-ஸ்டீவ் சாவர்
மைனே கடற்கரையில், அடர்த்தியான பனியில் கப்பல்படை கப்பல் ஒன்று போய்கொண்டிருந்தது. அந்த இரவிலே கப்பல் பணியாளர் தூரத்தில் இருக்கும் ஒரு வெளிச்சத்தைப் பார்த்து உடனடியாகக் கேப்பனிடம் தெரிவித்தார். தொலைதூரத்திலிருந்து ஒரு வெளிச்சம் நம்மை நோக்கி வருகிறது, நாம் இப்பொழுது என்ன செய்வது? அந்தக் கப்பலுடைய பாதையை மாற்றும் படியாக அவர்களுக்கு வெளிச்சத்தின் மூலம் அடையளத்தைக் காட்டு என்று கேப்டன் சொன்னார். அந்தக் கப்பல் திரும்ப அடையாளத்தைக் காட்டி இவர்களைப் பாதை மாறும்படி சொன்னது. மீண்டும் கேப்டன் கப்பல் பணியாளரிடம் வருகிற கப்பலுக்கு அவர்களுடைய பாதையை உடனடியாக மாற்றும் படி கட்டளை கொடு என்று சொன்னார். ஊங்களுடைய பாதையை மாற்றுங்கள் என்று மீண்டும் அவர்கள் பதிலளித்தனர். கடைசியாகக் கப்பலின் பணியாள் வருகிற கப்பலை நோக்கி, இது அமெரிக்காவின் கப்பல் படை கேப்டனுடைய போர் கப்பல் எனவே நீங்கள் உங்களுடைய பாதையை மாற்றுங்கள் என்று சொன்னான். நீங்கள் பாதையைத் திருப்புங்கள் ஏனென்றால் இது கலங்கறை விளக்கு என்று பதில் வந்தது.
மனிதனாக நாம் எப்படி நம்முடைய வலிகளையும் பாடுகளையும் கையாள முயற்சிக்கிறோம் என்பதற்கு இந்தக் கதை உதாரணமாக இருக்கிறது. நாம் எப்பொழுதும் நாம் மாறி நம்முடைய சூழ்நிலையைச் சந்திப்பதற்குப் பதிலாக நம்முடைய சூழ்நிலை தன்னுடைய வழியை மற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். என்னுடைய வாழ்க்கை இதற்குச் சரியான உதாரணமாக இருக்கிறது.
நான் பிறக்கும் போதே இரத்த கசிவு நோயோடு பிறந்தேன். இந்த வியாதி என்னுடைய எலும்புகளையும் கனுக்களையும் காரணமில்லாமல் வீங்கச் செய்தது. இந்த இரத்தக்கசிவு நோயானது எனக்கு வழங்கப்படும் இரத்தத்தில் இருந்து உண்டாகும் புரோதசத்தின் உதவியால் சிகிச்சையளிக்கப்படும். ஏரத்தாள 1980-1983 –ல் எனக்கு இரத்தம் கொடுத்த ஒரு குறிப்பிட்ட நபருக்கு எச்.ஐ.வி வைரஸ் தாக்கி இருந்தது. இதனால் அந்த மருத்துவ மையத்திலிருந்து நான் பெற்ற எல்லா மருந்துக்களும் எச்.ஐ.வி –யால் தாக்கப்பட்டிருந்தது. இதன் மூலமாகத் தான் எனக்குக் கல்லீரல் வீக்கம் ஏற்பட்டது.
பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டுப் படித்து முடிக்கும் வரை எனக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பது எனக்குச் சொல்லப்படவில்லை. அது எனக்கு முதலில் சொல்லப்பட்ட போது எல்லோரையும் போல நான் கையாள முடியாத பிரச்சனையைக் கையாளுகிறவனைப் போலவே நான் நடந்துகொண்டேன். எனக்கு எய்ட்ஸ் இருப்பதை மறுத்து அது இல்லாதவனைப் போலவே நான் நடந்துக்கொண்டேன். எய்ட்ஸ் இரத்தக்கசிவு நோயை போல என்னை வேதனைப்படுத்தவில்லை. இரத்தக்கசிவு நோயினால் என்னுடைய எழும்புகளும் கனுக்களும் வீக்கமடையும் அது மிக வேதனையானது. எய்ட்ஸ் -க்கு வெளிப்படையான அடையாளம் எதுவும் தெரியாது. இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது எனவே இதைப் பிறரிடம் மறைப்பது எளிதான காரியம். இந்த வழியில் தான் என்னுடைய பெற்றோரும் இந்தப் பிரச்சனையைக் கையாண்டனர். அவர்கள் என்னிடம் நீ பார்க்க நன்றாக இருக்கிறாய், உனக்குப் பிரச்சனை இருப்பது போல் தெரியவில்லை, உனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று சொல்வார்கள்.
இந்த விதமான மறுப்புக்கு சிறந்த உதாரணம் மோன்டி பைதோன்ஸ் இன் சர்ச் ஆப் தி ஹோலி கிரயல் என்கிற திரைப்படமே. இதனில் ஒரு காட்சியில் அரசர் ஆர்தர் குதிரையில் நடையாய் வனாந்தரத்தில் வந்துக்கொண்டிருக்கும் போது அவர் கருப்பு போர் ஆபரணம் தரித்திருந்த ஒரு வீரனை பார்த்தார். அந்த வீரர் இந்த அரசனை வழிமறித்தார், அப்பொழுது இராஜா புரிந்துக்கொண்டார் இந்த வீரனை யுத்தம் செய்து வெற்றிப் பெறாமல் அவரால் அங்கிருந்து புறப்பட முடியாது என்று. யுத்தம் தொடங்கியது இராஜா இந்தக் கருப்பு வீரனுடைய கையைத் துண்டித்தார். இராஜா தன்னுடைய வாலையும், வில்லையும் உரையிலிட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தார், ஆனால் இந்த வீரன் இல்லை, நில்லுங்கள் என்று சொன்னான். இராஜா சொன்னார் நான் தான் உன்னுடைய கையை வெட்டிவிட்டேனே என்று. அந்த வீரன் இராஜாவை நோக்கி இல்லை நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்றான்! இராஜா கீழே பார் அங்கு உன்னுடைய கை கீழே இருக்கிறது என்றான். அப்பொழுது அந்த வீரன் “அது வேறும் சதைதான் என்றான்.” அப்பொழுது இராஜா இந்த வீரனை தான் வெற்றி பெற அவன் இதை விடப் பயங்கரமான காயத்தைப் பெற வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டார். யுத்தம் தொடங்கியது ஆர்தர் அந்த வீரனுடைய அனைத்து உடல் பாகங்களையும் துண்டித்து எடுத்தார். அந்த வீரன் தரையில் தலையை உன்றி விழுந்தான். பின்னர் இராஜா புறப்பட்டுப் போகும் போது அந்த வீரன் இராஜாவை நோக்கி “கோழையே திரும்பிவா நான் உன்னுடைய முட்டை கடித்து எடுத்து விடுவேன் என்றான்.
இங்கு அந்த வீரன் தன் தோல்வியை மறுத்தான் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. அவன் அந்த யுத்தத்தில் தோல்வியை அடைந்தான் என்பதை அவனால் சந்திக்க முடியவில்லை. இது மறுப்புக்கு ஒரு நகைச்சுவையான உதாரணம். மறுப்பதினால் ஏற்படும் விளைவுகள் மிக மிக ஆபத்தானது. நான் தொடர்ந்து எச்.ஐ.வி –யை மறுத்து வந்தேனேயானால், முன் எச்சரிக்கையாக இருந்து அதைத் தடுப்பதை விட்டுவிட்டு சிறிய வெட்டுகாயத்தின் மூலமாகவோ அல்லது மற்ற காயத்தின் மூலமாகவோ பிறரை கொன்று விட வாய்ப்பு இருக்கிறது. இதைப் போன்ற காரியங்களை நாம் மறுப்பதே மிக ஆபத்தானது மற்றும் மிக வேதனைக்குரியது. இருக்கிற காரியத்தை இல்லை என்று பல வருடங்கள் மறுக்கிறபோது அது ஒரு நாள் வெடித்து வெளிப்படும்.
நான் எனக்கு எச்.ஐ.வி இருப்பதை மூன்று ஆண்டுகள் மட்டுமே மறுத்து வர முடிந்தது. என்னுடைய உயர்கல்வி படிப்பிலே நான் மிகவும் சுகவீனம் அடைந்தேன். நோயிற்குரிய அறிகுறிகள் என்னிடத்தில் காணப்பட ஆரம்பித்தது. வெள்ளை உயிரணுக்களான வு உயிரணுக்கள் நோயை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் எந்தனை வு உயிரணுக்கள் உங்கள் உடலில் உள்ளதோ அவைகள் உங்களுக்கு எச்.ஐ.வி இருக்கிறதா அல்லது எய்ட்ஸ் இருக்கிறதா என்பதைத் தெரிவிக்கின்றன. எப்பொழுது உங்கள் வு உயிரணுக்கள் 200 –க்கும் குறைவாக இருக்கிறதோ அப்பொழுது நீங்கள் முழுமையான எய்ட்ஸ் வியாதியஸ்தர் எனக் கணிக்கப்படுகிறீர்கள். என்னுடைய வு உயிரணுக்கள் எண்ணிக்கை 213 ஆக இருந்தது மற்றும் குறைய ஆரம்பித்தது. நான் மிகச் சுகவீனமானேன், என் உடல் வெளுக்க ஆரம்பித்தது என்னால் உணவு சரியாகச் சாப்பிட முடியவில்லை.
மறுப்பது நிரந்தரத் தீர்வை எனக்குத் தரவில்லை எனவே நான் கடந்து போய்க் கொண்டிருக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் கையாள எனக்குப் புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டியது இருந்தது. முதலில் பிரர் மீது குறை சொல்ல ஆரம்பித்தேன். யாராவது என்னிடம் கடந்து வந்து ஸ்டீவ் இது என்னுடைய குற்றம் என்னை மன்னித்துக்கொள் என்று சொன்னால் எனக்குச் சந்தோஷமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். எனவே ஆரம்பத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அனைவரையும் நான் குறை சொல்ல ஆரம்பித்தேன். தப்பிப்பதற்கு இது எளிதான வழி. ஆனால் என்னுடைய பிரச்சனைக்காக முழுக் கூட்டத்தாரையும் குறை கூறுவது தவறு என்று பின்னர் நான் உணர்ந்தோன். பின் தேவனைக் குற்றம் சொல்ல ஆரம்பித்தேன். அப்பொழுது நான் தேவனை உண்மையாக விசுவாசிக்க வில்லை ஆனால் தேவன் ஒருவருக்கு எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். எனவே நான் தேவனைக் குறை கூறினேன்.
உங்களுடைய அனைத்து வேதனையையும் ஒரே இடத்திற்குத் திருப்பும் போது அது கோபமாக மாறுகிறது. இறுதியாக அது ஆத்திரமாக மாறுகிறது. இப்பொழுது நான் செய்யும் எல்லாவற்றையும் ஆத்திரத்தோடு செய்ய ஆரம்பித்தேன். யாராவது ஏதேனும் எப்பொழுதாவது சொன்னால் ஆத்திரத்தில் அவர்கள் மீது எரிந்து விள ஆரம்பித்தேன். சுவற்றைக் குத்தினேன். என்னுடைய அறையைச் சீர்குலைத்தேன். இது போலக் காரியங்களைச் செய்ய ஆரம்பித்தேன்.
கோபம் உங்களுடைய சிந்தையை மயக்கி விடும் மற்றும் அது உங்களைச் சிந்தித்துச் செயல்பட அனுமதிக்காது என்பதைக் கண்டுக்கொண்டேன். இந்தச் செயல்பாட்டில் மோசமானது என்னவென்றால் அது உங்களை அதிகமாக நேசிப்பவர்களையும் காயப்படுத்திவிடும். வலியை கையாள சிறந்த வழி அழுவதே ஆகும் ஏனென்றால் அது ஒருவரையும் காயப்படுத்தாது மற்றும் அது உண்மையாகவே நல்ல உணர்வை தரும்.
ஒரு நாள் நான் என்னுடைய அறையிலிருக்கும் போது மிக மோசமான நிலைக்குக் கடந்துச்சென்றேன். மிகவும் சுகவீனமாடைந்தேன் மற்றும் எனது உடல் எடை மிகக் குறைவானது. நான் கதறி அழுது தேவனைச் சபித்து, சுவற்றைக் குத்திக் கொண்டிருந்தேன் அப்பொழுது என்னுடைய தந்தை என் அறைக்குள் வந்தார். அவர் கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தார். என்னுடைய தந்தை குடிப்பழக்கத்திலிருந்து மாறிக்கொண்டிருந்தார். யுயு மூலம் அவர் அதிக வல்லமை மற்றும் தேவனைப் பற்றிக் கற்றுக்கொண்டார். என் தந்தை என்னைப் பார்த்து, ஸ்டீவ் என்னால் உனக்கு உதவி செய்ய முடியாது என்று உனக்குத் தெரியுமா, அதே போல உன்னாலும் உனக்கு உதவ முடியாது, இப்பொழுது உனக்கு உதவி செய்யக்கூடிய ஒரே ஒருவர் தேவன் மட்டுமே என்று சென்னார். பின்னர் அவர் அறையை விட்டு வெளியே போய்க் கதவை அடைத்து விட்டு சென்றார்.
இப்பொழுதுதான் நான் தேவனைச் சபித்துக்கென்டிருந்தேன் எனவே இது தேவனிடத்தில் உதவி கேட்க சரியான நேரம் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அங்கு எனக்கு வேறு வழியில்லை. நான் முழங்காலிட்டு கண்ணீரோடு சொன்னேன், சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் இருப்பீர் என்றால், எனக்கு உதவி செய்யும், நான் உமக்கு உதவி செய்வேன் என்று சொன்னேன். குறுகிய காலத்திலேயே நான் இழந்த அனைத்து உடல் எடையையும் திரும்பப் பெற்றுக்கொண்டேன். என்னுடைய வு உயிரணு 365 ஆக உயர ஆரம்பித்தது. நான் சந்தோஷப்பட ஆரம்பித்தேன். நன்றி ஆண்டவரே, உதவிக்கு நன்றி நான் வருகிறேன் என்ற உணர்வுக்கு வந்தேன்.
நான் பள்ளி படிப்பை முடித்துக் கல்லூரிக்கு என்னுடைய முதல் ஆண்டுக்கு முன் நுழைவு தேர்வு எழுத சென்றேன். அப்பொழுது என்னுடைய ரூம்மேட் -டை சந்தித்தேன். அங்குச் சென்று என்னுடைய தேர்வை முடித்தேன் அப்பொழுது அங்கு இந்த உயரமான, ஓல்லியான பொன்னிறமான குழந்தை நின்று கொண்டிருந்தான். நீ பார்க்க சாதாரணமாக இருக்கிறாய் என்னுடைய ரூம்மேட் -டாக இருக்க உனக்கு விருப்பமா? என்று என்னிடம் கேட்டான். நான் உன்னால் முடியாது ஆனால் எனக்குச் சரி என்று நினைத்துக்கொண்டு சரி என்று சொன்னேன். நாங்கள் ரூம்மேட்டானோம் பின்னர் நல்ல நண்பர்களாகவே மாறினோம். அவன் கிறிஸ்தவன் என்பதை நான் அறிந்துகொண்டேன். அது வரை எனக்குக் கிறஸ்தவர்கள் என்றால் யார் தெரியுமா, அவர்கள் பாசாங்கு செய்பவர்கள், கருணையுள்ளவர்கள், கண்டணம் செய்கிறவர்கள். இப்படிதான் கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய ரூம்மேட் வித்தியாசமானவன்.
அவனுக்குப் புரிந்து படிக்க இயலாமை பிரச்சனை இருந்தது. எனக்குச் சுவற்றைக் குத்தி பொருட்களைச் சேதப்படுத்தும் பழக்கம் இருந்தது போலவே அவனுக்கும் படிக்க முடியாமையினால் விரக்தி அடைவதை நான் கவனித்தேன். அப்பொழுது அவன் நிறுத்தி விட்டு, கண்களை மூடி ஜெபம் செய்து விட்டு மீண்டும் படிக்க ஆரம்பிப்பான். அது என்னைச் சிந்திக்க வைத்தது. நீ எப்படி எதையும் உடைக்கவில்லை? நீ எதையாவது உடைக்க வேண்டும்! என நினைத்தேன். அவன் இப்படிச் செய்தது எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.
என் ரூம்மேட் என்னை மழைகால விடுமுறையின் போது டேடோனா கடற்கரைக்குக் கூட்டிக்கொண்டு சென்றான். நாங்கள் கடற்கரையில் இருக்கும் போது என்னுடைய நண்பன் அவன் அருகில் இருக்கும் மற்ற நண்பனோடு பேச ஆரம்பித்தான். முதலில் நாங்கள் பொதுவான காரியங்களைப் பேச ஆரம்பித்தோம். பின்னர் என்னுடைய நண்பர்கள் சில கடினமான காரியங்களைப் பேச ஆரம்பித்தனர். நான் அதனில் கலந்துக்கொள்ள விரும்பவில்லை. நான் அநேக காரியங்களில் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். அந்த இளமை பிராயத்தில் மரிக்கப் போகிறோம் என்பதை அறிந்திருப்பது மிகக் கடினமானது. இதை அறியாத நண்பர்களிடம் நான் உண்மையிலேயே பேச விரும்பவில்லை. எனவே நான் அவர்களுடைய உரையாடலில் அதிகமாகப் பங்கு பெறவில்லை. அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர் இறுதியில் என்னுடைய நண்பன் கிறிஸ்தவத்தைப் பற்றி அவனுடைய நம்பிக்கை என்ன என்பதைப் பகிர்ந்துக்கொள்ள ஆரம்பித்தான். எனக்குக் கிறிஸ்தவர்கள் யார் என்கிற எண்ணம் இருந்து கொண்டிருந்தது எனவே அவர்களுடைய விசுவாசம் என்ன என்று எனக்குத் தெரியாது. எனவே அவன் சொல்வதை நான் கவணிக்க ஆரம்பித்தேன்.
அவன் என்ன சொன்னான் என்பதை எனக்கு அப்படியே விளக்க முடியாது, அனால் இப்படிச் சொன்னான்: நான் தேவனை விசுவாசிக்கிறேன். தேவன் நாம் அவரோடு ஐக்கியப்பட வேண்டும் என்பதற்காகவே சிருஸ்டித்திருக்கிறார். ஆனால் நாம் அந்த ஐக்கியத்தில் இருக்க விரும்புகிறது இல்லை. எனவே நாம் அவரை விளக்கி விடுகிறோம். நாம் தேவனை விளக்குவதே முரட்டாட்டம் ஆகும். இது முரட்டாட்டமாக இருக்கலாம் அல்லது செயல்படுத்த நமக்கு இருக்கும் அலட்சியமாக இருக்கலாம் ஆனால் வேதாகமம் இதைப் பாவம் என்று அழைக்கிறது. பாவம் என்கிற வார்த்தை எனக்குப் பிடிக்காது எனவே நான் இதைத் தேவனை விட்டு விளகுவது என்றே சொல்ல விரும்புகிறேன். நாம் அவரோடு ஐக்கியப்படுவதற்காகப் படைக்கப்பட்டு அவரை விளக்குவதனால் நமக்கு ஆக்கினை இருக்கிறது. நம்முடைய கீழ்படியாமைக்குரிய தண்டனை மரணம். ஆவிக்குரிய மரணம் இருக்கிறது, நாம் அவரிடமிருந்து விளக்கப்படுவோம். அது எனக்குச் சந்தோஷம் என்று நான் நினைத்தேன்.
ஆனால் தேவன் நம்மை நேசிக்கிறார் என்று நான் சொன்னேன்;. மேலும் தேவன் நீதியுள்ளவர் என்றும் நீதியில்லாத அன்பு வெறுமையானது என்றும் அவன் சொன்னான். அதனில் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவன் சொன்னான், நீ அதிகமாக அக்கரை செலுத்தும் ஒரு நபரை நீ நினைத்துக்கொள், அந்த நபர் உனக்கு உடனே தன்னுடைய வாழ்க்கையைக் கொடுப்பாரா. இப்பொழுது அந்த நபரை நீ விளக்கி விடு மற்றும் அவரைப் பார்பதை நீண்ட நாட்களாக நிறுத்திவிடு. ஒரு நாள் அந்த நபரை ஐம்பது அடி தொலைவில் பார்க்கிறாய் உடனே நீ ஒடிப்போய்க் கட்டி அனைக்க நீ நினைக்கிறாய் ஆனால் அந்த நபரோ நீ என்னை விளக்கி விட்டாயே அது உனக்கு நினைவில்லையா? என்று சொல்கிறார். இப்பொழுது உலகத்தில் அதிக அன்பு செலுத்தும் தேவனை நீ விளக்குவதை நினைத்துப்பார்.
நான் இது சரியல்ல என்று நினைத்தேன். உண்மையில் இது இங்கு முடியவில்லை ஏனென்றால் அவர் நம்மை நேசிக்கிறார், நம்மீது கருசனை அதிகமாகச் செலுத்துகிறார் எனவே அவர் நாம் செலுத்த வேண்டிய பணயத்தொகையை அவர் செலுத்த தீர்மானித்தார். அவர் அவருடைய குமாரன் இயேசுவை அனுப்பினார், அவர் நமக்காக நம்முடைய ஸ்தானத்தில் மரித்தார். இயேசு பாவமற்ற வாழ்க்கையை வாழ்ந்ததினால் அவர் நமக்காகப் பணயத்தொகை செலுத்த முடிந்தது. அவர் நமக்காகக் கிரயம் செலுத்தினார் என்று அவன் சொன்னான்.
இயேசு மரித்து முன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தார். அவர் ஆவிக்குரிய மரணத்தை வெற்றிச்சிறந்தர் மற்றும் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். நம்முடைய மரணம் அது முடிவு அல்ல நாம் நம்மை நேசிக்கிற தேவனோடு நம்முடைய நித்தியத்தைச் செலவிடப் போகிறோம் என்று அவன் சொன்னான்.
நான் இது அற்புதம் என்று சொன்னேன். அவன் தொடர்ந்து எங்களிடம் கூறியது, ஆனால் “இதில் முக்கியமானது என்னவென்றால் அவர் நமக்கு இந்த வாய்ப்பினை அழித்தும் நமக்காகக் கிரயத்தைச் செலுத்தியிருந்த போதும்; அவரை நாம் இன்னும் ஏற்றுக்கொள்ளவிட்டால்..... அது உன்னைப் பொருத்தது”. இது எனக்கும் இதைக் கேட்டக்கொண்டிருந்த மற்றொரு நண்பருக்கும் சரியாகப் புரியவில்லை. என்னுடைய நண்பன் சொன்னான், நீங்கள் இந்தச் சாலையில் வாகனத்தில் பிரயானம் செய்கிறீர்கள் என்று யூகிந்துக்கொள்ளுங்கள். வேகத்தினுடைய வரம்பு 35 ஆனால் நீங்கள் 90 –ல் போய்க் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள்; சாலையில் வாகனத்தில் மிக வேகமாகப் போய்கொண்டிருக்கும் போது போலீஸ் உங்களை வழி மறைத்து உங்களுக்கு அபராதம் விதிக்கிறார். அந்த அபராதத்தைச் செலுத்த நீங்கள் மறுநாள் நீதிமன்றத்திற்குப் போக வேண்டும். நீங்கள் நீதிமன்றத்தினுடைய அறைக்குள் சென்று நிமிர்ந்து பார்க்கும் போது அங்கு நீதிபதியாக உங்களுடைய அப்பா அமர்ந்திருக்கிறார். அது என்னுடைய அப்பா என்று நீங்கள் நினைக்கிறீர்கள், உங்கள் அப்பா உங்களிடம் ஸ்டீவ் நீ சட்டத்தை மீறினாய்? என்று கேட்கிறார் நீங்கள் ஆம் என்று சொல்கிறீர்கள். எனவே அவர் உனக்கு ரூ. 500 அபராதம் மற்றும் 2 நாள் சிறைதண்டனை என்று தீர்ப்பு சொல்கிறார். தன்னுடைய கைசுத்தியால் அடித்து அவ்வளவு தான் என்று முடித்துவிட்டார்.
இப்பொழுது அவர் உண்மையும் நியாயமுமானவர் அதனால் அவர் தண்டனையைக் கூறிவிட்டார். பின்னர்த் தன்னுடைய இருக்கையில் இருந்து இரங்கி வந்து ஆடையைக் களற்றி விட்டு தன்னிடத்திலிருந்து ரூ. 500 எடுத்து உனக்குக் கொடுக்கிறார். அவர் உன்னை நேசிக்கிறார் அவர் உனக்காக அந்த அபராத பணத்தைச் செலுத்த போகிறார். ஆனால் நீ அந்தப் பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீ அந்த ரூ. 500 வைத்து அபராதத்தைச் செலுத்துகிறாய். இதைப் போலவே தேவனிடத்தில் நான் என்னுடைய நித்தியத்தை உம்மை விட்டு தனியே செலவிட விரும்புகிறேன் என்று நீங்கள் சொல்லலாம். இது உன்னுடைய விருப்பம் நீயே தேர்ந்தொடுக்க வேண்டும்.
அந்தக் கிரயத்தை நாம் ஜெபத்தின் மூலம் ஏற்றுக்கொள்ள முடியும் என்று என் நண்பன் சொன்னான். நீ தேவனுடைய கிரயத்தை எளிதாக ஏற்றுக்கொள்ளலாம். இது தேவனுடைய கிருபை. இதைப் பெறுவதற்கு நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம். இது தேவனுடைய ஈவு. இப்பொழுது தான் முதல் முறையாக நான் கிருபையைக் குறித்துக் கேள்விப்படுகிறேன். அவன் சொன்னான் இது ஈவு இதை விசுவாசம் மற்றும் ஜெபத்தின் மூலம் பெற முடியும் என்று எனக்குச் சொன்னான். அந்த மற்ற நண்பரோடு இணைந்து என்னுடைய நண்பன் ஜெபம்பண்ணினான். அவர் சத்தமாக ஜெபிக்கும் போது நானும் அமைதியாக ஜெபித்தேன்.
அன்று முதல் என்னுடைய வாழ்க்கை புதிய கோணத்தில் மாறியது. மறுநாள் நான் உயிரோடே இருப்பேனா இல்லையா என்கிற கவலையோடு நான் படுக்கைக்குப் போன நாட்கள் முடிந்து போனது. நான் மரணத்திற்காகப் பயந்த நாட்களும் முடிந்து போனது ஏனென்றால் மரணம் என்பது காரிருள் அல்ல என்பதை நான் அறிந்துக்கொண்டேன். நான் மரித்தால் உலகத்தில் மேன்மையான அன்பையுடையவரோடு என்னுடைய நித்தியத்தைச் செலவிடப்போகிறேன். நான் மிகச் சந்தோஷமாக உணர்ந்தேன்.
என்னுடைய பெற்றோரும் தேவனுடைய கிரயத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நான் தேவனோடு ஜெபித்தது போலவே அவர்களும் ஜெபம் செய்தனர். அவர்களுடைய வாழ்க்கையும் புதிய கோணத்தில் நகர ஆரம்பித்தது. நான் ஆறு மாதங்கள் தான் உயிரோடு இருப்பேன் என்பதை அறிந்த அவர்கள் என்னை அவர்களை விட்டு தனியே பிரயாணம் பண்ண அனுமதித்தது மிகுந்த ஆச்சரியம். அவர்களுடைய மகன் அவர்களுடைய கண் காண சாவதை பார்ப்பது அவர்களுக்கு மிகக் கடினமானது என்பதை நீங்கள் யூகிக்க முடியும். அவர்களால் எந்த விதத்திலும் உதவி செய்ய முடியாது. இந்தப் பிரச்சனையைக் கையாள அவர்களுக்கும் எனக்கும் இருக்கும் ஒரே நம்பிக்கை எங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இயேசு இருக்கிறார் என்பதே.
நான் உங்களுக்குத் தேவனுடைய கிரயத்தைப் பெற்றுக்கொள்ள ஓர் வாய்ப்பை தர முடியும்? உங்களிடம் எய்ட்ஸ் -க்குரிய மருந்து இருக்குமேயானால், நீங்கள் எனக்கு அதைத் தருவீர்கள் இல்லையா. எனக்கு நித்தியத்திற்குப் போவது எப்படி என்று தெரியும் அது தேவனுடைய ஈவு. எனவே அதை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன். நீங்கள் உங்களால் கையாள முடியாத பிரச்சனைகளுக்குள் கடந்து கொண்டிருக்கிறீர்களா, உங்களோடு நிர்க்க யாராவது தேவையா, இந்த முழு உலகமும் உங்களை உதைத்து தள்ளும் போது தூக்கி விட யாராவது தேவையா, முதுகில் குத்துகின்றனரா அப்படியானால் இப்பொழுது நீங்கள் என்னோடு இணைந்து இந்த ஜெபத்தைச் சொல்லுங்கள். இது ஏதே மாயாமோ மந்திரமோ அல்ல. இது ஏதே உணர்வுபூர்வமான பணயமோ அல்லது நினைவோ அல்ல. இது ஒரு முயற்சி. ஆனால் நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன், உங்களுக்கு உண்மையிலேயே இது தேவை என்று நீங்கள் நினைத்தால் இந்த வாய்பை தவற விடாதிருங்கள். இது இலவசம்.
நான் இப்பொழுது ஜெபம் செய்யப் போகிறேன். ஜெபம் என்பது கண்னை மூடுவதோ அல்லது தலையைக் குனிவதோ அல்லது கையைக் கூப்புவதோ அல்லது அல்லேலுயா என்று சத்தமிடுவதோ அல்ல. இது உங்கள் இருதயத்தின் ஒரு வெளிப்பாடு. இது தேவனிடத்தில் தேவனே நான் தவறு செய்து விட்டேன். நான் உம்மைப் புறக்கணித்தேன். உம்முடைய கிரயத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் உம்மிடத்தில் திரும்பி வர நான் விரும்புகிறேன். இது உங்களுக்குத் தேவை என்று நினைத்தால் இந்த ஜெபத்தை இப்பொழுதே சொல்லுங்கள். “ஆண்டவராகிய இயேசுவே எனக்கு நீர் தேவை. எனக்காகச் சிலுவையில் நீர் மரித்தீரே அதற்கு நன்றி. உம்மை என்னுடைய வாழ்க்கையிலே வரவேற்கிறேன். என்னுடைய வாழ்க்கையை நான் விரும்புகிற வண்ணமாகவே மாற்றும். ஆமேன்.”
இப்பொழுது இந்த ஜெபத்தை உண்மையாகவே செய்திருப்பீர்களே ஆனால் நீங்கள் ஒரு நல்ல ஐக்கியத்தைத் தேவனோடு தொடங்கப்போகிறீர்கள். இது ஜெபத்தோடு முடிந்து விடுவது அல்ல. தேவனோடு ஐக்கியம் என்பது செயல்பாடு. இது தேவனைத் தினமும் விசுவாசிப்பது, உங்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீகளோ அல்லது உங்களுக்கு எது விருப்பமோ அதை அல்ல ஆனால் தேவனுக்கு எது விருப்பமோ அதைச் செய்தல். என்னிடத்தில் அநேகர் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள், கிறிஸ்தவம் உனக்குச் சரியானது என்று. மற்ற மதங்கள் பிறருக்கு உதவாதா? இது நல்ல கேள்வி. தேவன் அவரை அடைவதற்கு ஒரே வழியைத் தந்திருக்கிறார் அதுவே இயேசு, அவர் நமக்காகச் சிலுவையில் மரித்தார். மற்ற மார்க்கத்திலும் உண்மைகள் இருக்கலாம் ஆனால் அவைகள் ஒழுக்க நெரிகளே. இதை ஏழு நாள் செய்யுங்கள் இது உங்களைத் தேவனிடத்திற்குக் கொண்டு சேர்க்கும். ஆனால் தேவனைத் தேட முயற்சி செய்வீர்களே ஆனால் எவ்வளவு காரியங்களைச் செய்ய வேண்டியதிருக்கும்? நீங்கள் அந்த அளவை அடைந்து விட்டீர்கள் என்பது உங்களுக்கு எப்பொழுது தெரியும்?
தேவ கிருபையை மையப்படுத்துவதில்; தான் கிறிஸ்தவம் தனித்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நாம் தேவனுடைய பூரணத்தை அடைய முடியாது என்பதை அறிந்து நாம் அவருடைய பாவ மன்னிப்பை சார்ந்துக்கொள்ள முடியும். நமக்கு இது எளிதானதாக இல்லை என்றாலும் அவர் நடக்கும் பாதையில் நடக்க வேண்டும் என்பதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். நாம் தவறலாம் ஆனால் நாம் தொடர்ந்து அவருடைய பதையில் நடக்க வேண்டும் அவருடைய கிருபையை விசுவாசித்துத் தொடர்ந்து முன்நோக்கி செல்ல வேண்டும். நீங்கள் ஜெபியுங்கள். வேதத்தை வாசியுங்கள். தேவனுக்கு உங்களிடத்தில் என்ன வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒரு நாள் நீங்கள் சமாதானத்தைப் பெறுவீர்கள். பரலோகத்தை அடையும் வரை அல்லது நித்தமுமாக இருக்கலாம்.
நீங்கள் ஸ்டீவை போலவே எச்.ஐ.வி அறிகுறி உடையவராக, இரத்தக்கசிவு நோய் உடையவராக அல்லது கல்லீரல் வீக்கமுடையவராக அல்லது மற்ற பிரச்சனைகளைக் கையாளுபவராக இருப்பீர்களே ஆனால் நீங்கள் ஸ்டீவின் மற்றொரு விளக்கத்தைக் கேட்க விரும்புவீர்களே ஆனால் தயவு செய்து பார்க்க: தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிந்துக்கொள்ளுதல்.
► | நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)... |
► | நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள் |
► | எனக்கு ஒருக் கேள்வி உண்டு... |
ஸ்டீவ் சவ்யார் கல்லீரல் வீக்கத்தினால் மார்ச் 13, 1999ல் மரித்தார். ஸ்டீவுடைய வாழ்க்கையில் நடந்தது போலவே இந்த உண்மையான கதை உங்களையும் உற்சாகப்படுத்தட்டும். ஸ்டீவ் தன்னுடைய கடைசி நாட்களில் இன்னும் ஒரு வளாகத்தில் பேச விரும்பினார். ஏன்? என்னைக் கொல்லும் இந்த நோய் ஒரு நபருடைய வாழ்க்கையில் தேவனோடு ஐக்கியப் பட உதவுமேயானால் அது சிறந்தது. நித்தியமே முக்கியம் எனவே தான் அவர் அவ்வாறு விரும்பினார்.
இயேசுவை விசுவாசிப்பதினால் நமக்கு நித்திய வாழ்க்கை உண்டு. நல்ல செயல்களைச் செய்வதினால் நாம் பரலோகத்தை அடைவதில்லை. இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு நித்தியவாழ்க்கை தேவனுடைய ஈவு ஆகும். வேதத்தில் வாசிக்கிறோம்...
தேவன்இ தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்குஇ அவரைத் தந்தருளிஇ இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்துஇ அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். (ஏசாயா 53:6)
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான்5:24)
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (1கொரிந்தியர் 15:55)
தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (5:11-13)
photos : Guy Gerrard and Tom Mills © Worldwide Challenge