தேவனோடிருக்கும் உறவை துவங்குவது எப்படி? ஒரு மனம் வர காத்திருக்க வேண்டுமா? சுயநலமற்ற பக்தியின் கிரியைகள் செய்ய உங்களை அர்ப்பணிக்க வேண்டுமா? தேவன் உங்களை அங்கீகரிப்பதற்காக ஒரு நல்ல நபராக மாறவேண்டுமா? இது ஒன்றும் வேண்டியதில்லை. தேவனை நாம் எப்படி அறிய முடியும் என்பதை பற்றி சத்திய வேதம் திட்டவட்டமாக விவரிக்கிறது. தேவனோடு ஒரு உறவை இப்போதே துவங்குவது எப்படி என்று இந்த கட்டுரை விவரிக்கும்.
நியமம் ஒன்று: தேவன் உங்களை நேசிக்கிறார் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கு நல்ல ஒரு திட்டத்தை தருகிறார்
தேவன் உங்களை சிருஷ்டித்தார். அதுமட்டும் அல்ல, அவர் உங்களை அதிகமாக நேசிக்கிறார், ஆகையால் நீங்கள் அவரை அறிய வேண்டும் என்றும் அவரோடு நித்தியமாக வாசம்பன்ன வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இயேசு சொன்னார், “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”1
ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகையில் தேவனை அறியவும் அவரை புரிந்துகொள்ளவும் வேண்டும் என்பதற்காக இயேசு பூமிக்கு வந்தார்.
தேவனை அறிவதற்க்கு எது நம்மை தடை செய்கிறது?…
நியமம் இரண்டு: நாம் எல்லாரும் பாவம் செய்தோம் மற்றும் நமது பாவம் அவரை விட்டு பிரித்திருக்கிறது.
நாம் அந்த பிரிவை, அதாவது தேவனுக்கும் நமக்கும் இருக்கும் தூரத்தை, உணருகிறோம். சத்திய வேதம் இப்படி சொல்லுகிறது: “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்.”2
உள்ளத்தின் ஆழத்தில், தேவனை பற்றி நமக்குள் இவ்விரண்டு மனப்பான்மை இருக்க கூடும்: ஒன்று நாம் கர்ததரை எதிரிக்கிறவர்களாக இருக்கலாம் அல்லது தேவனையும் அவருடைய வழிகளையும் பற்றி சற்றும் அக்கறை இல்லாதவர்கள் போல இருக்கலாம். இதை சத்திய வேதம் பாவம் என்று அழைக்கிறது.
நாம் வாழ்க்கையிலுள்ள பாவத்தின் விளைவு மரணமாகும்—அதாவது தேவனுக்கும் நமக்கும் இடையே உண்டாகும் ஆவிக்குரிய பிரிவினை.3 நம் நல்ல செயல்களால் அவரோடு நெருங்க நாம் முயற்சித்தும், தோற்றுப்போகிறோம்.
தேவனுக்கும் நமக்கும் இடையே உள்ள பெரிய பிளவை இந்த பாடம் காண்பிக்கிறது. நம் நல்ல செயல்களின் மூலமாக தேவனோடு நெருங்க நாம் முயற்சிபதை அந்த அம்புகள் காண்பிகின்றன. வாழ்க்கையில் நல்ல காரியங்களை செய்ய நாம் முயற்சிக்கிறோம்; அதாவது ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதின் மூலமாக அல்லது ஒரு நேர்மையின் தத்துவத்தை கடைப்பிடிப்த்தின் மூலமாக தேவன் நம்மை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நம் நற்செயல்கள் நம் பாவங்களை மூடுவதற்க்கு போதுமானதல்ல.
இந்த பிளவை நாம் எப்படி சேர்ப்பது?...
நியமம் மூன்று: நம் பாவத்தை நீக்க தேவனால் அளிக்கப்பட்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. அவர் மூலமாக தேவனின் அன்பையும் அவர் நம் வாழ்க்கைக்கு வைத்திருக்கிற திட்டத்தையும் அறியவும் அனுபவிக்கவும் முடியும்.
நம் பாவத்திற்க்கு நாம் கிராயம் செலுத்தவேண்டியது அவசியம். அந்த சம்பளம் என்னவென்றால் மரணமாகும். நாம் தேவனை விட்டு பிரிந்து மரிக்க கூடாது என்பதற்க்காக, நம்மேல் வைத்த அன்பினால் இயேசு கிறிஸ்து நம் இடத்தில் அவரே மரித்தார். வேதம் சொல்லுகிறது, “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும்…சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.”4
இயேசு தேவதூஷனம் சொன்னார் என்று ஜனங்கள் எண்ணி அவரை சிலுவையில் அறைந்தார்கள்—ஏனென்றால் தம்மை தேவனுக்கு சமமானவர் என்று சொல்லி இருந்தார்—உண்மையிலே அவர் அப்படியாக தான் இருந்தார்.
சிலுவையில், இயேசு நம் பாவத்தை எல்லாம் சுமந்து அதற்கான விலைக்கிரயத்தை முற்றுமாக செலுத்தி முடித்தார். “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்.”5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே,…நம்மை இரட்சித்தார்.”6 இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததினால், நம் பாவம் இனி நம்மை தேவனை விட்டு பிரிக்க முடியாது. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”7 இயேசு நம் பாவத்திற்காக மரித்தது மட்டுமல்ல, அவர் மரித்தோரில் இருந்தும் எழுந்தார்.8 அவர் அப்படி செய்து, நமக்கு நித்திய ஜீவனை அவரால் வாக்களிக்க முடியும் என்று நிரூபித்தார்—என்னென்றால் அவர் தேவ குமாரன் மற்றும் அவர் மூலமாக மட்டுமே நாம் தேவனை அறிய முடியும். ஆகவே இயேசு சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”9
நாம் தேவனை அடைய வெகு முயர்ச்சி செய்வதை விட்டுவிட்டு, அவரோடு இப்போதே உறவை துடங்க அவர் நம்மை வழிநடத்துகிறார். இயேசு சொன்னார்: “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்…. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்.”10 அவர் நம்மேல் வைத்த அன்பு மட்டுமே சிலுவையை பொறுத்துக்கொள்ள வைத்தது. இப்போது அவர் தம்மிடம் வர நம்மை அழைக்கிறார், அவரோடு தனிப்பட்ட உறவை ஆரம்பிப்பதற்காக.
இயேசு நமக்கு என்ன செய்திருக்கிறார் மற்றும் அவர் நமக்கு என்ன தருகிறார் என்பதை அறிவது மட்டும் போதாது. அவரோடு உறவுகொள்ள, நாம் அவரை நாம் வாழ்க்கையில் வரவேற்கவேண்டும்…
நியமம் நான்கு: நாம் தனிப்பட்ட முறையில் இயேசு கிறிஸ்துவை ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
சத்திய வேதம் சொல்லுகிறது, “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.”11
விசுவாசத்தினால் நாம் இயேசுவை ஏற்றுக்கொள்கிறோம். வேதம் சொல்லுகிறது, “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.”12
இயேசுவை ஏற்றுக்கொள்வது என்றால் இயேசு கிறிஸ்துவே தேவ குமாரன் என்று நம்புவதாகும் மற்றும் நம் வாழ்க்கையை அவர் வழிகாட்டி கற்பித்து நடத்தும்படி அவருக்கு அனுமதிப்பதாகும்.13 இயேசு சொன்னார், “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.”14
இயேசுவின் வரவேற்பு இங்கு இருக்கிறது: அவர் சொன்னார், “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசி[ப்பேன்].”15
தேவனின் வரவேற்பிற்க்கு நீங்கள் எப்படி பதிலளிக்க போகிறீர்கள்?
இந்த இரண்டு வட்டத்தையும் பாருங்கள்.
|
சுயம் சிங்காசனத்தின் மேல் இருக்கிறது. இயேசு வாழ்க்கையின் வெளியே இருக்கிறார். வாழ்க்கையின் எல்லா தீர்மானங்களும் செயல்கலும் நம்மால் இயக்கப்படுகின்றன, அதிக தோல்விகளுடன். |
|
இயேசு வாழ்க்கையில் இருக்கிறார் மற்றும் அவர் சிங்காசனத்தின் மேல் இருக்கிறார். சுயாமானது இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்கிறது. இயேசுவின் வழிநடத்துதலை அந்த நபர் தனது வாழ்க்கையில் காண்கின்றார். |
இவ்விரண்டில் எந்த வட்டம் உங்கள் வாழ்க்கையை காட்டுகிறது?
உங்கள் வாழ்க்கை எந்த வட்டத்தை போல இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
இயேசுவோடு ஒரு உறவை ஆரம்பியுங்கள்…
இப்போதே நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள முடியும். இயேசு சொன்னார், “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசி[ப்பேன்].”16 அவர் வரவேற்புக்கு நீங்கள் பதிலளிக்க விரும்புகிறீர்களா? இங்கு அந்த விவரம் கொடுக்கப்பட்டுள்ளது:
உங்கள் வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புக்கொடுக்க மிகவும் நேர்த்தியான வார்த்தைகளை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் உள்ளத்தின் எண்ணங்களை அவர் அறிவார். எப்படி ஜெபிக்கவேண்டும் என்று உங்களுக்கு தெரியாமல் இருந்தால், இந்த ஜெபம் உங்கள் வேண்டுதலை வார்த்தையில் சொல்ல உதவும்:
“இயேசுவே, நான் உம்மை அறிய விரும்புகிறேன். நீர் என் வாழ்க்கையில் வாரும். உம்மால் நான் முற்றுமாக ஏற்றுக்கொள்ளப்படும்படி நீர் எனக்காக, என் பாவத்தை போக்க, சிலுவையில் மரித்ததற்காக நன்றி. என் வாழ்க்கையை மாற்றவும் நீர் என்னை எப்படிப்பட்ட நபராக இருக்க உண்டாகினீரோ, அப்படியாக நான் மாறவும், நீர் மட்டுமே என்னை பலப்படுத்த முடியும். நீர் என்னை மன்னித்து, நித்திய ஜீவனை எனக்கு அளித்ததற்காக உமக்கு நன்றி. என் வாழ்க்கையை நான் உமக்கு தருகிறேன். நீர் விரும்புவதை என் வாழ்க்கையில் செய்யும். ஆமென்.”
நீங்கள் உண்மையாக இயேசுவை உங்கள் வாழ்க்கையில் இப்போது ஏற்றுக்கொண்டால், அவர் வாக்களித்தபடியே உங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டார். தேவனோடு தனிப்பட்ட உறவை நீங்கள் துவங்கி விட்டீர்கள்.
இனி நீங்கள் செய்ய இருப்பது ஒரு மாற்றம் மட்டும் வளர்ச்சியின் வாழ்க்கை பயனமாகும். வேதம் வாசிப்பது மூலமாக, ஜெபிப்பதின் மூலம், மற்ற கிறிஸ்தவர்களோடு உறவாடுவதின் மூலம் நீங்கள் இன்னும் தேவனை அறிய முடியும்.
(1) யோவான் 3:16 (2) ஏசாயா 53:6 (3) ரோமர் 6:23 (4) கொலோசெயர் 1:15,16 (5) 1 பேதுரு 3:18 (6) தீத்து 3:5 (7) யோவான் 3:16 (8) 1 கொரிந்தியர் 15:3-6 (9) யோவான் 14:6 (10) யோவான் 7:37,38 (11) யோவான் 1:12 (12) எபேசியர் 2:8,9 (13) யோவான் 3:1-8 (14) யோவான் 10:10 (15) வெளிப்படுத்தின விசேஷம் 3:20 (16) வெளிப்படுத்தின விசேஷம் 3:20