வேதாகமானது ஏறத்தாழ 1500 ஆண்டுகளாக 40 ஆசிரியர்களால் எழுதப்பட்டது. மற்ற மதப் புத்தகங்கள் போலல்லாமல், வேதாகமத்தில் உண்மையான நிகழ்வுகள், இடங்கள், மக்கள் மற்றும் உரையாடல் ஆகியவைகளை உண்மை செய்தியை போல வாசிக்கலாம். வேதாகமத்தின் ஏற்புத்தன்மையை வரலாற்று வல்லுநர்கள் மற்றும் தொல்லியல் வல்லுநர்கள் அநேக முறை உறுதிசெய்திருக்கின்றனர்.
தேவன் யார் மற்றும் அவரை அறிந்து கொள்வது எப்படி என்பதை ஆசிரியர்களின் எழுத்து நடை மற்றும் தனித்தன்மையைப் பயன்படுத்தித் தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
40 வேதாகம ஆசிரியர்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுள்ள மையச் செய்தியானது: நம்மை உண்டாக்கின தேவன் நம்மோடு ஐக்கியப்பட விரும்புகிறார். அவரை அறிந்துக்கொள்ளும்படி மற்றும் விசுவாசிக்கும் படி நம்மை அழைக்கிறார்.
வேதாகமம் நம்மை எழுச்சியூட்டுவது மட்டுமல்லாமல் வாழ்க்கை மற்றும் தேவனை நமக்கு விளக்குகிறது. நமக்கு இருக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் இது பதிலளிப்பதில்லை ஆனால் இது போதுமானது. நாம் எப்படி நோக்கத்தோடும் இரக்கத்தோடும் வாழவேண்டும் என்பதை இது நமக்குக் காட்டுகிறது. பிறறோடு ஐக்கியப்படுவது எப்படி. தேவனுடைய பலத்தை வழிநடத்துதலை சார்ந்திருக்க மற்றும் நம்மீது அவருக்கு இருக்கும் அன்பில் சந்தோஷப்பட இது நம்மை உற்ச்சாகப்படுத்துகிறது. மேலும் நாம் எப்படி நித்திய வாழ்வை பெற முடியும் என்பதை வேதாகமம் நமக்குச் சொல்கிறது.
வேதாகமத்தின் வரலாற்றுத் துல்லியம் மற்றும் இது தேவனுடைய வார்த்தை என்பதற்கான அறிய பலவிதமான சான்றுகள் உதவுகின்றன. (இந்தக் கட்டுரையின் துணைப்பகுதிகள் இங்கு இருக்கிறது, இதை உங்களின் விருப்பம் போல் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்)
வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்று தொல் பொருள் ஆராய்சி நமக்கு நிரூபிக்க முடியாது எனினும் தொல் பொருள் ஆராய்சி வேதாகமத்தின் வரலாற்றுத் துல்லியத்தை உறுதிபடுத்த முடியும். வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், இராஜாக்கள், பட்டணங்கள், மற்றும் பண்டிகைகள் ஆகியவைகளின் பெயர்களைத் தொல்லியலானது தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறது. சில நேரங்களில் வரலாற்று வல்லுநர்கள் கூடச் சிந்திக்காத மக்கள் மற்றும் இடங்களாக அவைகள் இருக்கலாம். உதாரணமாக, யோவான் சுவிசேஷம் பெதஸ்தா குளத்தண்டையில் இயேசு சுகமாக்கிய முடவனைக் குறித்துச் சொல்கிறது. வசனம் அங்கு இருந்து ஐந்து மண்டபங்களைக் குறிப்பிடுகிறது. இது பூமிக்கு 40 அடி அடியில் இந்த ஐந்து மண்டபங்களுடன் முழுமையாக இருப்பதை இதைத் தொல்லியல் வல்லுநர்கள் கண்டுபிடிக்கும் வரை வல்லுநர்கள் இப்படி ஒரு குளம் இருந்ததாக நினைக்கவில்லை.1
வேதாகமத்தில் அநேக வரலாற்று நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன அவைகள் எல்லாம் தொல்லியல் மூலம் கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆனால் வேதாகமத்திற்கு எந்த விதத்திலும் தொல்லியல் தகவல்கள் முறண்பாடாக இருந்ததில்லை.2
செய்தியாளர் லீ ஸ்டோர்பேல் மோர்மோன்களின் புத்தகத்தைப் பற்றிக் கருத்தை முரண்பாடாகச் செய்தியை தெரிவித்திருக்கிறார்: அமெரிக்காவில் நீண்ட நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிகழ்வுகளைப் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை மீண்டும் மீண்டும் உறுதிசெய்யத் தவறிவிட்டது. நான் சுமித்சோனியன் கல்வி நிறுவனத்திற்கு மோர்மோனிச கூற்றுகளை உறுதிசெய்யக் கூடிய ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா என்று எழுதியதை நினைவு கூறுகிறேன். புது உலகமாகிய தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் புத்தகத்தின் முக்கியச் செய்திக்கும் எந்த வித நேரடி தொடர்பும் இல்லை என்றே தொல்பொருள் ஆராய்சியாளர்கள் பார்க்கின்றனர் என்ற தெளிவான கருத்தே சொல்லப்பட்டது. தொல்பொருள் ஆராய்சியாளர்கள் மோர்மோன் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட எந்தப் பட்டணங்களையும், நபர்களையும், பெயர்களையும், அல்லது இடங்களையும் கண்டுபிடித்ததில்லை.3
புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தல நடபடிகளில் லூக்கா குறிப்பிட்ட பல பழமையான இடங்கள் தொல்பொருள் ஆராய்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. “லூக்கா குறிப்பிட்ட முப்பத்தி மூன்று தேசங்கள், ஐம்பத்தி நாளு பட்டணங்கள் மற்றும் ஒன்பது தீவுகள் ஆகிய எல்லா இடங்களும் எந்தப் பிழையும் இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளன.”4
தொல்பொருள் ஆராய்சியாளர்கள் வேதாகமத்தை பற்றிய பல தவறான ஆதாரங் கோட்பாடுகளை மறுத்துள்ளனர். உதாரணத்திற்கு மோசே பஞ்சாகமத்தை (வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்கள்) எழுதியிருக்க முடியாது ஏனென்றால் அவர் இருந்த காலத்தில் எழுத்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் கருப்பு கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். “இதனில் ஹமுராபி விரிவான பிரமாணங்கள் ஆப்பு வடிவ எழுத்துக்களில் இருந்தன. இவைகள் மோசேயினுடைய காலத்திற்கு முந்தினதா? இல்லை இவைகள் மோசேயினுடைய காலத்திற்குப் பிந்தினதே அதுமட்டுமல்ல இவைகள் ஆபிரகாமின் காலத்திற்கு முந்தினவைகள் (கி.மு 2,000). அது குறைந்தது மோசேயை விட மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தியது.”5
வேதாகமத்தின் வரலாற்றுத் துல்லியங்களைத் தொல்பொருள் ஆரய்ச்சிகள் தொடர்ந்து உறுதிசெய்கின்றன.
முக்கியமான தொல்லியல் ஆய்வின் கண்டுபிடிப்புகளின் பட்டியலின் வரைபடம்…
ஏ. = ஏறத்தாழ
தொல்லியல் ஆய்வின் கண்டுபிடிப்புகள் | முக்கியத்துவம் |
மாரி தகடுகள் | 20,000 மேற்பட்ட ஆப்பு வடிவ தகுடுகள், ஆபிரகாமின் காலத்திற்கு சேர்ந்தவைகள், ஆதியாகமத்தில் காணப்படும் ஆணாதிக்க பாரம்பரியதாய் விவரிக்கின்றன. |
எப்லா தகடுகள் | 20,000 மேற்பட்ட தகுடுகள், உபாகமத்தில் உள்ள சட்ட தொகுப்புக்கு ஒத்த சட்டங்கள். முந்தி கற்பனை பட்டணங்கள் என்று என்னப்பட்ட ஆதியாகமத்தில் காணும் சமபூமியின் ஐந்து பட்டனங்கள் (சோதோம், கோமாரா, அத்மா, ஜிபோய்ம், மற்றும் ஜோர்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. |
நூஸி தகடுகள் | இவைகள் 14 மற்றும் 15-ஆம் நூற்றாண்டுகளில் இருந்த வழக்கங்கள் மற்றும் மளட்டு மனைவிகளுக்காக அவர்கள் வேலைக்காரிகளால் பிள்ளைகளை பெற்றுதரும் ஆணாதிக்க விவரங்களின் இடையே உள்ள ஒப்புமையை விவரிகின்றன. |
கருப்பு கல்வெட்டு | மோசேயின் பிரமானங்கள் எழுதப்படுவதற்க்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் எழுத்து மற்றும் எழுதப்பட்ட சட்டங்கள் இருந்ததாக நிரூபித்துள்ளன. |
கர்ணாகின், எகிப்து, கோவில் சுவர்கள் | ஆபிரகாம் கி.மு 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்பதை குறிக்கிறது |
எஷ்ணுன்னா சட்டங்கள் (ஏ. 1950 கி.மு.); லிபித்-இஷ்ட்டார் சட்ட தொகுப்பு (ஏ. 1860 கி.மு.); ஹமுராபி சட்ட தொகுப்பு (ஏ. 1700 கி.மு.) | மோசேயின் ஐந்து ஆகமங்களில் உள்ள சட்ட தொகுப்புகள் அதன் காலத்திற்க்கு கடினமாக இருந்ததில்லை என்பதை காண்பிக்கிறது. |
ராஸ் ஷர்ம தகடுகள் | எபிரேய கவிதைகளை பற்றிய தகவல் தருகின்றது. |
லாஷீஷ் கடிதங்கள் | நேபுகாத்நேச்சார் யூதாவின் மீது படை எடுத்தத்தின் விவரத்தையும் மற்றும் எரேமியாவின் காலத்தை பற்றிய நுண்ணறிவும் தருகிறது. |
கெதாலியா முத்திரை | கெதாலியாவை பற்றி 2 இராஜாக்கள் 25:22 சொல்லப்பட்டிருக்கிறது. |
கோரேசு உருளை | கோரேசு இராஜா எருசலேம் தேவாலயத்தை மீண்டும் கட்ட அனுமதித்து கட்டளை கொடுத்ததை பற்றி வேதாகமத்தில் காணும் விவரத்தை உறுதிப்படுத்துகிறது (2 நாளாகமம் 36:23; எஸ்றா1:2-4 பாருங்கள்). |
மோவாபியர் கல் | இஸ்ரவேலின் ஆறாவது அரசனான ஒம்ரியை பற்றிய தகவல் தருகிறது. |
சல்மனாசார் பிளாக் தூபி III | அசீரியா இராஜாவுக்கு இஸ்ரவேலின் அரசனான ஏகு எப்படி ஒப்புக்கொடுக்கவேண்டியதாயிற்று என்பதை விவரிக்கிறது. |
டெய்லர் பிரிசம் | இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவின் காலத்தில் சனகரிப் எருசலேமை தாக்கின விவரத்தை சொல்லும் ஒரு அசீரிய வாசகம் உள்ளது. |
விமர்சகர்களால் முன்சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் | தொல்பொருளியல் மூலம் தரப்பட்ட பதில் |
எழுத்து கண்டுபிடிப்பின் முன் அவன் வாழ்ந்ததால், மோசே வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களை எழுதி இருக்க முடியாது. | மோசே தோன்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுத்து இருந்தது |
ஆபிரகாமின் சொந்த பட்டணமான ஊர் இருந்ததில்லை. | ஊர் கண்டுப்பிடிக்கப்பட்டது. அதில் ஒரு தூணில் “ஆபிராம்” என்ற எழுத்துப் பொரிப்பு இருந்தது. |
கற்பாறையினால் கட்டப்பட்ட “பெட்ரா” என்னும் பட்டணம் இருந்ததில்லை. | பெட்ரா கண்டுபிடிக்கப்பட்டது. |
எரிகோ மதில் விழுந்தது என்ற கதை ஒரு கட்டுக்கதை. அந்த பெயர் கொண்ட பட்டணம் இருந்ததில்லை. | அந்த பட்டணம் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் தோண்டி எடுக்கப்பட்டது. வேதாகமத்தில் விவரிக்கப்பட்ட அதே முறையில் அதன் சுவர்கள் இடிந்து விழுந்திருந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டது. |
ஏத்தியர்கள் இருக்கவே இல்லை. | பிரமாதமான ஏத்திய நாகரிகத்தைய் பற்றிய நூற்றுக்கணக்கான குறிப்புகள் கண்டடையப்பட்டுள்ளன. சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஏத்தியர் பட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெறலாம். |
பெல்ஷாசார் பாபிலோனின் உண்மையான ராஜாவல்ல; எந்த பதிவுகளிலும் அவனை பற்றி இல்லை. | நபொனிடசின் உடன் பிரதிநிதி மற்றும் மகனின் ஆட்சியை பற்றி பாபிலோனிய தகுடுகள் விவரிக்கின்றன. |
வேதாகமம் பல காலங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது எனவே இந்த மொழிபெயர்ப்பு நிலைகளில் இது சிதைவடைந்திருக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். மொழிபெயர்ப்பானது மற்ற மொழிகளிலிருந்து செய்யப்பட்டிருக்குமே ஆனால் இது சிதைவடைந்திருக்க வாய்பிருக்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பானது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூல பிரதியின் படி மூல பாஷையான கிரேக்கம், எபிரேயம் மற்றும் அரமிக்கிலிருந்து நேரடியாகச் செய்யப்படுகிறது.
பழைய ஏற்பாட்டின் நம்பகதன்மை 1947 –ல் தொல் பொருள் ஆராய்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் மூலம் மற்றும் இஸ்ரவேலின் இன்றைய மேற்கு கரையின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளன. “சவக்கடல் சுருள்கள்” 1000 வருடத்திற்கும் பழைமையான நம்மிடம் இருக்கும் மூலபுத்தகங்களை விடப் பழமையான பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. நம்மிடம் இருக்கக் கூடிய 1000 வருடங்கள் பழமையான மூலபுத்தகங்களோடு ஒப்பிடும் போது இவைகள் 99.5 சதவீதம் ஒத்துப்போவதாக இருக்கிறது. 5 சதவீதம் மட்டும் வேறுபாடு காணப்படுகிறது அவைகளும் வார்த்தை பிழைகள் மற்றும் வாக்கியத்தின் அமைப்பு. இவைகள் எந்த விதத்திலும் வாக்கியத்தினுடைய அர்த்தத்தை மாற்றுவது இல்லை.
புதிய ஏற்பாடானது அதிக நம்பகத்தன்மையுள்ள பழமையான அவணம் ஆகும். நம்மிடம் ஆயிரக்கணக்கான புதிய ஏற்பாட்டுப் பிரதிகள் உள்ளன அவை அனைத்தும் அசல் பிரதியோடு ஒத்த சேதிகளிலே எழுதப்பட்டுள்ளன. பிலாட்டோ அல்லது அரிஸ்டாட்டில் அல்லது கோமர் இலியட் ஆகியவர்களின் எழுத்துக்கள் அவர்களால் எழுதப்பட்டவைகள் என்கிற நம்பகத்தன்மையை விட ஆசிரியர்களால் எழுதப்பட்ட படியே புதிய ஏற்பாடு யாரால் எழுதப்பட்டதோ அதே நிலைத்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
புதிய ஏற்பாட்டைப் பழமையாக எழுதப்பட்ட ஆவணங்களோடு ஒப்பிட்டு பார்க்க.
புதிய ஏற்பாட்டை மற்ற பண்டைய நூல்களின் ஒப்புமை...
புதிய ஏற்பாடு வேறு பண்டைய நூல்கள் ஒப்பிட்டு எப்படி இருக்கிறது பற்றி இங்கு உள்ளன*:
ஏ. = ஏறத்தாழ
ஆசிரியர் | புத்தகம் | எழுதப்பட்ட தேதி | முந்தைய பிரதிகள் | கால இடைவெளி | பிரதிகள் எண்ணிக்கை |
ஹோமர் | இலியத் | 800 கி.மு. | ஏ. 400 கி.மு. | ஏ. 400 வருடங்கள் | 643 |
ஹெரோடெட்டஸ் | ஹிஸ்டரீ | 480-425 கி.மு. | ஏ. கி.பி. 900 | ஏ. 1,350 வருடங்கள் | 8 |
துசிடைடஸ் | ஹிஸ்டரீ | 460-400 கி.மு. | ஏ. கி.பி. 900 | ஏ. 1,300 வருடங்கள் | 8 |
ப்லேட்டோ | 400 கி.மு. | ஏ. கி.பி. 900 | ஏ. 1,300 வருடங்கள் | 7 | |
டெமொஸ்தெநஸ் | 300 கி.மு. | ஏ. கி.பி. 1100 | ஏ. 1,400 வருடங்கள் | 200 | |
சீஸர் | கேலிக் வார்ஸ் | 100-44 கி.மு. | ஏ. கி.பி. 900 | ஏ. 1,000 வருடங்கள் | 10 |
டாஸிடஸ் | அநல்ஸ் | கி.பி. 100 | ஏ. கி.பி. 1100 | ஏ. 1,000 வருடங்கள் | 20 |
ப்லிநீ செக்கன்டஸ் |
நாச்சுரல் ஹிஸ்டரீ |
கி.பி. 61-113 | ஏ. கி.பி. 850 | ஏ. 750 வருடங்கள் | 7 |
புதிய ஏற்பாடு | கி.பி. 50-100 | ஏ. கி.பி. 114 ( பாகங்கள்) ஏ. கி.பி. 200 ( புத்தகங்கள்) ஏ. கி.பி. 325 (பு.ஏ. முழுமையும்) |
ஏ. +50 வருடங்கள் ஏ. 100 வருடங்கள் ஏ. 225 வருடங்கள் |
5366 |
* மெக்டொவெல், ஜோஷ். தே ந்யூ எவிடெந்ஸ் தட் டிமான்ட்ஸ் எ வர்டிக்ட் (தாமஸ் நெல்ஸன் பப்லிஷர்ஸ், 1999), பி. 55.
புதிய ஏற்பாட்டின் நான்கு ஆசிரியர்கள் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைத் தங்களுடைய கோணத்தில் எழுதியுள்ளனர். இவைகளே நான்கு சுவிசேஷப் புத்தகம் என்று அழைக்கப்படும் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்கள். இவர்களது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பை நாம் எப்படிச் சரியானது என்று நம்ப முடியும்.
வாழ்க்கை குறிப்பு சரியானதா என்று தீர்மானிக்கும் போது வரலாற்று வல்லுநர்கள் கேட்கும் முதல் கேள்வி: வேறு எந்த ஆவணமாவது இதே தகவல்களை இந்த நபரை குறித்துத் தருகின்றதா? நீங்கள் ஜனாதிபதி ஜான் கேன்னடி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சேகரிக்கிறீர்கள் என்று யூகித்துக்கொள்வோம். அவருடைய குடும்பம், பதவிக்காலம், அவர் கியூபா ஏவுகனை நெருக்கடியை அவர் கையாண்ட விதம் அகிய அனைத்து தகவல்களும் இவரைக் குறித்த மற்ற எல்லா வாழ்க்கை குறிப்புகளுக்கும் ஒத்ததாகவே காணப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் ஒரு வாழ்க்கை குறிப்பு மட்டும் அவர் பத்து ஆண்டுகள் தென் ஆப்பிரிக்காவில் பாதிரியராகப் பணியாற்றினார் என்ற தகவல் கொடுத்து மற்ற அனைத்து வாழ்க்கை குறிப்புகளும் அவர் அமெரிக்காவில் வாழ்ந்தார் என்பதைக் குறிக்கும் போது என்ன செய்வீர்கள்? விவேகமான வராலற்றாசிரியர் மற்றவைகளோடு ஒத்துபோகும் தகவல்களையே ஏற்றுக்கொள்வார்கள்.
இயேசு கிறிஸ்துவை குறித்துப் பார்க்கும் போது, அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் குறித்த பலவிதமான அறிக்கையில் அவரைக் குறித்து ஒரே விதமான உண்மைகளைப் பார்கிறோமா? ஆம். இயேசுவை குறித்த பல வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அவரைக் குறித்த உண்மையான தகவல்களைத் தருவில் ஒத்திருப்பதை இங்கு உதாரணமாகப் பார்க்கலாம்.
மத்தேயு | மாற்கு | லூக்கா | யோவான் | |
கன்னியின் வயிற்றில் இயேசு பிறந்தார் | 1:18-25 | - | 1:27-34 | - |
அவர் பெத்தலகேமில் பிறந்தார் | 2:1 | - | 2:4 | - |
அவர் நாசரேத்தில் வாழ்ந்தார் | 2:23 | 1:9-24 | 2:51,4:16 | 1:45-46 |
இயேசு யோவான் ஸ்நானகனிடத்தில் ஞானஸ்தானம் பெற்றார் | 3:1-15 | 1:4-9 | 3:1-22 | - |
அவர் சுகப்படுத்தும் அற்புதங்களைச் செய்தார் | 4:24, மற்றும் பல | 1:34, மற்றும் பல | 4:40 மற்றும் பல | 9:7 |
அவர் தண்ணீரின் மேல் நடந்தார் | 14:25 | 6:48 | - | 6:19 |
அவர் ஜந்தாயிரம் பேரை ஜந்து அப்பம் மற்றும் இரண்டு மீன்களைக் கொண்டு போசித்தார் |
14:7 | 6:38. 7 | 9:13 | 6:9 |
இயேசு சதாரண மனிதர்களுக்குப் போதித்தார் | 5:1 | 4:25, 7:28 | 9:11 | 18:20 |
சமுதாயத்தினால் புரக்கணிக்கப்பட்டவர்களோடு நேரங்களைச் செலவிட்டார் | 9:10, 21:31 | 2:15-16 | 5:29, 7:29 | 8:3 |
அவர் மதத் தலைவர்களோடு விவாதித்தார் | 15:7 | 7:6 | 12:56 | 8:1-58 |
மதத் தலைவர்கள் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் | 12:14 | 3:6 | 19:47 | 11:45-57 |
அவர்கள் இயேசுவை ரோமர்களிடம் ஒப்படைத்தனர் | 27:1-2 | 15:10 | 23:1 | 18:28 |
இயேசு சவுக்கால் அடிக்கப்பட்டார் | 27:26 | 15:15 | - | 19:1 |
அவர் சிலுவையில் அரையப்பட்டார் | 27:26-50 | 15:22-37 | 23:33-46 | 19:16-30 |
அவர் கல்லரையில் அடக்கம்பண்ணப்பட்டார் | 27:57-61 | 15:43-47 | 23:50-55 | 19:38-42 |
இயேசு உயிரோடு எழுந்து தன்னுடைய சிஷர்களுக்குத் தரிசனமானார் |
28:1-20 | 16:1-20 | 24:1-53 | 20:1-31 |
இரண்டு சுவிசேஷப் புத்தகங்கள் இயேசுவை நன்கு தனிப்பட்ட முறையில் அறிந்த மற்றும் அவரோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த அப்போஸ்தலர் மத்தேயு மற்றும் யோவானால் எழுதப்பட்டவைகள். மற்ற இரண்டு புத்தகங்களும் அப்போஸ்தலரோடு நெருங்கியிருந்த மாற்கு மற்றும் லூக்காவினால் எழுதப்பட்டவைகள். அவர்கள் எழுதிய உண்மைகளோடு இந்த எழுத்தாளர்களுக்கு நேரடி தொடர்பு இருந்தது. ஆதி சபை இந்த நான்கு சுவிசேஷப் புத்தகங்களையும் ஏற்றுக்கொண்டது ஏனெனில் இவைகள் இயேசுகிறிஸ்து வாழ்க்கையைக் குறித்த ஏற்கனவே இருந்த பொதுவான தகவல்களே.
மேலும், சுவிசேஷ புத்தகமானது அவர் அவர்களுடைய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட அனுதின நிகழ்வுகளின் செய்திகளை வாசிப்பது போலவே இருக்கிறது. விளக்கங்கள் ஒவ்வொருவருக்கும் தனிதன்மையானது ஆனால் நிகழ்வுகள் ஒன்ரோடு ஒன்று ஒத்திருக்கிறது. வரலாற்று வல்லூநர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் உறுதிசெய்த இடங்களின் பெயர்கள் மற்றும் கலாச்சாரங்களைக் குறித்த தகவல்களைச் சுவிசேஷப் புத்தகங்கள் தருகின்றன.
ஒரு சுவிசேஷப் புத்தகத்திலிருந்து மாதிரிக்கு, இங்கு அழுத்தவும்.
சுவிசெஷங்கள் ஒன்றில் வழங்கப்பட்ட மாதிரி…
சுவிசேஷங்கள் உள்ளபடியே, அதாவது, இது இப்படியாக தான் இருந்தது என்ற முறையில், வழங்கப்பட்டிருக்கிறது. இயேசு செய்த அற்புதங்களை பற்றின அறிக்கைகளும் அப்படியே எந்தவிதமான பரபரப்பு அல்லது மறைஞானம் இல்லாமல் எழுதப்பட்டு உள்ளன. ஒரு சிறந்த உதாரணத்தை லூக்கா, அதிகாரம் 8-இல் உள்ள ஒரு மரித்துபோன சிறுமியை இயேசு மீண்டும் உயிர்ப்பித்ததின் சம்பவத்தில் பார்க்கலாம். அதன் அறிக்கையின் விவரங்கள் மற்றும் தெளிவாய் கவனியுங்கள்:
அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,
தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,
அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.
அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்டகாரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்,
எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.
அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
மற்ற ஜனங்களை இயேசு குணமாக்கினதின் விவரங்களை போலவே இதற்க்கும் நம்பதக்க உண்மை என்ற உணர்வு இருக்கிறது. அது கட்டுக்கதையாக இருந்திருந்தால், அதில் சில பாகங்கள் வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக, ஒரு கட்டுகதையில், வேறு ஏதோ ஒரு நடக்கும் சம்பவம் இடையில் தொகுக்கப்படாது. அது கட்டுகதையாக இருந்திருந்தால், துக்கித்துகொண்டிருந்த ஜனங்கள் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு நகைத்திருக்க மாட்டார்கள்; மாறாக அவர்கள் கோபம் கொண்டிருப்பார்கள், வேதனைப்பட்டிருப்பார்கள், ஆனால் நகைத்திருக்க மாட்டார்கள். கட்டுக்கதை என்றால், இதை பற்றி யாருக்கும் சொல்லாதீர்கள் என்று இயேசு அந்த பெற்றோரிடம் சொல்லி இருப்பாரா? சுகமலிப்பதே ஒரு பெரும் விஷயமாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நிஜமான வாழ்க்கை அவ்வளவு சுலபமானது அல்ல. அதில் அநேக குறுக்கீடுகள் இருக்கின்றன. ஜனங்கள் வித்தியாசமாக வினைபுரிவார்கள். மற்றும் இந்த சங்கதிகளை அந்த பெற்றோர் வெளிப்படுத்த கூடாது என்று இயேசு விரும்புகிறதற்கு வேறு அநேக காரணங்கள் அவருக்கு இருந்திருக்கும்.
இந்த சுவிசேஷங்கள் உண்மைதானா என்று பார்க்க ஏற்ற சோதனை என்னவென்றால், அவைகளை நீங்களே வாசித்து பார்ப்பதாகும். அது உண்மை நிகழ்வுகளின் அறிக்கையாக தோன்றுகிறதா அல்லது கட்டு கதையாக தோன்றுகிறதா? அது உண்மையானால், தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது உண்மை. இயேசு வந்தார், வாழ்ந்தார், கற்று தந்தார், ஊக்கமூட்டினார், மற்றும் இன்றும் கூட அவர் வார்த்தைகளை மற்றும் வாழ்க்கையை வாசித்த கோடிக்கணக்கான பேருக்கு ஜீவன் அளித்திருக்கிறார். சுவிசேஷங்களில் இயேசு கூறின எல்லாம் சத்தியம் என்பதை அநேகர் கண்டுகொண்டனர்: “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10).
இயேசு அநேக அற்புதங்களைச் செய்தார், அவர் ரோமர்களால் சிலுவையில் அறையப்பட்டார் மற்றும் மூன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தார் என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். இயேசுவினுடைய வாழ்க்கை மற்றும் அவருடைய சீஷர்களைக் குறித்த வேதாகம குறிப்புகளை எண்ணுக்கடங்காத பண்டைய வரலாற்று வல்லுநர்கள் உறுதிபடுத்துகின்றனர்:
கோர்நலியஸ் டக்டியஸ் (கி.பி 55-120), பண்டைய உலகின் மிகத் துல்லியமான வரலாற்று வல்லுநர்களுள் ஒருவரான முதல் நூற்றாண்டு ரோம வரலாற்று வல்லுநர் ஆவார்.6 டக்டியஸிடம் இருந்து வந்த வல்லுநர்கள் நம்மிடம் சொல்வது, ரோம ராயன் நீயூரோ கிறிஸ்டஸ் கிறிஸ்து என்ற பெயரிலிருந்து வந்த கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்தினான், அவர்கள் டிபேரியசின் ஆட்சி நாட்களில் ரோம பேரரசின் அதிகாரியாகிய போந்து பிலாத்துவின் கையில் மிகுந்த தண்டணைக்கு உட்படுத்தப்பட்டனர்...7
ஃபிலேவியஸ் ஜேசிபஸ், ஒரு யூதா வரலாற்று வல்லுநர் (கி.பி. 38-100), அவருடைய யூத தொன்மை நடைமுறைகளைக் குறிப்பிடும் போது இயேசுவை குறித்து எழுதியிருக்கிறார். “ஜேசிபஸ் இயேசுவை குறித்துக் குறிப்பிடும் போது அவர் ஆச்சரியமூட்டும் அற்புதங்கள் பல செய்தார், அநேகருக்கு போதித்தார், யூதா மற்றும் கிரேக்கர்களில் தனக்கு அநேக சீஷர்களைப் பெற்றிருந்தார், மேசியாவாக விசுவாசிக்கப்பட்டார், யூதா தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்டுப் பிலாத்துவினால் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்கப்பட்டார் மற்றும் உயிர்தொழுந்தவராகக் கருதப்பட்டார் என்று எழுதியிருக்கிறார்.”8
சுடோனியஸ், பிலினி தி ஏங்கர், மற்றும் தால்லஸ் ஆகியவர்களும் கிறிஸ்தவ ஆராதனை மற்றும் புதிய ஏற்பாட்டோடு ஒத்திருக்கிற உபத்திரவத்தையும் குறித்து எழுதியுள்ளனர்.
மேலும் யூதர்களின் வேதமான தல்முத் -ம் “இயேசுவுக்கு எதிராக ஒருபுறச்சாய்வானது அல்ல, இது இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகலில் கருத்து ஒன்றுபடுகிறது. இயேசு மணவாழ்க்கை மூலம் பிறந்தவர், சீஷர்களைச் சேர்த்துக்கொண்டார், அவரைக் குறித்துத் தேவ தூஷசனம் சொன்னார், அற்புதங்களைச் செய்தார், ஆனால் இந்த அற்புதங்கள் அசுத்த ஆவிகளினால் செய்தார் தேவன் மூலமாய் அல்ல என்று தல்முத்திலிருந்து நாம் அறிந்துக்கொள்கிறோம்.”9
இந்த அற்புதமான தகவல்களின் மூலம் அநேக பண்டைய வரலாற்று வல்லுநர்கள் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களையே கருத்தில் கொண்டுள்ளனர் என்றும் ரோம இராஜூயத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும் புரிந்துகொள்ள முடியாத ஆசாரியர்களை அவர்கள் கவணத்தில்கொள்ளவில்லை என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. புதிய ஏற்பாட்டில் காணப்படும் அநேக நிகழ்வுகளை இந்தப் பண்டைய வரலாற்று வல்லுநர்கள் (யூதா, கிரேக்க மற்றும் ரோம) கிறிஸ்தவர்களாக இல்லாத போதிலும் உறுதிசெய்கின்றனர்.
வேதாகமம் முழுவதும் முரண்பாடானது என்று சிலர் சொல்வது உண்மையா? காணப்படும் முரண்பாடுகள் வேதாகமத்தின் அளவு மற்றும் வரையரையின் படி பார்க்கும் போது மிகக் குறைவானதே ஆகும். காணப்படும் முரண்பாடுகள் பிரச்சனையை அல்ல ஆர்வத்தையே எற்படுத்துகிறது. அவைகள் எந்த முக்கியமான நிகழ்வுகளையும் அல்லது விசுவாசத்தையும் தொடர்புடையவைகள் அல்ல.
இங்கு முரண்பாடுகள் என அழைக்கப்படுபவைகளின் சில உதாரணங்களைப் பார்க்கலாம். பிலாத்து இயேசு அறையப்படும் சிலுவையில் சிறு பலகை பெறிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். மூன்று சுவிசேஷங்களும் அந்தப் பலகையில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று குறிப்பிடுகின்றன:
மத்தேயு: “இவர் யூதர்களின் இராஜாவாகிய இயேசு”
மாற்கு: “யூதர்களின் இராஜா”
யோவான்: “யூதர்களின் இராஜாவாகிய நசரேயனாகிய இயேசு”
வார்த்தைகளின் வித்தியாசம் ஒரு வேளை முரண்பாடாகக் காணப்படலாம். இங்குக் குறிப்பிடதக்கது என்னவென்றால், மூன்று ஆசிரியர்களும் ஒரே நிகழ்வை குறிக்கும் போது இதைக் குறிப்பிட்டிருக்கின்றனர். அது இயேசு சிலுவையில் அறையப்பட்டதே ஆகும். இதனில் அவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இசைந்திருக்கின்றனர். மேலும் அவர்கள் அந்தச் சிறு பலகை சிலுவையின் மேல் பொறிக்கப்பட்டது மற்றும் அதனில் எழுதப்பட்ட வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதும் இம்முன்று சுவிசேஷத்திலும் காணப்படுகிறது.
எழுதப்பட்ட சரியான வார்த்தை என்ன? சுவிசேஷத்தின் மூல பாஷையான கிரேக்கத்தில் நாம் இன்று பயன்படுத்துவது போல் நேரடி குறியீட்டை அவர்கள் பயன்படுத்துவது இல்லை. சுவிசேஷ புத்தகத்தை எழுதியவர்கள் மறைமுகக் குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர் எனவே அவைகளே சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும்.
காணப்படும் முரண்பாட்டிற்கு மற்றொரு உதாரணத்தை இங்குக் காணலாம். இயேசு உயிர்தெழுவதற்கு முன் கல்லரையிலிருந்தது இரண்டு இரவுகளா அல்லது மூன்று இரவுகளா? இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு சொன்னார், “யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்” (மத்தேயு 12:40). மாற்கு இயேசு சொன்ன மற்றொரு வாக்கியத்தைக் குறிப்பிடுகிறார், “இதோ, எருசலேமுக்குப் போகிறோம், அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறதேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்;, ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.”(மாற்கு 10:33-34)
இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டார் மற்றும் அவர் ஞாயிற்றுகிழமை உயிர்தெழுந்தார் எனக் காணப்படுகிறது. எனவே இது எப்படி மூன்று இரவு மற்றும் மூன்று பகலாகக் கல்லரையில் இருந்திருப்பார்? இரவு அல்லது பகலின் எந்த ஒரு பகுதியும் ஒரு முழு நாளாகவும் இரவாகவும் கருதப்படுவது இயேசுவின் நாட்களில் இருந்த யூதர்களின் உருவக சொல்லாகும். எனவே இயேசுவின் கலாச்சாரத்தின் படி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுகிழமை மூன்று நாள் மற்றும் மூன்று பகலாகக் கருதப்படுகிறது. இன்றைய தினத்திலும் இது போலவே நாம் பேசுகிறோம்-- நான் நாள் ழுமுவதும் பொருட்களை வாங்குவதில் செலவுசெய்தேன் என்று சொல்லும் போது அவர் 24 மணி நேரமும் அவ்வாறாகச் செலவிடவில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.
இது புதிய ஏற்பாட்டில் காணப்படும் தனிதன்மையான முரண்பாடுகள் ஆகும். அநேக முரண்பாடுகள் வசனத்தைக் குறிப்பாய் பார்க்கும் போது அல்லது வரலாற்றுப் பின்னனியத்தைப் படிக்கும் போது தீர்க்கப்படுகிறது.
இன்று புதிய ஏற்பாட்டிளுள்ள புத்தகங்களின் பட்டியலை நாம் விசுவாசிக்க முக்கியக் காரணங்கள் இருக்கிறது. புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் எழுதப்பட்ட உடன் அவைகள் சபைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தப் புத்தகங்களை எழுதியவர்கள் இயேசுவின் சிநேகிதர்கள் அல்லது சீஷர்கள், இயேசுவினால் ஆதி சபையில் தலைமைத்துவத்தில் நிர்ணயிக்கப்பட்ட சீஷர்களின் சீஷர்கள். மத்தேயு மற்றும் யோவான் இயேசுவின் நெருங்கிய சீஷர்கள். மாற்கு மற்றும் லூக்கா அப்போஸ்தலர்களின் சீஷர்கள் அவர்கள் இயேசுவின் வாழ்கையைக் குறித்து அப்போஸ்தலர்கள் மூலம் அறிந்துக்கொண்டவர்கள்.
மற்ற புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இயேசுவோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்: யாக்கோபு மற்றும் யூதா இயேசுவின் சகோதரர்கள். இவர்கள் முதலில் இயேசுவை விசுவாசிக்கவில்லை. பேதுரு அவருடைய 12 சீஷர்களுள் ஒருவர். பவுல் முதலில் கிறிஸ்தவத்தை வண்மையாக எதிர்ப்பவராகவும் மதக்குருக்களின் வம்சவழியில் வந்தவராகவும் இருந்தார். ஆனால் பின்பு இயேசு மரித்து உயிர்த்தார் என்பதை விசுவாசித்து அவருடைய ஆர்வமிக்கச் சீஷராக மாறினார்.
புதிய ஏற்பாட்டின் புத்தகங்கள்; ஆயிரக்கணக்கானவர்களின் சாட்சிகளையே வெளிப்படுத்துகிறது. எத்தனையோ புத்தகங்கள் நூறாண்டுகளக்கு பின்பு எழுதப்பட்டிருப்பினும் அவைகள் உண்மையானவைகள் அல்ல என்பதைச் சபை கண்டுக்கொள்வதில் எந்தக் கடினமும் இல்லை. உதாரணமாக. யூதாவின் சுவிசேஷம் யூதாவின் மரணத்திற்குப் பின்பு ஞானக் கோட்பாட்டாளர்களால் (ஞாஸ்டிக்) கி.பி. 130-170 ஆண்டுகளில் எழுதப்பட்டது. தோமாவின் சுவிசேஷம் கி.பி. 140ம் ஆண்டில் அப்போஸ்தலர்களின் பெயரில் எழுதப்பட்டது. இவைகள் மற்றும் அநேக ஞானக் கோட்பாட்டுச் சுவிசேஷங்கள் இயேசுவின்; மற்றும் பழைய ஏற்பாட்டின் உபதேசத்திற்கும் முரண்பட்டதாகவும் மற்றும் வரலாற்று மற்றும் இடங்களைக் குறித்த குறிப்புகளில் தவறுகளும் காணப்படுகின்றன.10
கி.பி 367 -ல் அதானாசியஸ் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் 27 என்று குறிப்பிட்டார் (இன்று நம்மிடம் இருக்கும் அதே புத்தகங்கள் பட்டியல்). அதற்குப் பின்பு ஜெரோம் மற்றும் அகஸ்டின் இதே புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டனர். இந்தப் பட்டியல் அநேக கிறிஸ்தவர்களுக்குத் தேவை இல்லை என்ற போதிலும். கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின் இவைகளைப் பெருவாரியான சபைகள் இந்தப் புத்தகங்களில் பட்டியலை அங்கிகரித்துப் பயன்படுத்தி வந்தனர். சபையானது கிரேக்க மொழி பேசும் மக்களைக் கடந்து வளர்ந்த போது வசனங்களை மொழிபெயர்க்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது மற்றும் பிரிவுகள் ஏற்பட்டன அவர்கள் அவர்களுடைய பரிசுத்த புத்தகங்களைப் பின்பற்றினர், இவைகள் நிறந்தரமான புத்தகப் பட்டியலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உருவாக்கியது.
இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலுக்குப் பின் சுவிசேஷ புத்தகங்கள் எழுதப்படுவதற்கான காரணம் அவைகளுக்கான அவசியம் இல்லாததே முக்கியக் காரணம் ஆகும். முதலில் சுவிசேஷம் வாய் மொழியாக எருசலேம் பகுதிகளில் பிரஸ்தாபப்படுத்தப்பட்டது. எனவே இயேசுவின் வாழ்க்கையை எழுத்து வடிவில் அமைக்க அவசியம் இல்லை. ஏனென்றால் எருசலேமில் இருந்தவர்கள் இயேசுவின் சாட்சிகள் மற்றும் அவருடைய ஊழியத்தை நன்கு அறித்தவர்களாக இருந்தனர்.11
சுவிசேஷம் எருசலேமிற்க்கு அப்பாற்பட்ட பகுதிகளில் பிரசங்கிக்கப்பட்ட போது அங்குக் கண்கண்ட சாட்சிகள் இல்லை, எனவே இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தைக் குறித்த மற்றவர்களுக்குப் போதிக்கச் சுவிசேஷ புத்தகங்கள் எழுதப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. அநேக இறை வல்லுநர்கள் சுவிசேஷ புத்தகங்கள் இயேசுவின் மரணத்திற்குப் பின் 30 இருந்து 60 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.
லூக்கா தன்னுடைய சுவிசேஷத்தின் ஆரம்பத்தில் அதை எழுதுவதற்கான நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்: “மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாயத் தோன்றிற்று.”12
இயேசுவை குறித்து மேலும் அறிய இந்தக் கட்டுரை நல்ல சுருக்கத்தைத் தருகிறது: குருட்டு விசுவாசத்திற்கு அப்பால்.
ஆம். விசுவாசத்திற்கு ஏதேனும் மதிப்பு இருக்குமேயானால் அது உண்மை மற்றும் நிஜத்தின் அடிப்படியிலானது. ஏன் என்று இங்குப் பார்க்கலாம். நீங்கள் லண்டனுக்கு விமானத்தில் செல்ல தீர்மானிக்கும் போது, விமானம் பறக்கும் மற்றும் இயந்திரங்கள் நம்பத்தகுந்தது, விமானி பயிற்சி பெற்றவர் மற்றும் எந்தத் தீவிரவாதிகளும் விமானத்தில் இல்லை என்கிற விசுவாசம் உங்களுக்கு வேண்டும். எனினும் உங்கள் விசுவாசம் உங்களை லண்டனுக்குக் கொண்டு செல்வதில்லை. நீங்கள் விமானத்தில் ஏறுவதற்கு உங்களுடைய விசுவாசம் உதவியாக இருக்கும். ஆனால் விமானம் மற்றும் விமானியின் நாணயமே உங்களை லண்டனில் கொண்டு போய்ச் சேர்த்தது. நீங்கள் உங்களுடைய நேர்மறையான விமான அனுபவத்தைச் சார்ந்து கொள்ளலாம். ஆனால் உங்களின் நேர்மறையான அனுபவம் விமானத்தை லண்டனில் சேர்க்க போதுமானது அல்ல. விசுவாசத்தின் குறிக்கோளே இங்கு முக்கியம் ஆகும் - இது நம்பத்தகுந்ததாக இருக்கிறதா?
புதிய ஏற்பாடில் இயேசுவை குறித்த தகவல்கள் சரியானதா மற்றும் நம்பத்தகுந்ததா? ஆம். நாம் புதிய ஏற்பாட்டை நம்பலாம் ஏனென்றால் அநேக நம்பத்தகுந்த ஆதாரங்கள் அவைகளுக்கு இருக்கின்றன. இந்தக் கட்டுரை கீழ்கண்ட குறிப்புகளின் தகவல்களைத் தருகிறது: வரலாற்று வல்லுநர்களின் கருத்து ஒற்றுமை, தொல்பொருள் ஆராய்சியாளர்களின் கருத்து ஒற்றுமை, நான்கு சுவிசேஷத்தில் காணப்படும் வாழ்க்கை குறிப்புகளின் ஒற்றுமை, பாதுகாக்கப்பட்ட ஆவணத்தின் நகல் குறிப்பிடதக்கது, மொழிப்பெயர்ப்பு முழுமையாக நேர்த்தியாய் இருத்தல். இவை அனைத்தும் நாம் இன்று வாசிப்பது மூல முதலான ஆசிரியர்களால் தங்களின் வாழ்க்கiயில் உண்மை அனுபவம் மற்றும் மூல இடத்தில் இருந்து எழுதப்பட்டது என்பதை விசுவாசிக்கச் சரியான அடிப்படையாக இருக்கின்றது.
ஆசிரியர்களுல் ஒருவரான யோவான் சுருக்கமாகச் சொல்லுவது, “இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும் படியாகவம். இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.”13
► | கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி? |
► | எனக்கு ஒருக் கேள்வி உண்டு... |
(1) Strobel, Lee. The Case for Christ (Zondervan Publishing House, 1998), p. 132. (2) The renowned Jewish archaeologist, Nelson Glueck, wrote: "It may be stated categorically that no archaeological discovery has ever controverted a biblical reference." cited by McDowell, Josh. (3) Strobel, p. 143-144. (4) Geisler, Norman L. Baker Encyclopedia of Christian Apologetics (Grand Rapids: Baker, 1998). (5) McDowell, Josh. Evidence That Demands a Verdict (1972), p. 19. (6) McDowell, Josh. The New Evidence that Demands a Verdict (Thomas Nelson Publishers, 1999), p. 55. (7) Tacitus, A. 15.44. (8) Wilkins, Michael J. & Moreland, J.P. Jesus Under Fire (Zondervan Publishing House, 1995), p. 40. (9) Ibid. (10) Bruce, F.F. The Books and the Parchments: How We Got Our English Bible (Fleming H. Revell Co., 1950), p. 113. (11) பார்க்க அப்போஸ்தலர் 2:22, 3:13, 4:13, 5:30, 5:42, 6:14, மேலும் பல (12) லூக்கா 1:1-3 (13) யோவான் 20:30,31