கேலிசித்திரம் அல்லது நகைச்சுவை சித்திரத்தில் சாத்தான் அழகானவனாகவும், தீங்கற்ற சோதனை காரணாகவும், வேடிக்கையான அல்லது சிறிது தவறான காரியங்களைச் செய்யும் படி உங்களைத் தூண்டுபவனாகவும் இருக்கிறான். உண்மையில் அவன் எப்படியிருந்தாலும் அழகாக இருக்கிறான்.
யார் இந்தச் சாத்தான்? அவன் தேவனுடைய போலி அல்ல, ஏனென்றால் தேவனுக்குச் சமமானவர் மற்றும் எதிரானவர் யாரும் இல்லை. தேவன் ஆதியிலே இருக்கிறார் மற்றவைகள் எல்லாம் இப்பொழுது தோன்றியவைகள், தூதர்களும் தேவனால் உருவாக்கப்பட்டவர்களே.
சாத்தான் (சில நேரம் சாத்தான் அல்லது லூசிபர் என அழைக்கப்படுவான்) தேவனுக்கு எதிராகக் கலகம் செய்த ஒரு தூதன். அவன் தேவனுக்கு மட்டும் பகைஞன் அல்ல மனுகுலத்திற்கும் பகைஞனே, மற்றும் அவனுடைய வேலையாகிய கொல்லுதல், அழித்தல் மற்றும் அடிமைபடுத்துதலில் அவன் தளராதவன். நாம் கவனமாக இருக்கும் படியாக எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். “...ஏனெனில்இ உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.”1
தேவனுடைய வல்லமையோடு சாத்தானுடைய வல்லமையை ஒப்பிடும்போது அது நகைப்புக்குரியது. எனினும் அவன் மனிதனுக்கு நிஜமாகவே அச்சுருத்தலாக இருக்கிறான் மற்றும் மனிதனுடைய வாழ்க்கையை அழிக்கும் தன்மையுடயவனாக இருக்கிறான்.
சாத்தானுக்குப் பிரதானமான ஒரு தந்திரம் இருக்கிறது: நம்மை ஏமாற்றுவது. அவன் முழுத் தேசத்தையும், உலகத்தையும், தனிமனிதனையும் ஏமாற்ற பார்க்கிறான். உண்மையைத் திரிக்கிறான் அவனுடைய பொய்யில் வல்லமை இருக்கிறது.
டாக்டர். நேய்ல் அன்டர்சன் நுட்பமுடைய ஆழ்ந்த கருத்தை உருவாக்கியிருக்கிறார். வேதாகமம் சாத்தானை மூன்று வழிகளில் விளக்குகிறது என்று அவர் கூறுகிறார்.
- சோதனைக்காரன்
- குற்றம் சாட்டுபவன்
- பொய்க்கு பிதா
டாக்டர். அனட்ரூசன் சொல்கிறார், நான் உன்னைச் சோதிக்க வேண்டுமானால் அது உனக்குத் தெரியும். நான் உன்னைக் குற்றம் சாட்டவேண்டுமானல் அதுவும் உனக்குத் தெரியும் ஆனால் நான் உன்னை ஏமாற்ற வேண்டுமானால் அது உனக்குத் தெரியாது. சாத்தானுடைய வல்லமை அவனுடைய பொய்யில் இருக்கிறது. நீங்கள் பொய்யை எடுப்பீர்களானல் நீங்கள் வல்லமையை எடுக்கிறீர்கள்.
இங்குச் சில உதாரணங்களைக் காணலாம்.
தேவன் ஆதாம் ஏவாளை நாம் இன்று இருப்பது போலவே சுய சித்தத்தோடு தங்களுக்கு விருப்பமானதை செய்ய மற்றும் தீர்மானங்களை எடுக்கக் கூடியவர்களாகவே சிருஷ்டித்தார். ஏதேன் தோட்டத்தில் கனிகளைத் தரக்கூடிய நூற்றுக்கணக்கான மரங்கள் இருந்தன. தேவன் ஆதாம் ஏவாளுக்குக் கொடுத்த ஒரே ஒரு எச்சரிப்பு ஒரு மரத்திலுள்ள பழத்தை மட்டும் அவர்கள் சாப்பிட கூடாது என்பதே. இது பின்பற்றுவதற்கு ஏதுவான தெளிவான உபதேசம். இந்த மரத்தின் கனியை புசிக்கிற நாளிலே சாகவே சாவாய். இது போதுமானது.
ஆனால் “நீ சாகவே மாட்டாய் என்று கூறி சாத்தான் ஏவாளை வஞ்சித்தான். அதுவே முதலாவது பொய். இப்பொழுது மேலும் அவன் பொய்சொல்கிறான். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும்இ நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.”2
சாத்தான் ஏவாளை தேவன் உங்களுக்குக் கொடுக்காமல் சிறப்பான ஒன்றை மறைத்துவைத்திருக்கிறார் எனவே இந்தக் கனி அவர்களைத் தேவனைப் போலாக்கும் என்று கூறி ஏமாற்றினான். இது நற்செய்தி அல்ல. இதனில் உள்ள பிரச்சனை என்னவென்றால் இது உண்மையல்ல. ஆதாமும் ஏவாளும் தேவன் சொன்னதை விட்டுவிட்டு சாத்தானுடைய பொய்யை விசுவாசித்தனர். அது தவறான முடிவுக்குக் கொண்டு போய்விட்டது. இப்படிதான் சாத்தான் செயல்படுகிறான். அவன் உண்மையைத் திரித்து மனிதனுக்குத் தீங்கு செய்கிறான்.
மக்களைத் தேவனிடத்திலிருந்து பிரிப்பதே சாத்தானுடைய பெரிய ஆசையாகும். தேவன் இருக்கிறார் என்பதை மறுதலிக்கச் செய்தல், அவதூறு சொல்ல தேவனைக் குறித்துப் பொய் சொல்கிறான். உதாரணம் இங்கே பார்க்கலாம்.
தேவன் நம்மீது வைத்த அன்பை திரும்பத் திரும்ப உறுதிபடுத்துகிறார். “ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.”3 “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்லஇ அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து...”4 ...பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்...5” “தேவன்இ தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்குஇ அவரைத் தந்தருளிஇ இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”6
ஆனால் சாத்தான் என்ன சொல்கிறான்? “தேவன் உன்னை நேசிக்க வில்லை. உனக்கு இருக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் பார். தேவன் உன்னை நேசித்தாரேயானால் உனக்கு இப்படிப் பிரச்சனைகள் இருக்காது. நம்பும்படியாக இருக்கலாம்.
எல்லாருடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள் இருக்கிறது. இது வாழ்க்கையில் நிகழக்கூடியது. தேவன் நம்மிடத்தில் சொல்ல மறைப்பது என்னவென்றால் நாம் தேவனோடு ஐக்கியப்பட்டால் அவரைச் சார்ந்திருந்தால் தேவன் நம்மை அந்தப் பிரச்சனைகளுக்கு வழியை நடத்திச்செல்வார். உன்னுடைய பிரச்சனையை நீயே தாங்கவோ அல்லது தீர்த்துக்கொள்ளவோ வேண்டாம். உன் பிரச்சனைகள் மத்தியில் அதைக் கையாளுவதற்கான பலனை தேவன் தருவார். நாம் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது அவர் சொல்கிறார், “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்...”7 என்று. ஏன? எனென்றால் தேவனை நம்பலாம் என்று அப்பொழுது நமக்குத் தெரியும்.
தேவன் இல்லாமல் மனிதன் இவ் உலகத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கிறான். இது தேவனுடைய விருப்பம் அல்ல.
தேவனுடைய நற்பண்புகளைக் குறித்துச் சாத்தான் உங்களை ஏமாற்றுவது மட்டுமல்ல ஆனால் உங்களைப் பற்றித் தேவனிடத்திலும் அவன் அவதூறு கூறுகிறான். யோபுவுடைய வாழ்க்கையிலும் சாத்தான் இதைச் செய்தான். யோபு உபத்திரவப்பட்டால் அவன் தேவனை முகமுகமாய்த் தூசிப்பான் என்று சாத்தான் சொன்னான் ஆனால் அது நடக்கவில்லை. உங்களைத் தாழ்வுபடுத்த மற்றும் தேவனுக்கு முன் குற்றப்படுத்த வகைதேடுகிறான்.
அது மட்டுமல்ல. அவன் தன்னுடைய அவதூரையும் குற்றத்தையும் உங்கள் மீது சுமத்துகிறான்.
தேவனுக்கு நீங்கள் தேவையில்லை என்று உங்களை நம்பவைக்கிறான். நீங்கள் பரிசுத்தமாகவே ஜீவிக்க முடியாது. உன் அசிங்கமான வாழ்க்கை, உன்னுடைய தோல்விகள், நீ செய்தவைகள், நீ அடிமைப்பட்டிருக்கும் காரியம் ஆகிய அனைத்தையும் பார். தேவன் உன்னை ஏற்றுக்கொள்ளவே மாட்டார் அல்லது தேவனுக்கு நீ தேவையில்லை. உன்னால் முடியாது.”
மீண்டும் எல்லாம் பொய். தேவன் நம்மை ஏற்றுக்கொள்வதற்கு நாம் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமில்லை அல்லது அவரோடு ஐக்கியப்பட நாம் பாவமற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை என்று தேவன் தெளிவாக இருக்கிறார்.
“அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்”8 என்று இயேசு சாத்தானை குறித்துச் சொன்னார்.
தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆச்சரியமானதாக இருக்கிறது. “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும்இ அது பரிபூரணப்படவும் வந்தேன்”9 என்று இயேசு சொன்னார்.
இயேசு தம்மை விசுவாசித்தவர்களை நோக்கி: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்.”10
சாத்தானிடத்தில் ஏமாறுவதை விடத் தேவன் தன்னை, உங்கள் வாழ்க்கையை மற்றும் ஐக்கியத்தைக் குறித்துக் கூறும் உண்மையை அறித்துக்கொள்ளச் சாத்தியம் இருக்கிறது. சாத்தான் தன்னுடைய ஏமாற்றத்தினால் உங்களை அடிமைபடுத்த நினைக்கும் போது சுதந்திரத்தோடு உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கச் சாத்தியம் என்ன என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
மேலும் குற்றம் சாட்டுகிறவன் மற்றும் பொய்யனான சாத்தான் அவனுடைய பொய்யின் மூலம் மக்களை அடிமைதனத்திற்கும் கெட்டபழக்கத்திற்கும் அடிமைபடுத்துகிறான். “போய்த் தொடர்ந்து செய். மீண்டும் ஒரு முறை செய்வதன் மூலம் அது உனக்குத் தீங்கு விளைவிக்காது. யாருக்கும் தெரியாது. நீ உண்மையில் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. நீ சந்தோஷமாக இருப்பாய்.”
நீங்கள் தேவனோடு ஐக்கியப்படத் தீர்மானித்தால், நீங்கள் சாத்தானால் சோதிக்கப்படலாம். ஆனால் நீங்கள் விரும்பும் தீர்மானத்தை எடுக்க இன்னும் உங்களுக்குச் சுய சித்தம் இருக்கிறது. மேலும், பல சூல்நிலைகளில் எது உண்மை மற்றும் சாத்தானுடைய பொய்க்கு குறைவான முக்கியதுவம், குறைவான சந்தோஷம், குழப்பம் அல்லது பயம் ஆகியவை ஏற்படலாம். இதன் மத்தியில் தேவன் உதவி செய்கிறார்.
“மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல்இ சோதனையைத் தாங்கத்தக்கதாகஇ சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.”11 என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
தேவனுடைய அன்பை அனுபவிக்கும் படி தேவன் உங்களோடு ஐக்கியப்பட விரும்புகிறார். அவர் நீங்கள் இருளில், குழப்பத்தில் வாழ அல்ல ஆனால் உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவே உங்களைச் சிருஷ்டித்திருக்கிறார். “மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்இ என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.”12
நீங்கள் எப்பொழுதாவது இப்படிபட்ட ஐக்கியத்தைத் தேவனோடு ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று கேட்டிருக்கிறீர்களா? இது விளங்குகிறது: தனிப்பட்ட முறையில் தேவனை அறிந்துக்கொள்ளுதல்.
► | கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி? |
► | எனக்கு ஒருக் கேள்வி உண்டு... |
(1) 1பேதுரு 5:8 (2) ஆதியாகமம் 3:4,5 (3) ஏரேமியா 31:3 (4) 1யோவான் 4:10 (5) 1 யோவான் 3:1 (6) யோவான் 3:16 (7) யோவான் 14:27 (8) யோவான் 8:44 (9) யோவான் 10:10 (10) யோவான் 8:31 (11) 1கொரிந்தியர் 10:13 (12) யோவான் 8:12