர் சிலுவையில் மரித்ததற்க்காக நன்றி.” இரண்டாவதாக, நான் சொன்னேன், “கர்த்தாவே, என் வாழ்கையில் உமக்கு பிடிக்காதவைகளை நான் அறிக்கை செய்கின்றேன். என்னை மன்னித்து சுத்திகரியும்.” மூன்றாவதாக, நான் சொன்னேன், “இப்போதே, எனக்கு தெரிந்த சிறந்த முறையில், என் உள்ளத்தின் வாசலை உமக்கு திறக்கிறேன். உம்மை என் ஆண்டவராகவும், இரட்சகராகவும் விசுவாசிக்கிறேன்.என் உள்ளத்தை மாற்றும். நீர் என்னை எப்படிப்பட்ட நபராக இருக்க உண்டாக்கினீரோ, அப்படியே என்னை மாற்றும்.” என் நம்பிக்கை அறிவில்லாமையில் அல்ல தேவ வார்த்தையும் சரித்திர ஆதாரத்தையும் அடிபடையாக கொண்டுள்ளது.
அநேகரின் தனிப்பட்ட சடுதியான அனுபவங்களை நீங்கள் கேட்டிருக்க கூடும். ஆனால், நான் ஜெபித்த பிறகு, எனக்கு ஒன்றும் நடக்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை. இப்போதும் எனக்கு சிறகுகள் முளைக்கவில்லை. மாறாக, அந்த தீர்மானத்திற்கு பின்பு நான் இன்னும் கேடாக உணர்ந்தேன். உன்மையிலேயே, குமட்டுகிறதை போல உணர்ந்தேன். ஐயோ, நீ எதில் சிக்கி கொண்டாய்? என்று எண்னையே கேள்விக்கேட்டேன். மிக ஆழ்ந்த முடிவில் நான் சென்றுவிட்டேன் என்றதை போல இருந்தது (அநேகர் என்னை பற்றி அப்படி நினைத்திருக்கவும் கூடும்!).
ஆறு மாதத்தில் இருந்து ஒன்றரை வருடம் வரை நான் கண்டுபிடித்தது என்னவென்றால் நான் ஏதோ ஆழமான முடிவுக்குள் செல்லவில்லை; மாறாக என் வாழ்க்கை மாறினது. மிட்வெஸ்டர்ன் பல்கலை கழகத்தில் வரலாறு துறையின் தலைவரிடம் நான் ஒருமுறை விவாதித்து கொண்டிருந்தேன். என் வாழ்க்கை மாறினதென்று நான் சொன்னேன். அவர் என்னை பார்த்து, “மெக்டோவெல், இந்த இருவதாம் நூற்றாண்டில் என் வாழ்க்கை மாறினதென்று நீங்கள் சொல்லுகிறீர்களா?” என்றார். “எந்த பகுதிகளில் மாறின?” 45 நிமிடங்களுக்கு பின்னால் நான் சொன்னேன், “சரி அது போதும்,” என்று. இந்த கீழ்க்காணும் காரியங்களை அவரோடும் மற்றும் அங்கிருந்த பார்வையாளர்களோடும் சொன்னேன்.
கர்த்தர் என் வாழ்க்கையில் மாற்றின ஒரு பகுதி, என் மன போராட்டம் ஆகும். நான் எப்போதும் ஏதாகிலும் செய்து கொண்டே சிந்தித்து கொண்டே இருப்பேன். நான் பள்ளி வளாகத்தில் நடக்கும்போது என் மனதில் அநேக குழப்பங்கள் சுழல் காற்றை போல அடித்து கொண்டே இருக்கும். நான் படிக்க உட்காரும்போது, என்னால் படிக்க முடியாது. கிறிஸ்துவுக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்த சில மாதத்திற்கு பிறகு, ஒரு மன சமாதானம் எனக்குள் உண்டானதை அறிந்தேன். என்னை தவறாக புரிந்துகொள்ளாதீர்கள். இப்போது எனக்கு அந்த குழப்பங்கள் வருவதில்லை என்று நான் சொல்லவில்லை. இயேசுவோடுள்ள உறவில் நான் கண்டுகொண்டது என்னவென்றால், குழப்பங்கள் வருகின்றன, ஆனால் அதை சம்மாளிக்க வேண்டிய ஆற்றல் உண்டாயிருக்கிறது. இந்த உலகத்திலுள்ள எதற்காகவும் நான் இதை விற்றுப்போடவே மாட்டேன்.
என்னில் மாற்றம் உண்டான வேறொரு பகுதி என்னவென்றால், எனக்குள் இருந்த கடுமையான கோபத்திலாகும்.
யாராவது என்னை ஓரக்கண் பார்வையோடு பார்த்தாலே போதும், அவர்களை நான் அடித்துவிடுவேன். என் கல்லூரியின் முதல் வருடத்தில் ஒரு பைய்யனை கொலை செய்யும் அளவுக்கு அடித்துவிட்டேன். அந்த சன்டையினால் உண்டான தழும்புகள் இன்னும் என் சரீரத்தில் இருக்கின்றன. என் கோபம் என்னோடு கலந்திருந்தப்படியால், நான் அதை மாற்ற முயற்சி எடுக்கவில்லை. அது தானாகவே என்னை விட்டு போனதை பிறகு தான் உணர்ந்தேன்! 14-கு வருடங்களில் ஒரு முறை மட்டுமே நான் கோபத்தில் பேசினேன் (அப்போது செய்த காரியதிற்காக ஆறு வருடங்கள் வருந்தினேன்!).
என்னை குறித்து எனக்கு பிடிக்காத வேறே ஒரு பகுதி என்னவென்றால், அது வெறுப்பு. நான் அதை இங்கு குறிப்பிடும் காரணம் என்னவென்றால், அநேகர் வாழ்க்கையில் இதே போல ஒரு மாற்றம் உண்டாக வேண்டும் என்பதினால் ஆகும். இந்த மாறுதலுக்கான மூல காரணத்தை நான் கண்டுகொண்டேன்: அது இயேசு கிறிஸ்துவுடன் நமக்கு உண்டாகும் உறவு மட்டுமே. என் வாழ்க்கையில் அதிகமான வெறுப்பு இருந்தது. அது வெளியரங்கமாக தோன்றவில்லை என்றாலும், அது உள்ளுக்குள் இருந்ததது. அநேக நபர்கள், காரியங்கள், பிரச்சனைகள் உடனடியாக என்னை கோபமூட்டி விடும்.
நான் மற்ற எல்லாரையும் விட ஒரு மனிதனை மிகவும் வெறுத்தேன்: அது என் தகப்பனாராகும். அவர் வீரத்தை நான் வெறுத்தேன். என்னை பொருத்தவரையில் அவர் ஒரு குடிக்காரர். என் தகப்பன் குடித்திருக்கிறார் என்று எல்லாரும் அறிவார்கள். என் தந்தை குடி போதையில் தடுமாறி நடப்பதை பார்த்து என் நண்பர்கள் என்னை கேளி செய்வார்கள். அது என்னை வருத்தப்படுத்தும் என்று அவர்கள் சற்றும் எண்ணவில்லை. நான் அநேகரை போல வெளியில் சிறித்துகொண்டிருந்தேன். ஆனால், நான் உங்களுக்கு சொல்லட்டும், உள்ளே நான் அழுது கொண்டிருந்தேன். அநேக நேரம் நான் எங்கள் கொட்டகையில் செல்லும்போது என் தகப்பன் அம்மாவை மிகவும் அடித்ததின் நிமித்தம், அம்மா மாட்டுசாணத்தில் கிடந்து, எழும்ப முடியாமல் அழுவதை நான் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் நண்பர்கள் வரும்போது, நான் என் தகப்பனை கொட்டகையில் அடைத்து, அவரை கட்டி வைத்து, அங்கே எங்கள் காரை நிறுத்திவிடுவேன். எங்கள் தகப்பன் எங்கோ சென்று விட்டார் என்று எங்கள் நண்பர்களிடம் சொல்லுவோம். என்னை போல தங்கள் தகப்பனை வெறுத்தவர்கள் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நான் கிறிஸ்துவுக்கு என் வாழ்கையை கொடுத்த பிறகு, அவர் என் வாழ்க்கையில் பிரவேசித்தார், மற்றும் அவரின் அன்பு எனது பகை விரோதத்தை எடுத்துவிடும் அளவிற்க்கு வல்லமை உள்ளதாக இருந்தது. அது என்னை முற்றும் மாற்றினது. நான் என் தகப்பனின் கண்களை நோக்கி, “அப்பா நான் உங்களை நேசிக்கிறேன்” என்று உணர்ந்து சொல்லவைத்தது. அவருக்கு செய்த கொடுமையான காரியங்களை அனுபவித்த அவருக்கு, என் வாழ்க்கையின் மாற்றம் அவரை அசைத்தது.
நான் வேறு ஒரு பல்கலை கழகத்திற்க்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது, ஒரு பயங்கரமான வாகன விபத்தில் அகப்பட்டேன். என் கழுத்தில் தசை சுல்லுக்கின் நிமித்தம், வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டேன். அப்போது என் தகப்பனார், என் அறைக்குள் வந்து “மகனே, என்னை போல ஒரு தகப்பனை நீ எப்படி நேசிக்க முடியும்?” என்று கேட்டார். அப்போது நான் இயேசுவை பற்றி அறிந்ததை அவோரோடு பகிர்ந்து கொண்டேன். “அப்பா, நான் இயேசுவை என் வாழ்கையில் ஏற்றுக்கொண்டேன். நான் அதை முற்றுமாக விவரிக்க முடியாது, ஆனால் அந்த உறவின் நிமித்தம் என்னால் எல்லாரையும் அன்பு செய்யவும், உங்களை மட்டும் அல்ல எல்லாரையும் அவர்கள் இருக்கிறதைப்போலவே ஏற்றுக்கொள்ளவும் எனக்கு உதவி செய்தது” என்றேன்.
45-ந்து நிமிடங்களுக்கு பிறகு என் வாழ்கையில் மிகவும் சந்தோஷம் உன்டாகும் காரியம் நடந்தது. என் குடும்பத்தினரில் ஒருவர், என்னை மிகவும் நன்றாக அறிந்திருந்த ஒருவர், என்னை நோக்கி, “மகனே, உன் வாழ்க்கையில் இப்படி செய்த தேவன் எனக்கும் அப்படி செய்தாரென்றால், நான் அவருக்கு என் வாழ்க்கையை மாற்ற தருணம் கொடுக்கிறேன்” என்று சொன்னார். அதே இடத்தில் என் தகப்பன் என்னோடு சேர்ந்து ஜெபித்து தனது பாவ மன்னிப்புக்காக இயேசுவை விசுவாசித்தார்.
சில நேரம், மாறுதல் உண்டாக அநேக நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடகாலம் ஆகும். என் தகப்பனின் வாழ்க்கை என் கண்களுக்கு முன்பாகவே மாறிற்று. அது யாரோ இறங்கி ஒரு மின் விளக்கை எறிய சைய்தது போல இருந்தது. இப்படிப்பட்ட சடுதியான மாற்றத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. அதன் பிறகு என் தகப்பன் ஒரு முறை மட்டும் விச்க்கியை தொட்டார். அவர் அதை தனது உதடுகள் அருகே கொண்டுபோனார், ஆனால் குடிக்கவில்லை. இதை பார்க்கும்போது நான் ஒரு முடிவுக்கு வருகிறேன். இயேசுவோடுல்ல உறவு வாழ்க்கைகளை மாற்றுகின்றது.
நீங்கள் கிறிஸ்தவத்தை பார்த்து நகைக்கலாம். அதை நீங்கள் பரியாசம் செய்யலாம். ஆனால் அது கிரியை செய்கிற ஒன்று. அது வாழ்க்கைகளை மாற்றுகிறது. நீங்கள் கிறிஸ்துவை நம்பினால், உங்கள் எண்ணங்களும் கிரியைகளும் மாறுகிறதை நீங்கள் பார்க்கமுடியும், ஏனென்றால் இயேசு கிறிஸ்து வாழ்க்கைகளை மாற்றுகின்றார்.
ஆனால் கிறிஸ்தவம் ஒருவருக்குள் திணிக்க கூடியதல்ல. நான் கற்று கொண்டதை உங்களுக்கு சொல்ல மட்டுமே முடியும். அதன் பிறகு, அது உங்கள் தீர்மாணமாகும்.
ஒருவேளை, நான் ஜெபித்த ஜெபம் உங்களுக்கு உதவக்கூடும்: “கர்த்தராகிய இயேசுவே, எனக்கு நீர் தேவை. எனக்காகவே நீர் சீலுவையில் மறித்ததற்காக உமக்கு நன்றி. என்னை மன்னித்து சுத்திகரியும். எப்படிப்பட்ட நபராக இருக்க நீர் என்னை உண்டுபன்னிநீறோ, அப்படியாக என்னை மாற்றும். கிறிஸ்த்துவின் நாமத்தில். ஆமென்.”
► | நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)... |
► | நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள் |
► | எனக்கு ஒருக் கேள்வி உண்டு... |
ஜோஷ் மெக்டோவெல் சர்வதேச அளவில் அறியப்பட்ட பேச்சாளர், ஆசிரியர், மற்றும் க்யாம்பஸ் க்ரூசேட் ஃபார் க்ரைஸ்ட் (Campus Crusade for Christ)-இன் பிரதிநிதி. அவர் 50 புத்தகங்களுக்கு மேலாக எழுதி இருக்கிறார். அவருடைய பிரபலமான ஆங்கில புத்தகங்கள் இவை: மோர் தான் அ கார்பென்டர் (More Than A Carpenter) மற்றும் எவிடென்ஸ் தட் டிமான்ட்ஸ் அ வெர்டிக்ட் (Evidence That Demands A Verdict).